பொது செய்தி

இந்தியா

விஞ்ஞானி மீது பொய் வழக்கு ; இழப்பீடு வழங்க கேரள அரசு முடிவு

Updated : டிச 28, 2019 | Added : டிச 28, 2019 | கருத்துகள் (57)
Share
Advertisement
திருவனந்தபுரம் : 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சில முக்கிய ரகசியங்களை, வெளிநாடுகளுக்கு விற்றதாக, தவறாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில்அடைக்கப்பட்ட, முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு, 1.3 கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க, கேரள அரசு முடிவு செய்துள்ளது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. தலைநகர்

இந்த செய்தியை கேட்க

திருவனந்தபுரம் : 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சில முக்கிய ரகசியங்களை, வெளிநாடுகளுக்கு விற்றதாக, தவறாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில்அடைக்கப்பட்ட, முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு, 1.3 கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க, கேரள அரசு முடிவு செய்துள்ளது.



latest tamil news



கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில், நம்பி நாராயணன், 77, விஞ்ஞானியாக பணியாற்றி வந்தார்.


latest tamil news




குற்றச்சாட்டு


இவர், இஸ்ரோவின் சில முக்கிய ரகசியங்களை, வெளிநாடுகளுக்கு விற்றதாகவும், வேவு பார்த்ததாகவும், 1994ல் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில், விஞ்ஞானி நம்பிநாராயணனை கைது செய்து, கேரள போலீசார் சிறையில் அடைத்தனர். இவர், இரண்டுமாதங்கள், சிறையில் இருந்தார். இதற்கிடையே, இந்த வழக்கு, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.

நம்பி நாராயணன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என, சி.பி.ஐ., விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, 'தன்னை சட்ட விரோதமாக கைது செய்துதுன்புறுத்தலுக்கு ஆளாக்கியதற்கு, கேரள அரசு, இழப்பீடு தர வேண்டும்' என, கேரளநீதிமன்றத்தில், நம்பி நாராயணன் மனு செய்தார்.


latest tamil news



இந்த வழக்கு விசாரணை, கேரள நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், நம்பி நாராயணனின் குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்து, இந்த வழக்கை சுமுகமாக முடிக்க, கேரள முன்னாள் தலைமை செயலர் ஜெயகுமாரை, கேரள அரசு சிறப்பு அதிகாரியாக நியமித்தது.


latest tamil news




முறையான ஆவணங்கள்


ஜெயகுமார் அளித்த அறிக்கையின் அடிப்படையில், விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு, 1.3 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கி, வழக்கை, சுமுகமாக முடித்துக் கொள்ள, கேரள அமைச்சரவை கூட்டத்தில், நேற்று முன் தினம் முடிவு செய்யப்பட்டது. இது குறித்து, நீதிமன்றத்தில் முறையான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு, நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, வழக்கு முடித்து வைக்கப்படும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே, உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவுப்படி, நம்பி நாராயணனுக்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டை, கேரள அரசு, கடந்த ஆண்டு வழங்கியது.இதை தவிர, தற்போது கூடுதலாக, 1.3 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளது, குறிப்பிடத்தக்கது.


Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
29-டிச-201919:31:05 IST Report Abuse
 nicolethomson காங்கிரஸ் அரசுகள் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு இந்த கேஸ் சிறந்த உதாரணம் காங்கோஸ் அடிவருடிகள் கூ கொடுப்பதற்கு தான் லாயக்கு
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
29-டிச-201906:26:25 IST Report Abuse
skv srinivasankrishnaveni அவர் பட்டகஷ்டமெல்லாம் அவமானம் எல்லாம் மறைஞ்சுபோயிருமா இழப்பீடுத்தறானாம் இழப்பீடு வெட்கம் இல்லாதவங்க
Rate this:
Cancel
அருண்நம்பி - Chennai,இந்தியா
28-டிச-201918:07:14 IST Report Abuse
அருண்நம்பி திருட்டு காங்கிரஸ் அவனுவோ செய்த தப்ப மறைக்க யாரை வேணுனா பலிகடா ஆக்குவானுவோ... அப்படி தான் நம் தேச வளர்ச்சி பிடிக்காமல், மதிப்பிற்குரிய விஞ்ஞானி திரு நம்பி நாராயணன் அவர்களையும் துன்புறுத்திருப்பனுவோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X