அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக பா.ஜ., தலைவர் யார்? : ஜன., 5ல் மேலிட குழு கருத்து கேட்பு

Updated : டிச 26, 2019 | Added : டிச 24, 2019 | கருத்துகள் (12)
Advertisement
தமிழக, பா.ஜ., தலைவர்,  ,ஜன., 5 ,மேலிட குழு, கருத்து,கேட்பு

சென்னை :தமிழக பா.ஜ., தலைவரை தேர்வு செய்வதற்காக, மாநில நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்க, மேலிடப் பார்வையாளர்கள், ஜனவரி, 5ல் தமிழகம் வர உள்ளனர்.


நியமிக்கப்படவில்லை

தமிழக பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை, செப்டம்பர் மாதம், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.அவருக்கு பின், தமிழக பா.ஜ.,விற்கு, தலைவர் நியமிக்கப்பட வில்லை.முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலர் எச்.ராஜா, இளைஞர் அணி துணைத் தலைவர் முருகானந்தம், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன், கே.டி.ராகவன் உட்பட பலரும், மாநில தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

ஒவ்வொருவரும் தலைவர் பதவியை பிடிக்க, தனித்தனியே காய் நகர்த்தலில் ஈடுபட்டனர். ஆனால், கட்சியின் தேசிய தலைமை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சி அமைப்பு தேர்தல் முடிந்த பின், மாநில தலைவர் தேர்வு செய்யப்படுவார் என, அறிவிக்கப்பட்டது.


தகவல்

கட்சி அமைப்பு தேர்தல் நிறைவு பெற உள்ள நிலையில், ஜனவரியில், புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என, தகவல் வெளியானது.இந்நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து, பா.ஜ., மாநில நிர்வாகிகள், கோட்ட பொறுப்பாளர்கள் ஆகியோரை சந்தித்து, கருத்து கேட்பதற்காக, பா.ஜ., பொதுச்செயலர் ஜெயபிரகாஷ் தலைமையில், தேசிய நிர்வாகிகள், ஜன., 5ம் தேதி, சென்னை வருகின்றனர்.

அவர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் கோட்ட பொறுப்பாளர்களை, தனியே சந்தித்து, அவர்களின் கருத்துக்களை கேட்டு, தேசிய தலைமைக்கு அறிக்கை அளிக்க உள்ளனர். அதன் அடிப்படையில், புதிய தலைவரை, தேசிய தலைமை நியமிக்கும் என, பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
25-டிச-201918:52:05 IST Report Abuse
வெகுளி யாரை பற்றி திருட்டு மதவியாபாரிகள் ஓயாமல் புலம்புகிறார்களோ அவரே சரியான நபர்.....தமிழக பா.ஜ. தலைவர்னா அது ராஜா தான்....
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
25-டிச-201915:25:07 IST Report Abuse
pradeesh parthasarathy ராஜேந்திர பாலாஜியையோ இல்லை எச்.ராஜாவையோ நியமியுங்கள் ... யாரும் கிடைக்கலன்னா சுப்ரமணியஸ்வாமியை நியமியுங்கள் ...
Rate this:
Share this comment
Cancel
Adirai Azagan - Doha,கத்தார்
25-டிச-201913:59:34 IST Report Abuse
Adirai Azagan இதற்கெல்லாம் தேட வேண்டிய அவசியமே இல்லை. கூட்டணி வசமே நிறைய அதிமேதாவிகள் (தெர்மோகூல் விஞ்ஞானி) உள்ளனர்.அதில் யாரையாவது பரிந்துரை செய்தால் தமிழகத்தில் தாமரை மலர்வதற்கு புதிய உத்திகள்,யோசனைகள் தருவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X