சச்சினின் பாதுகாப்பு ரத்து; மஹா., அரசு முடிவு

Updated : டிச 25, 2019 | Added : டிச 25, 2019 | கருத்துகள் (12) | |
Advertisement
மும்பை : பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டு வந்த 'எக்ஸ் ' பிரிவு பாதுகாப்பை மஹாராஷ்டிரா மாநில அரசு வாபஸ் பெற்று கொண்டது. அதேநேரத்தில், முதல்வர் உத்தவின் மகன் ஆதித்யா தாக்கரேவின் பாதுகாப்பு 'ஒய் பிளஸ்' பிரிவிலிருந்து ' இசட்' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எக்ஸ்' பிரிவு பாதுகாப்பில் இருந்த
சச்சின், டெண்டுல்கர், சச்சின் டெண்டுல்கர், பாதுகாப்பு, மஹாராஷ்டிரா, ஆதித்யா தாக்கரே, மஹா., sachin, sachin tendulkar, tendulkar, seurity, maharastra,  adhitya thackeray,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை : பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டு வந்த 'எக்ஸ் ' பிரிவு பாதுகாப்பை மஹாராஷ்டிரா மாநில அரசு வாபஸ் பெற்று கொண்டது. அதேநேரத்தில், முதல்வர் உத்தவின் மகன் ஆதித்யா தாக்கரேவின் பாதுகாப்பு 'ஒய் பிளஸ்' பிரிவிலிருந்து ' இசட்' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எக்ஸ்' பிரிவு பாதுகாப்பில் இருந்த டெண்டுல்கருடன் 24 மணி நேரமும், போலீஸ்காரர் பாதுகாப்பில் இருப்பார். தற்போது அந்த பாதுகாப்பு திரும்ப பெற்று கொள்ளப்படுகிறது. அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படலாம். சிவசேனா எம்.எல்.ஏ.,வும் முதல்வரின் மகனுமான ஆதித்ய தாக்கரேவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு 'ஒய்' பிரிவிலிருந்து ' இசட்' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.


latest tamil news
பா.ஜ., மூத்த தலைவர் ஏக்நாத் காட்சேவுக்கு வழங்கப்பட்டு வந்த 'ஒய்' பிரிவு பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. உ.பி., முன்னாள் கவர்னர் ராம்நாயக்கிற்கு வழங்கப்பட்டு வந்த ' இசட் பிளஸ்' பாதுகாப்பு 'எக்ஸ்' பிரிவுக்கு மாற்றப்படுகிறது. வழக்கறிஞர் உஜ்வால் நிஜாமுக்கு வழங்கப்பட்ட 'இசட் பிளஸ் ' பாதுகாப்பும் 'ஒய்' பிரிவுக்கு மாற்றப்படுகிறது. சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு வழங்கப்பட்டு வந்த 'ஒய்' பிரிவு பாதுகாப்பு 'இசட்' பிரிவாக அதிகரிக்கப்படுகிறது.

விஐபிகளுக்கான அச்சுறுத்தல் தொடர்பாக நடந்த ஆய்வுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த குழு, ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒரு முறையும் கூடி ஆலோசனை நடத்தும். உளவுத்துறை, போலீஸ் ஸ்டேசன்களில் இருந்து கிடைக்கும் தகவல் அடிப்படையில் பாதுகாப்பு குறித்து முடிவு செய்யப்படும் . 97 நபர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், 29 பேரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது அல்லது குறைக்கப்பட்டுள்ளது. 16 பேரின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
25-டிச-201921:25:36 IST Report Abuse
vbs manian மக்களின் வரிப்பணத்தை கோடி கணக்கில் மத்திய மாநில அரசுகள் தண்ட செலவு செய்யும் விஷயங்களில் இதுவும் ஒன்று.
Rate this:
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
25-டிச-201919:48:02 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam Now only we come to know that a special security was given to Sachin. Why should an Z category for Aadithya? His party can strange for his safety.
Rate this:
Cancel
Saravanan - Male,மாலத்தீவு
25-டிச-201919:41:19 IST Report Abuse
Saravanan அடுத்த தேர்தலில் கண்டிப்பா அனுபவிப்பீங்க Mr.உத்தவ் தாக்ரே.. பாரத ரத்னா விருது வாங்கிய எங்கள் தலைவர் எங்கே ஒண்ணுமே செய்யாத உங்கள் மகன் எங்கே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X