சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செல்லாத நோட்டுகளுடன் தவிக்கும் கோவை மூதாட்டி

Added : டிச 26, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
 செல்லாத நோட்டுகளுடன் தவிக்கும் கோவை மூதாட்டி

அன்னுார்:கோவை அருகே செல்லாத, 31 ஆயிரத்து 500 ரூபாயை வைத்துக் கொண்டு மூதாட்டி தவிப்புக்கு உள்ளாகியுள்ளார்.

கோவை மாவட்டம், கோவில்பாளையம் அடுத்த கொண்டையம்பாளையத்தில் வசிப்பவர் கமலம்மாள். 92. இவருடைய கணவர் இறந்து விட்டார். மகன் மற்றும் இரண்டு மகள்களின் பராமரிப்பில் உள்ளார்.கமலம்மாள், சில ஆண்டுகளுக்கு முன் சிறிது சிறிதாக பணம் சேமித்து, அவற்றை பீரோவில் வைத்துள்ளார். அதில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஆறும், 500 ரூபாய் நோட்டுகள் 51 ம் உள்ளன. இவை, 31 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ளவை.

மூன்று ஆண்டுகளுக்கு முன் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, குடும்பத்தினர் இவரிடம் பணம் உள்ளதா என்று கேட்டபோது முதுமை காரணமாக இல்லை என்று கூறியுள்ளார்.இந்நிலையில் இருநாட்களுக்கு முன், குடும்பத்தினர், கமலம்மாளின் பீரோவை சுத்தப்படுத்திய போது, அதில் ஒரு புடவைக்கு கீழே மதிப்பிழந்த, 31 ஆயிரத்து 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

வயதான காலத்தில் தனக்கு பயன்படும் என்று சேமித்து வைத்த மூதாட்டியின் பணத்தை தற்போது மாற்ற முடியாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இது குறித்து, இவரது மகன் கோபால் கோவை கலெக்டரிடம் மனு வழங்க திட்டமிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharathanban Vs - tirupur,இந்தியா
26-டிச-201917:08:17 IST Report Abuse
Bharathanban Vs நடிகர் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சண்முகம் என்பவர் பாட்டிக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார்.. அவருக்கு நன்றி
Rate this:
Cancel
இந்திய புலி - Tirunelveli,இந்தியா
26-டிச-201912:57:44 IST Report Abuse
இந்திய  புலி இது ஒரு பிரச்சனையே இல்லை. பழங்கால பொருட்களை, நாணயங்களை, பணத்தாள்களை சேகரிப்போரிடம் இதனை கொடுத்து இந்த தொகையை விட அதிகமாகவே வாங்கலாம்.
Rate this:
Cancel
26-டிச-201911:00:17 IST Report Abuse
ஸாயிப்ரியா தொகை குறைவு. இல்லை என்றால் சினேகிதி உதவியிருப்பார். நல்லவர் யாராவது இந்த முதுமை பெண்ணிற்கு உதவவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X