பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு அளிக்க லண்டனில் இருந்து சொந்த ஊர் வந்தவர்

Added : டிச 26, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
உள்ளாட்சி தேர்தல், லண்டன், புதுக்கோட்டை,ஆலங்குடி

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்து, தனது ஜனநாயக கடமையாற்றுவதற்காக லண்டனில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவரை பொதுமக்கள் பாராட்டினர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அடைக்கலம் மகன் செல்வராசு (52). இவருக்கு, சிவரஞ்சனி(45) என்ற மனைவியும், வீரமணி(2) என்ற மகனும் உள்ளனர். 22 ஆண்டுகளுக்கு முன்பு செல்வராசு லண்டனுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு அவர், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான கான்ட்டிராக்டராக உள்ளார்.

இந்நிலையில், தமிழக தேர்தல் ஆணையம் கிராம உள்ளாட்சித் தேர்தல்கள் நாளை (டிச.,27) மற்றும் 30-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவித்தது. தகவலிறிந்த செல்வராசு, தனது வாக்கை செலுத்த லண்டனில் இருந்து தமிழகம் வர தீர்மானித்துள்ளார். தொடர்ந்து, ரூ. 1 லட்சம் செலவு செய்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த செல்வராசு தனது வாக்கை 30-ம் தேதி செலுத்திய பிறகு மீண்டும் ஜன. 24-ம் தேதி லண்டன் செல்ல இருக்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
27-டிச-201902:17:41 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கிருத்துமஸ் பண்டிகைக்கு பள்ளி பண்டிகைக்கால விடுமுறை , அலுவலகம் லீவு அத்துடன் கொஞ்சம் லீவு சேர்த்து ஆயிரக்கணக்கான என்.ஆர்.ஐ ஊருக்கு வரும் நேரம். ஓட்டு போடா வந்தேன்னு ஒரு புளுகா?
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
26-டிச-201920:45:31 IST Report Abuse
Krishnamurthy Venkatesan NRI ? சும்மா காதில் பூ சுற்றுகிறார்கள்.
Rate this:
Cancel
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
26-டிச-201919:50:01 IST Report Abuse
Ram நண்பர்களே ஒரு பேச்சுக்கு எழுதிவிட்டார்கள். இப்படி மடக்கினால் எப்படி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X