இறுதிக்கட்ட தீர்வு மனு தாக்கல்; 'நிர்பயா' குற்றவாளிகள் அறிவிப்பு

Updated : டிச 25, 2019 | Added : டிச 25, 2019 | கருத்துகள் (27)
Share
Advertisement
புதுடில்லி: 'நிர்பயா' வழக்கில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு பேரில், மூன்று பேர், 'ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவதற்கு முன்,எங்களுக்கு, உச்ச நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட தீர்வு காணும் மனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது' என, தெரிவித்துள்ளனர்.டில்லியில், 2012ம் ஆண்டு, 23 வயதான மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில், ஆறு பேர் கொண்ட கும்பலால், பலாத்காரம்
nirbhaya,delhi_gang_rape,SupremeCourt,hang,நிர்பயா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: 'நிர்பயா' வழக்கில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு பேரில், மூன்று பேர், 'ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவதற்கு முன்,எங்களுக்கு, உச்ச நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட தீர்வு காணும் மனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது' என, தெரிவித்துள்ளனர்.

டில்லியில், 2012ம் ஆண்டு, 23 வயதான மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில், ஆறு பேர் கொண்ட கும்பலால், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இவரது பெயர் வெளியிடப்படாததால், ஊடகங்கள், அந்த மாணவிக்கு, 'நிர்பயா' என, பெயர் வைத்தன. இந்த வழக்கில், ஒரு சிறுவன் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். சிறுவனுக்கு சிறார் நீதி சட்டப்படி, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மற்ற ஐந்து பேரில், ஒருவர், திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மற்ற நான்கு பேருக்கும், விசாரணை நீதிமன்றம் விதித்த துாக்கு தண்டனையை, டில்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. இதை எதிர்த்து, நான்கு பேரும் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களையும், உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.


latest tamil news



இதையடுத்து, குற்றவாளிகள் நான்கு பேரும், 'ஏழு நாட்களில், ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்ய உள்ளனரா' எனக் கேட்டு, திஹார் சிறை அதிகாரிகளுக்கு, டில்லி நீதிமன்றம், கடந்த, 18ம் தேதி, 'நோட்டீஸ்' அனுப்பியது. ஏழு நாட்களுக்குள், ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்வது பற்றி, நான்கு பேரிடமும் திஹார் சிறை அதிகாரிகள் கருத்து கேட்டனர்.

குற்றவாளிகள் நான்கு பேரில், மூன்று பேர் அளித்துள்ள பதிலில், 'எங்களுடைய சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கலாம். 'ஆனால், ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்வதற்கு முன், உச்ச நீதிமன்றத்தில், இறுதிக் கட்ட தீர்வு காணும் மனு தாக்கல் செய்ய, எங்களுக்கு வாய்ப்பு உள்ளது; அந்த மனுவை தாக்கல் செய்வது பற்றி ஆலோசித்து வருகிறோம்' என, தெரிவித்துள்ளனர்.

இது பற்றி, திஹார் சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஏழு நாட்களுக்குள், ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்கிறார்களா என பார்ப்போம்; இல்லாவிடில் அது பற்றி, நீதிமன்றத்திடம் தெரிவிப்போம்' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.Guna Sekaran - Madurai,இந்தியா
25-டிச-201919:51:01 IST Report Abuse
M.Guna Sekaran டில்லியில், 2012ம் ஆண்டு, நடந்த பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார் இதை இன்னும் விசாரிக்கும் இந்திய அரசு தான் முதல் குற்ற்வாளி ,இன்னும் தீர்ப்பு வழங்கி தூக்கில் எடாமல் சட்டம் வேடிக்கை பர்ப்பது மனித உரிமை கலகத்துக்கு சவால் போல இருக்கு
Rate this:
Cancel
25-டிச-201917:54:04 IST Report Abuse
Prasanna Krishnan Why still these live? kill those
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
25-டிச-201917:36:07 IST Report Abuse
Swaminathan Chandramouli இவர்கள் இப்போதைக்கு தூக்கில் இடப்பட்ட மாட்டார்கள் கருணைமனு, சீராய்வு மனு , இறுதிக்கட்ட மனு என்று இவர்களை யாரோ முகம் தெரியாத வக்கீல்கள் திசை திருப்பி நீதி மன்றங்களை முட்டாளாக்க பார்க்கிறார்கள் . இவர்களையும் என் கவுன்டரில் போட்டு தள்ளவேண்டும்
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
25-டிச-201920:04:37 IST Report Abuse
Sanny அந்த வக்கில்களையும் சேர்த்து போடணும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X