அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலுக்கு பின் மீண்டும் போராட்டம்: ஸ்டாலின்

Updated : டிச 27, 2019 | Added : டிச 26, 2019 | கருத்துகள் (50)
Share
Advertisement
 உள்ளாட்சி, தேர்தலுக்கு, பின் ,மீண்டும், போராட்டம்,ஸ்டாலின்

சென்னை ''உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின், குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, போராட்டம் நடைபெறும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

சென்னை, தி.நகரில் உள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின், 95வது பிறந்த நாள் விழா, நேற்று நடந்தது. மாநில செயலர் முத்தரசன், முன்னாள் செயலர் தா.பாண்டியன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், ஸ்டாலின் பங்கேற்று, நல்லக்கண்ணுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ஸ்டாலின் பேசியதாவது:குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, மிகப்பெரிய பேரணி நடத்தினோம்; அது தொடர்பாக, 8,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால், 5,000 பேர் பங்கெடுத்தனர் என, அமைச்சர்கள் கூறுகின்றனர்.

இதில், எது உண்மை என்பதை, அவர்கள் விளக்க வேண்டும்.உள்ளாட்சி தேர்தலுக்குப் பின், அரசியல் சார்பற்று, அனைத்து தலைவர்களையும் அழைத்துப் பேசி, இதுவரை இந்தியாவில் நடைபெறாத அளவுக்கான, ஒரு போராட்டத்தை முன்னெடுப்போம்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.


'தொய்வில்லாப் போராளி''



டுவிட்டர்' பக்கத்தில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது:பொதுவுடமை தத்துவம் எப்படி இருக்கும்... எளிமையாக, கம்பீரமாக, உண்மையாக, எழுச்சி மிக்கதாக, இதோ நம்முன் வாழ்கிறாரே, நல்லக்கண்ணு போல இருக்கும். மார்க்சிஸ்ட் தத்துவத்தின், மனித உருவம் அவர். தன், 95 வயதிலும், தொய்வில்லாப் போராளி; இடைவிடாத உழைப்பாளி; துாய்மையான சிந்தனையாளர். அவரை வணங்குகிறேன்.

இன்னும் பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து, மக்களுக்கு உணர்ச்சியூட்டுங்கள் உற்சாகமும், ஊக்கமும் தாருங்கள் என, அவரைப் பணிவன்புடன் வேண்டுகிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.ஜார்க்கண்ட் வர அழைப்பு!ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றன.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன், முதல்வராக தேர்வு செய்யப்பட்டு, வரும், 29ல், பதவி ஏற்க உள்ளார். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க, ஸ்டாலினுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
27-டிச-201922:47:46 IST Report Abuse
unmaitamil சொடலைக்கு வேற வேலை கிடையாது. குடும்பத்திலும் யாரும் இத மதிப்பதில்லை. சைக்கோ வேற கூட வந்து ஒட்டிக்கிச்சு. ஒன்னு மெரினால வாக்கிங் அல்லது போராட்டம்னு ரோட்டல வாக்கிங். உனக்கும் பொழுது போக வேண்டாமா ???? போன கூட்டதிலேயே எவனும் வரல. போலீஸ் எண்ணிக்கைதான் அதிகம் . மேலும் மானம் போகணும்னா போராட்டம் நடத்து.
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
27-டிச-201918:43:30 IST Report Abuse
oce நடத்திய போராட்டம் பிசுபிசுத்து விட்டதே என்ற வயிற்றெரிச்சலில் வரும் அங்கலாய்ப்பு.
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
27-டிச-201918:40:18 IST Report Abuse
oce வுடாதே அடுத்த சட்டம்ன்ற தேர்தல் வரை கெட்டிமா புடிச்சிகிட்டிரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X