பொது செய்தி

இந்தியா

ஜி.எஸ்.டி., முறைகேட்டில் 'ஜான்சன் அண்ட் ஜான்சன்'; ரூ.230 கோடி அபராதம்

Updated : டிச 26, 2019 | Added : டிச 26, 2019 | கருத்துகள் (15)
Advertisement
GST,NAA,JohnsonandJohnson,GoodsandServices,Tax,Johnson&Johnson,ஜிஎஸ்டி,அபராதம்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ஜி.எஸ்.டி., வசூலில் முறைகேட்டில் ஈடுபட்ட 'ஜான்சன் அண்ட் ஜான்சன்' நிறுவனத்துக்கு ரூ.230 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2017 ஜூலை, 1 முதல், ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம், நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. மறைமுக வரிகளை எல்லாம் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.டி.,யானது வரி விதிப்பு முறையில் புரட்சிகரமான முயற்சியாக கருதப்பட்டது. பல்வேறு அடுக்குகளில் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டன.

இந்நிலையில், ஜி.எஸ்.டி., வரிவிகிதத்தில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களை நுகர்வோருக்கு கடத்தாமல், 'ஜான்சன் அண்ட் ஜான்சன்' நிறுவனம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த நவ.,15, 2017 முதல், அந்நிறுவனத்தின் சில தயாரிப்புகளுக்கான ஜி.எஸ்.டி., வரி, 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஜி.எஸ்.டி விகிதக்குறைப்பின் பலனை நுகர்வோருக்குக் கடத்தாமல் மோசடி செய்ததை என்.ஏ.ஏ.,(National Anti-profiteering Authority) அமைப்பு கண்டுபிடித்தது. இதனையடுத்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு, ரூ.230 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.





இதேபோன்ற குற்றச்சாட்டுக்காக நெஸ்லே இந்தியா நிறுவனத்துக்கு, இம்மாத துவக்கத்தில், ரூ.90 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chandkec - singapore,சிங்கப்பூர்
26-டிச-201916:44:00 IST Report Abuse
chandkec இந்த மாதிரி கம்பெனிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். பொருள் விலை போகாவிட்டால் நாட்டில் நேர்மையாக செயல் பட வாய்ப்பு உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
26-டிச-201914:18:39 IST Report Abuse
Selvaraj Thiroomal ஆட்டோ பார்ட்ஸ் தொழிலில் உள்ள பெருநிறுவனங்கள் ஜிஎஸ்டி அமலாவதற்கு மூன்று மாதங்கள் முன்பே சிறிது சிறிதாக விலைகளை ஏற்றி வரிகள் குறைக்கப்பட்ட எந்தப் பொருளும் விலைமாறாமலும் சற்றே உயர்த்தியும் விற்றார்கள். அணைத்து துறைகளும் இதைத்தான் கடைபிடித்தன. தவறுதான் என்றாலும் பல்வேறு குளறுபடிகளும் விற்பனைக்குறைவும் ஏற்பட்ட அக்காலத்தில் இதன்மூலம் கிடைத்த பணம் ஓரளவு லாபத்தை கொடுத்திருக்கலாம். எக்ஸைஸ் வரிக்கு முந்தைய நிலையில் உள்ள விலைபட்டியலை இன்று ஆராய்ந்தால் அணைத்து நிறுவனங்களும் இதை செய்தது வெளிச்சமாகும்...ஆனால் இன்றைய பொருளாதார சரிவு சூழ்நிலை இதுபோன்ற அபராதங்களுக்கு உகந்த காலமில்லை.. அவசரக்கோலத்தில் அள்ளித்தெளித்த ஜி எஸ் டி ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கப்பட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
26-டிச-201914:12:46 IST Report Abuse
unmaitamil கம்பெனி கிருத்துவ கம்பெனி. அதற்கு அபராதமா ??? இது RSS ன் தூண்டுதல். மோடி ஒலிக.... RSS ஒலிக அப்படீன்னு திராவிட விஷங்கள் கூட்டம் இன்னும் கூவலையா ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X