என்.பி.ஆர்., என்.ஆர்.சி., பேராபத்து: ராகுல்

Updated : டிச 28, 2019 | Added : டிச 28, 2019 | கருத்துகள் (175)
Share
Advertisement
புதுடில்லி: தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.,) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்., ) ஆகியவை, ரூபாய் நோட்டு வாபசை விட பேராபத்து வாய்ந்தவை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.காங்கிரஸ் கட்சி துவக்கப்பட்டதன் 135வது ஆண்டு விழாவை முன்னிட்டு டில்லியில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை சோனியா ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ராகுல் உள்ளிட்ட பல
Congress,Rahul,Rahul Gandhi, govt, NPR, NRC,  disastrous, demonetisation,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.,) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்., ) ஆகியவை, ரூபாய் நோட்டு வாபசை விட பேராபத்து வாய்ந்தவை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி துவக்கப்பட்டதன் 135வது ஆண்டு விழாவை முன்னிட்டு டில்லியில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை சோனியா ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ராகுல் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் ராகுல் கூறுகையில்; என்பிஆர் மற்றும் என்ஆர்சியின் அடிப்படை நோக்கம், ஏழை மக்களிடம் நீங்கள் இந்தியரா இல்லையா என்பது. பிரதமரின் 15 நண்பர்கள் எந்த ஆவணத்தையும் காட்ட மாட்டார்கள். அரசுக்கு கிடைக்கும் வருவாய், இவர்களின் பாக்கெட்களுக்குள் சென்றுவிடும். பணக்காரர்களுக்காக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ரூபாய் நோட்டு வாபசை விட, என்பிஆர் மற்றும் என்ஆர்சி பேராபத்து வாய்ந்தவை. ரூபாய்நோட்டு வாபஸ் ஏற்படுத்திய பாதிப்பை விட இரு மடங்கு பாதிப்பு ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news

பதிலடி


இதனிடையே நேற்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் நிருபர்களிடம் கூறுகையில், ராகுல், அனைத்து நேரங்களிலும் பொய் பேசுவார். இந்த ஆண்டின் சிறந்த பொய்யர் என்ற விருது இருந்தால் அதனை, பெறுபவராக ராகுல் இருப்பார் என தெரிவித்தார்.

இது தொடர்பாக ராகுல் கூறுகையில், நாட்டில் எந்த தடுப்புக்காவல் முகாம்களும் அமைக்கப்படவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருந்த வீடியோவை நான் டுவிட்டரில் பகிர்ந்து இருந்தேன். ஆனால்,அந்த வீடியோவில் தடுப்பு முகாம்கள் இருப்பது பற்றிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன. எனவே யார் பொய் சொல்கிறார்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Advertisement
வாசகர் கருத்து (175)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
29-டிச-201909:17:35 IST Report Abuse
M S RAGHUNATHAN S T Rajan: A brilliant questionare. Only one answer. Islam says, if you utter some hymn and it is not ing. It is offering. We minorities will do all the things mentioned by invoking religious sanction. But the majority does it then it is communal. It is Tragedy that some why some many Hindu politicians join with this group and berate Hindu religion. When officials of NPR go for census and enumeration, how many will say false names and how many will say my is " Nai". The government should identify Arundhathi Rai's name in NPR register and her passport, aadhaar card, Pan card and bank accounts and change the name as KUTHA.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
29-டிச-201901:24:47 IST Report Abuse
Aarkay அடுத்த பிலிபைன்ஸ், வெனிசுலா பயணம் எப்போது கிழவரசரே?
Rate this:
Cancel
Vaanambaadi - Koodaloor,இந்தியா
29-டிச-201900:07:29 IST Report Abuse
Vaanambaadi சர்ச்சுல, மசூதியில் ஒட்டு வாங்கினவனுக தான ..அதான் அப்டி பேசுறான் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X