பொது செய்தி

தமிழ்நாடு

முத்திரையால் சர்ச்சை

Added : டிச 28, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், எடையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட ஓட்டுசாவடியில் அளிக்கப்பட்ட ஓட்டுச் சீட்டில், இரட்டை இலை சின்னத்தின் பின்பக்கத்தில், ஓட்டுச் சாவடி மைய அடையாள முத்திரை குத்தப்பட்டிருந்தது, முன்பக்கமும் தெரிந்தது. இதனால், 'ஓட்டுச்சீட்டுகளை மாற்ற வேண்டும்' என, உதவி தேர்தல் அலுவலரிடம், தி.மு.க., -

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், எடையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட ஓட்டுசாவடியில் அளிக்கப்பட்ட ஓட்டுச் சீட்டில், இரட்டை இலை சின்னத்தின் பின்பக்கத்தில், ஓட்டுச் சாவடி மைய அடையாள முத்திரை குத்தப்பட்டிருந்தது, முன்பக்கமும் தெரிந்தது. இதனால், 'ஓட்டுச்சீட்டுகளை மாற்ற வேண்டும்' என, உதவி தேர்தல் அலுவலரிடம், தி.மு.க., - அ.ம.மு.க., வேட்பாளர்கள் வலியுறுத்தினார். இதற்கு, தேர்தல் அலுவலர்கள், மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. 'சீட்டின் பின்புறம் குத்தப்பட்டுள்ள அடையாள முத்திரையால், இரட்டை இலை சின்னத்தை தவிர, வேறு எந்த சின்னத்தில் ஓட்டு போட்டாலும், அந்த ஓட்டு செல்லாது என, அறிவிக்கப்படும்' என,வேட்பாளர்கள் தெரிவித்தனர். இதை பரிசீலித்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உடனடியாக, மீதமுள்ள ஓட்டுச்சீட்டுகளை மாற்றியதை அடுத்து, இரண்டு மணி நேரத்துக்குப் பின், மீண்டும், ஓட்டுப்பதிவு துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
AKM KV SENTHIL MUSCAT - muscat,இந்தியா
27-ஜன-202009:34:56 IST Report Abuse
AKM KV SENTHIL MUSCAT யப்பா சாமி முடியளப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X