வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ராஜ்யசபா எம்.பி.,க்களில், பாமக அன்புமணி ராமதாஸ் தான் , பார்லிமென்ட் பக்கமே அதிகம் தலை வைத்து படுக்காதவர் என்ற புள்ளி விபரம், அவரது கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

"அன்புமணி எனும் நான்" என்ற முழக்கத்துடன் தமிழக சட்டசபை தேர்தலின் போது தனியாக பட்ஜெட், தனது சாதனைகள் ஆகியவற்றை வெளியிட்டு ஓட்டு கேட்டவர் பாமக அன்புமணி. இதன் மூலம் மற்ற அரசியல்வாதிகளில் இருந்து தன்னை வித்தியாசமானவராக காட்டிக்கொண்டார். இதனால் படித்தவர்கள் மத்தியில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
தற்போது அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக.,விற்கு ஒரு ராஜ்யசபா பதவி ஒதுக்கப்பட்டது. இதில் போட்டியின்றி எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார் அன்புமணி. இந்நிலையில் பார்லி.,யின் இரு அவைகளிலும் உள்ள எம்.பி.,க்களின் செயல்பாடுகள் குறித்த விபரம் அந்தந்த அவை இணையதளத்தில் வெளியிடப்பட்துள்ளது.
இதில் தமிழக எம்.பி.,க்களில் மிக மோசமாக செயல்பட்ட எம்.பி.,யாக அன்புமணியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இவர் 15 சதவீதம் மட்டுமே அவை செயல்பாடுகளில் பங்கேற்றுள்ளார். இந்த ஆண்டு வெறும் 2 விவாதங்களின் போது மட்டுமே அவையில் இருந்துள்ளார். அப்போதும் எந்த கேள்வியையும் கேட்வில்லை. தனிநபர் மசோதாவையும் கொண்டு வரவில்லை.

இதே போன்று லோக்சபாவில் குறைந்த செயல்பாட்டை கொண்ட எம்.பி.,யாக திமுக.,வின் ஜெகத்ரட்சகன் உள்ளார்.. இவர் 46 சதவீதம் அவை செயல்பாட்டில் பங்கேற்றுள்ளார். லோக்சபாவில் தமிழக எம்.பி.,க்கள் 39 பேர் இருந்தும் 3 பேர் மட்டுமே 100 சதவீதம் அவை செயல்பாட்டில் கலந்து கொண்டுள்ளனர். 9 பேர் 90 சதவீதத்திற்கும் அதிகமாக அவைக்கு சென்றுள்ளனர். இவர்களில் 26 பேர் முதல் முறையாக எம்.பி.,யாக தேர்வானவர்கள்.
தமிழக எம்.பி.,க்களில் அதிகபட்சமாக 42 விவாதங்களில் பங்கேற்ற எம்.பி.,யாக அதிமுக.,வின் ரவீந்திரநாத் குமார் உள்ளார். இவர் 79 சதவீதம் அவை செயல்பாட்டில் பங்கேற்றுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE