தேனி :தேனி அருகே டொம்புசேரியில் எஸ்.பி.,க்கு நான்கு பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு ஏட்டு பிரபாகரன் 56, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
டொம்புசேரியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் போடி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றினார். இவரது மகன்கள் அன்பு கண்ணன் 24, அஜித் கண்ணன் 22. இவரது மனைவி 4
ஆண்டுகளுக்கு முன்
இறந்தார். இவருக்கும், இவரது சித்தப்பா நந்தகோபால் குடும்பத்தினருக்கும் சொத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
தற்கொலைஇதனால் பிரபாகரன் மன உளைச்சலில் 20 நாட்களாக பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்தார். அவரை மகன்கள் டொம்புசேரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார்.கடிதம் சிக்கியதுபிரபாகரன் தற்கொலைக்கு முன் தேனி
எஸ்.பி.க்கு 4 பக்க கடிதம் எழுதியுள்ளார். அதில் 'தன் சாவிற்கு யார், யார் காரணம் என குறிப்பிட்டுள்ளார். தன்னுடன் பணியாற்றிய போலீசாருக்கு நன்றி.
இம்முடிவை எடுத்தற்காக எஸ்.பி., தன்னை மன்னிக்க வேண்டும். மகன்களை காப்பாற்ற உதவ வேண்டும்,' என வேண்டுகோள் விடுத்துள்ளார். பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., சரவணன்
விசாரணை நடத்தி
வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE