மக்களை தான் கணக்கிட்டோம், குடியுரிமையை அல்ல: சிதம்பரம்

Updated : டிச 26, 2019 | Added : டிச 26, 2019 | கருத்துகள் (112)
Share
Advertisement
NCR, NPR, Chidambaram, PChidambaram, Tweet, சிதம்பரம், என்ஆர்சி, என்பிஆர், டுவிட்,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: 2010ம் ஆண்டு காங்., கொண்டு வந்த தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் மக்களை தான் கணக்கிடுகிறோம், குடியுரிமையை வலியுறுத்தவில்லை என காங்., மூத்த தலைவர் சிதம்பரம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
வரும் 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சரவை, தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்.பி.ஆர்.,) புதுப்பிக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், என்பிஆர் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.,) ஆகியவற்றை அமல்படுத்தக்கூடாது என காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூறிவந்தன. என்பிஆர் மற்றும் என்ஆர்சி இரண்டிற்கும் தொடர்பில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்தார். ஆனாலும், எதிர்கட்சிகள், 1995 குடியுரிமை சட்டத்தின் அடிப்படையில் கொண்டுவந்துள்ள, என்பிஆர்.,க்கும் குடிமக்கள் பதிவேட்டிற்கும் தொடர்பு இருக்கிறது. என்பிஆர்.,ன் இறுதி பட்டியல் என்ஆர்சி.,யாக இருக்கும் என கூறிவந்தன.


latest tamil news


இந்நிலையில், இந்த என்பிஆர் என்பது 2010ம் ஆண்டு காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போதுதான் கொண்டு வரப்பட்டது. தற்போது அதை எதிர்க்கிறார்கள் என அதற்கான வீடியோவையும் பாஜ., வெளியிட்டது.
இது குறித்து முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 2010ம் ஆண்டு காங்., கொண்டுவந்த என்பிஆர் குறித்த வீடியோவை வெளியிட்டதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். அந்த வீடியோவை தயவுக்கூர்ந்து கேளுங்கள். நாங்கள், நாட்டில் உள்ள மக்களை தான் கணக்கிடுகிறோம்; குடியுரிமையை வலியுறுத்தவில்லை.


latest tamil news


மத்திய பாஜ., அரசுக்கு அதிக தீங்கான நோக்கம் இருக்கிறது. 2010ம் ஆண்டு என்பிஆர்.,க்கு தற்போது மத்திய அரசு அனுமதியளித்தது ஆபத்தானது. அப்போது உள்ள விதிமுறைகள் இன்றைய சூழலுக்கு நடைமுறைப்படுத்துவதும் முற்றிலும் வேறுபாடானது. பாஜ.,விற்கு நற்சான்று அளிக்கவேண்டும் எனில், எந்தவித நிபந்தனையுமின்றி 2010 என்பிஆர் முறைக்கும், வடிவமைப்புக்கும் ஆதரவு அளித்து, சர்ச்சைக்குரிய என்ஆர்சி.,யுடன் இணைக்கும் திட்டம் இல்லை என்ற நிலைப்பாடு எடுக்க வேண்டும். இவ்வாறு சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (112)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
28-டிச-201919:50:04 IST Report Abuse
krish இவன் ஒரு evil genius' பண்பாளன், நேர்மையாளன் என்று தன்னை கருதிக்கொண்டு, பச்சை புளுகன், பச்சோந்தி,கூட்டு களவாளி, பயிரை மேயும் வேலி, பச்சாபத்திற்கு உரியவன் அல்லன்.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
27-டிச-201918:46:41 IST Report Abuse
oce படுத்துகினு போத்திகினாலும் போத்திகினு படுத்தாலும் ஒண்ணுதான். எதையோ பெரிசா கண்டு பிடித்து ள்ளீர்.
Rate this:
Share this comment
Cancel
krish , USA -  ( Posted via: Dinamalar Android App )
27-டிச-201911:43:14 IST Report Abuse
krish , USA BJP IT wings
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X