பணத்திற்காக நாட்டை விற்கவில்லை: கனேரியா விளக்கம்

Updated : டிச 29, 2019 | Added : டிச 29, 2019 | கருத்துகள் (31)
Advertisement
டேனிஷ் கனோரியா, ஜாவ்வேத் மியாந்தாத், பாக்., கிரிக்கெட் வீரர்,

இந்த செய்தியை கேட்க

இஸ்லாமாபாத்: '' பணத்திற்காக நாட்டை விற்றவர்கள், இன்னும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் உள்ளனர். ஆனால், நான் பணத்திற்காக நாட்டை விற்கவில்லை'' என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், டேனிஸ் கனேரியா, இந்து என்பதால், பாகிஸ்தான் அணியில் பாகுபாடு காட்டப்பட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து, பாக், முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான ஜாவ்வேத் மியாந்தாத், டேனிஷ் கனோரியாவை யாரும் நம்ப வேண்டாம், டேனிஷ் நம்பகத்தன்மையையும் இழந்துவிட்டதாகவும், அவர் பணத்திற்காக எதையும் செய்வார் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து, நேற்று யுடியூபில் டேனிஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.




அதில்,கடந்த சில நாட்களாக தன்னை பற்றி வரும் செய்திகள் வரும் நிலையில், எனது மனதில் உள்ளதை உலகிற்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். புகழுக்காகவும், இந்த யுடியூப் சேனலுக்காகவும் அவ்வாறு நான் பேசுவதாக கூறுபவர்களுக்கு நான் ஒன்றை சொல்லி கொள்கிறேன். அதற்காக நான் செய்யவில்லை. எனக்கு எதிராக நடந்த பாகுபாட்டை, சோயப் அக்தர் டிவியில் கூறியுள்ளார். ஓய்வு பெற்றதில் இருந்து கிரிக்கெட் சமூகம் மற்றும் டிவி சேனல்கள் என்னிடம் வேறுபாட்டை காட்டினீர்கள். எனது கை கால்களை துண்டித்து முடமாக்கி விட்டார்கள். நீண்ட காலமாக எனக்கு வேலையில்லை. இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள். என்னை நானே முடித்து கொள்ள வேண்டுமா?

10 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்காக நான் கிரிக்கெட் விளையாடியதாக கூறுகிறார்கள். அந்த 10 ஆண்டுகளும் எனது ரத்தத்ததை சிந்திதான் கிரிக்கெட் விளையாடினேன். கிரிக்கெட் மைதானத்தில் எனது ரத்தம் சிந்தியுள்ளது. கைகளில் ரத்தம் கசிந்த போதும் மைதானத்தில் பந்து வீசியுள்ளேன். நாட்டை விற்றவர்களும் உள்ளனர். அவர்கள் இன்னும் விளையாடி கொண்டுள்ளனர். நான் பணத்திற்காக நாட்டை விற்கவில்லை. இவ்வாறு டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.

சமீபத்தில் பாக். பவுலர் சோயிப் அக்தர் மற்றும் சிலர் டேனிஷ் கனேரியாவுடன் உணவு சாப்பிட மறுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
29-டிச-201917:49:40 IST Report Abuse
sekar ng உங்கள் உயிருக்கு இஸ்லாமியர்களால் ஆபத்து வருமுன் குடும்பத்துடன் இந்தியா வந்திடுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Fardhikan - Rajakambeeram,இந்தியா
29-டிச-201914:38:52 IST Report Abuse
Fardhikan இது உன்னோட உள்நாட்டு பிரச்சினை
Rate this:
Share this comment
HARI - pune,இந்தியா
29-டிச-201915:48:24 IST Report Abuse
HARIநம் நாட்டில் நிறைய கருப்பு ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கிறது. வெறுப்பு என்பது தன்னை மற்றுமல்ல தன்னை சுற்றி உள்ளவர்களையும் அழித்து விடும். பார்த்துக்கொள்ளுங்கள்....
Rate this:
Share this comment
Alagar Srinivasan - Trichy,இந்தியா
29-டிச-201919:50:12 IST Report Abuse
Alagar Srinivasanஇந்தியாவின் சட்டத்தில் இம்ரான் கருத்து என்ற பெயரில் விசமதனமாக கூறியது எவன் நாட்டு பிரச்னை? பாகிஸ்தானை மத சார்பற்ற நாடாக அறிவிப்பார்களா?...
Rate this:
Share this comment
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
29-டிச-201922:25:29 IST Report Abuse
தாண்டவக்கோன் அப்டி பிளேட்டை திருப்புடி செல்லாம் .. உங்களுக்கு இதுக்கெல்லாம் சொல்லியா குடுக்கணும்?...
Rate this:
Share this comment
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
29-டிச-201914:01:53 IST Report Abuse
Vena Suna காசை வாங்கி கொண்டு விளையாடி ,பார்க்கறவனை ஏமாத்தறானுங்க.. கிரிக்கெட்டை பார்க்க கூடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X