மோடிக்கு கோயில் கட்டி வழிபடும் பா.ஜ. தொண்டர்

Updated : டிச 25, 2019 | Added : டிச 25, 2019 | கருத்துகள் (88) | |
Advertisement
திருச்சி: திருச்சியில் பா.ஜ., தொண்டர் ஒருவர், பிரதமர் மோடிக்கு கோயில் கட்டி, அவரது சிலையை வைத்து வழிபட்டு வருகிறார்.திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் 50, விவசாயியான இவருக்கு திருமணமாகி பானுமதி என்ற மனைவியும் தீபா என்ற மகளும், சதீஷ்குமார், சூர்யா ஆகிய 2 மகன்களும் உள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக பா.ஜ., தொண்டராக உள்ள சங்கர் தனது சொந்த
பிரதமர் மோடி, திருச்சி, கோயில், சிலை, பா.ஜ., பாஜ, தொண்டர்,  PM Modi, temple, tiruchy, statue,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருச்சி: திருச்சியில் பா.ஜ., தொண்டர் ஒருவர், பிரதமர் மோடிக்கு கோயில் கட்டி, அவரது சிலையை வைத்து வழிபட்டு வருகிறார்.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் 50, விவசாயியான இவருக்கு திருமணமாகி பானுமதி என்ற மனைவியும் தீபா என்ற மகளும், சதீஷ்குமார், சூர்யா ஆகிய 2 மகன்களும் உள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக பா.ஜ., தொண்டராக உள்ள சங்கர் தனது சொந்த செலவில் பிரதமர் மோடிக்கு கோயில் கட்டி சிலை வைத்து வழிபட வேண்டும் என்று விரும்பினார். அதனால், துறையூரை அடுத்த எரகுடியில் உள்ள தனது விவசாய நிலத்தில் கோயில் கட்டி, மோடிக்கு சிலை அமைத்துள்ளார்.



latest tamil news




பா.ஜ. தொண்டராகவும், எரகுடி விவசாய சங்க தலைவராக இருந்து வரும் சங்கர் கூறியதாவது:-
வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு, சொந்த ஊருக்கு வந்து விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். படிப்பறிவு இல்லாத நான், என் மகள் மற்றும் மகன்களை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினேன். பிளஸ் 2 தேர்வில் 1105 மதிப்பெண் பெற்றும், டாக்டருக்கு படிக்க சீட் கிடைக்காமல் மகள் இன்ஜினியரிங் படித்து வருகிறார். பிரதமர் மோடி கொண்டுவந்த நீட் தேர்வு, ஏழை மாணவர்களுக்கு டாக்டர் கனவை நனவாக்கும். இதேபோல், ஏழை விவசாயிகளுக்கான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.


latest tamil news



அதனால், மோடியின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக , விவசாயத்தில் கிடைத்த ஓரளவு பணத்தை கொண்டு, கோயில் கட்டும் பணியை 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கினேன். தற்போது, கோயில் கட்டி முடித்து விட்டேன். கட்சியின் மூத்த தலைவர்களை கொண்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தல் முடிந்தபின், கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டுளேன். அரசியலை கடந்து மோடி நல்ல மனிதர். அவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்த கோயிலை கட்டி உள்ளேன். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaduvooraan - Chennai ,இந்தியா
26-டிச-201911:07:56 IST Report Abuse
Vaduvooraan அந்நிய ஆட்சி தொடர வேண்டி அனைத்து உதவிகளையும் நல்கி தனது கட்சியின் நட்சத்திர பேச்சாளார்களையும், நாளிதழையும் மாட்சிமை தாங்கிய ராணியாரின் அரசுக்கு குத்தகை விட முயற்சி செய்தவர்கள் ஜின்னாவுடன் தொடர்பு கொண்டு தனி நாடு கோரிக்கையை ஆதரிக்கிறோம் அது போல நீங்களும் எங்களது திராவிடஸ்தான் பிரிவினைக்கு உதவி செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதியவர்கள் தமிழையும் அதன் மகுடத்தில் ஒளிரும் சிலப்பதிகாரத்தையும் படு கேவலமாக விமரிசித்தவர்கள் கீழவெண்மணி சம்பவத்துக்கு காரணமான நிலச்சுவான்தார் தங்கள் இனத்தை சார்ந்தவர் என்பதற்காக, உயிரோடு எரிக்கப்பட்ட தலித் மக்களை குறை கூறி அறிக்கை விட்டவர்கள் பெண்ணுக்கு கற்பு என்பதே தேவையில்லை குடும்பம் என்ற அமைப்பு பயனில்லாதது கட்டுப்பாடின்றி யார் யாரை வேண்டுமானாலும் ...லாம் என்று மூளைச்சுரப்பில் உதித்த புரட்சி கருத்தை வெட்கமில்லாமல் பறை சாற்றியவர்கள் ....இவர்களுடைய தலைவருக்கே ஒவ்வொரு நாற்சந்தியிலும் சிலை வைத்து,... தொடங்கி கோளரங்கம் வரை எல்லாவற்றுக்கும் அவரது பெயரை வைக்கும் தமிழ் நாட்டில் எங்கோ ஒரு மூலையில் பிரதமரிடம் தனக்கு இருக்கும் ஈடுபாட்டை காட்ட சொந்த இடத்தில சொந்த செலவில் பிரதமருக்கு கோவில் கட்டி இருக்கும் இந்த விவசாயியை எதற்கு விமரிசனம் செய்ய வேண்டும்?
Rate this:
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
26-டிச-201910:49:58 IST Report Abuse
Vaduvooraan கான்பூரில் ரெண்டு வாரம் முன்னாடி கங்கை கரையில் பிரதமர் கால் தடுக்கி விழ இருந்தார் என்ற செய்திக்கு தங்களது மகிழ்ச்சியை தெரிவித்த சிறுமதியாளர்கள் இருக்கும் நாட்டில் தனது அபிமானத்தை வெளிப்படுத்தும் இந்த விவசாயியின் செயல் முன் சொன்ன கோஷ்டிகளின் எரிச்சலை இன்னும் அதிகரிக்க செய்யும். ஆனால் அவரது நிலத்தில் சொந்த செலவில் கோவில் கட்டி இருக்கிறார். தேச விரோதத்தையே தனி நபர் சுதந்திரம், ஜனநாயக உரிமை என்று நியாப்படுத்துபவர்கள் இதையும் ஏன் அப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது ?
Rate this:
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
26-டிச-201910:33:04 IST Report Abuse
Amal Anandan அட பிஜேபி ஆளுங்களும் இதே வகைதான். தனி மனித ஆராதனை. சபாஷ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X