பொது செய்தி

இந்தியா

நிர்வாகத்தில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு தகவல்

Updated : டிச 26, 2019 | Added : டிச 26, 2019 | கருத்துகள் (107)
Advertisement
தமிழகம், நிர்வாகத்துறை, மத்திய அரசு, முதலிடம், Tamil nadu, TN, central government, union government,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி ; பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் அடிப்படையில், நிர்வாக திறனில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய நல்லாட்சி தினத்தை முன்னிட்டு, மத்திய அரசு நிர்வாகத்திறன் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில், நிர்வாகத் திறனில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. 2வது இடத்தில் மஹாராஷ்டிரா, 3வது இடத்தில் கர்நாடகா, 4வது இடத்தில் சத்தீஸ்கர், 5வது இடத்தில் ஆந்திரா, 6வது இடத்தில் குஜராத், 7 வது இடத்தில் ஹரியானா, 8 வது இடத்தில் கேரளா 9வது இடத்தில் மத்திய பிரதேச, 10வது இடத்தில் மே.வங்கம், 11வது இடத்தில் தெலுங்கானா, 12வது இடத்தில் ராஜஸ்தான், 13வது இடத்தில் பஞ்சாப், 14வது இடத்தில் ஒடிசாவும், 15வது இடத்தில் பீஹார், 16வது இடத்தில் கோவா, 17 வது இடத்தில் உ.பி., 18 வது இடத்தில் ஜார்க்கண்ட் உள்ளன.






மேலும், பொது மக்கள் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம், முதலிடத்தையும், பொது சுகாதாரத்துறையில் 2வது இடத்தையும், சுற்றுச்சூழலில் 3வது இடத்தையும், வேளாண்மையில் 9வது இடத்தையும், வணிகத்தில் 14வது இடத்தையும், மனித வள மேம்பாட்டில் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. பெரிய மாநிலங்கள் பட்டியலில், பொருளாதார துறையில் 5வது இடத்தையும், நீதி, சட்டம் ஒழுங்கு, பொது மக்கள் பாதுகாப்பு ஆகிய துறைகளிலும், நல்லாட்சி நடக்கும் மாநிலங்களிலும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
27-டிச-201910:16:44 IST Report Abuse
Sampath Kumar தேர்தல் சமயத்தில் அறிக்கை விட்டு ஆதாயம் தேட பார்க்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
27-டிச-201903:53:21 IST Report Abuse
Ray பஞ்சாயத்து தேர்தலுக்கு பிட்நோடீஸ்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
27-டிச-201900:49:34 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் சொல்றாரு பல்கலைக்கழக நிர்வாகம் சரியில்லே, ஊழல் பயங்கரமா இருக்குன்னு. 55% ஊழல் நிர்வாகம்ன்னு எச் ராஜா சர்மா சொல்லாத நாளில்லை. உலகில் சாலை விபத்தில் முதலிடம் இந்தியா, அதில் முதலிடம் தமிழ்நாடு. டெங்குவில் முதலிடம், சாக்கடை திட்டங்களில் 50,000 கோடி ஊழல். சகோதரியின் ஊழல் சொத்து மதிப்பு 30,000 கோடி, கணக்கில் தெரிவது மட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X