அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொசுக்களை காட்டி கோடி கோடியாய் கொள்ளை :அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

Added : டிச 24, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
கொசுக்களை காட்டி  கோடி கோடியாய் கொள்ளை :அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை :'கொசுக்களை காட்டி கோடிகோடியாய் கொள்ளை அடித்துள்ளனர்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள 'வீடியோ' பதிவு:தமிழகத்தில் 2016ல் நடக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் தற்போது தான் நடக்கிறது. தமிழகத்தில் இதுவரை ஊராட்சி நகராட்சி மாநகராட்சி என எல்லா இடங்களிலும் ஒரே சமயத்தில் தான் உள்ளாட்சி தேர்தல் நடந்துள்ளது.தற்போது ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் என்கின்றனர். நகரங்களுக்கு எப்போது தேர்தல் நடத்துவர் என தெரியாது; நடத்துவரா என்பதும் தெரியாது.எல்லா இடங்களிலும் குடிநீர் வசதி போக்குவரத்து வசதி சாக்கடை வசதி சரியாக இல்லை. டெங்கு மலேரியா என ஏகப்பட்ட நோய்கள் பரவுகின்றன.இவற்றை தடுப்பதற்கு பதிலாக கொசுக்களை காட்டி கோடி கோடியாக கொள்ளை அடித்துள்ளனர். கருணாநிதி ஆட்சியில் அரிசி கரும்பு மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி தொழில் வளர்ச்சி என பலவகையிலும் தமிழகம் முதலிடத்தில் இருந்தது.தற்போது ஊழலில் லஞ்சத்தில் டெங்கு காய்ச்சலில் காசநோயில் முதலிடத்தில் உள்ளது.முதல்வர் துணை முதல்வர் அமைச்சர்கள் என பலர் மீதும் ஊழல் புகார்கள். விசாரணைகள் வழக்குகள் என தமிழக அமைச்சரவையே 'கிரிமினல் கேபினட்' ஆக இருக்கிறது.எனவே ஊழலாட்சிக்கு முடிவு கட்ட உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளியுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nanban - karaikudi,இந்தியா
25-டிச-201908:37:04 IST Report Abuse
Nanban 1974 -75 களில் உன் அப்பன் முதல்வராக இருக்கும் போது எவ்வளவு காசு கொடுத்தாலும் அரிசி கிடைக்காது தெரியுமா, உனக்கு எப்படி தெரியும் உன் அப்பன் ஊரில் யார் கஷ்டப்பட்டாலும் தான் பிள்ளைகள் கஷடப்படக்கூடாது என்றுதான் வளர்த்தான் , அந்த சமயத்தில் பெரிய பணக்கார வீட்டில் கூட கோதுமை அல்லது சோளம் தான் பாவிக்க முடியும் டிஹெரியுமா தம்பி.
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
25-டிச-201906:25:14 IST Report Abuse
natarajan s இவரது அப்பா விளை நிலங்களுக்கு aerial spray மூலம் பூச்சி மருந்து அடித்தேன் என்று லட்சங்களில் ஊழல் செய்தார் , இவர்கள் பணவீக்கம் காரணமாக கோடிகளில் , அவளவுதான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X