காங்., ஆட்சியில் தனி அடைப்பு மையம்: சிதம்பரம் விளக்கம்

Updated : டிச 29, 2019 | Added : டிச 29, 2019 | கருத்துகள் (91)
Share
Advertisement
புதுடில்லி: காங்கிரஸ் ஆட்சியில் தனி அடைப்பு மையங்கள், வெளிநாட்டினர் சட்டப்படி தான் அமைக்கப்பட்டது. குடியுரிமை சட்டம் அல்லது தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்.ஆர்.சி.,) என்ற நோக்கத்தில் அமைக்கப்படவில்லை என காங்., மூத்த தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார்.அசாமில் தனி அடைப்பு மையம் அசாமில், 6 தனி அடைப்பு மையங்கள் செயல்படுகின்றன. கோல்போரா, கோக்ரஜ்ஹர், தேஜ்பூர், ஜோர்கட்,
UPA tenure, detention camps, Foreigners Act, CAA, NRC, P. Chidambaram, Chidambaram, தனி அடைப்பு மையம், தடுப்பு மையம், அகதிகள், சிதம்பரம், ப.சிதம்பரம்,  அசாம், காங்கிரஸ், ராகுல், பா.ஜ.,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: காங்கிரஸ் ஆட்சியில் தனி அடைப்பு மையங்கள், வெளிநாட்டினர் சட்டப்படி தான் அமைக்கப்பட்டது. குடியுரிமை சட்டம் அல்லது தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்.ஆர்.சி.,) என்ற நோக்கத்தில் அமைக்கப்படவில்லை என காங்., மூத்த தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார்.


அசாமில் தனி அடைப்பு மையம்


அசாமில், 6 தனி அடைப்பு மையங்கள் செயல்படுகின்றன. கோல்போரா, கோக்ரஜ்ஹர், தேஜ்பூர், ஜோர்கட், திப்புகர்க், சில்சர் சிறைச்சாலைகளில், இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 1043 வெளிநாட்டினர் அடைக்கப்பட்டுள்ளதாக, கடந்த நவ., ல் ராஜ்யசபாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்திருந்தார். இந்த மையங்களில், முதலாவது தனி அடைப்பு மையம், காங்கிரஸ் கட்சியின் தரூண் கோகோய் அசாம் முதல்வராக இருந்த போது,2008- 09 காலகட்டத்தில் திறக்கப்பட்டது.


வெளிநாட்டினர் சட்டம்


இது தொடர்பாக, சிதம்பரத்திடம் நிருபர்கள், அசாமில் உள்ள தனி அடைப்பு மையங்களுக்கும், காங்கிரஸ் ஆட்சியின் போது அமைக்கப்பட்ட தடுப்பு மையங்களுக்கும் உள்ள வேறுபாட்டை பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.


latest tamil news


இதற்கு சிதம்பரம் அளித்த பதில், காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட தனி அடைப்பு மையங்கள், வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் தான் அமைக்கப்பட்டது. குடியுரிமை சட்டம் அல்லது என்.ஆர்.சி., அடிப்படையில் அமைக்கப்படவில்லை என பதிலளித்தார்.


குற்றச்சாட்டு


குடியுரிமை சட்டம் மற்றும் என்.ஆர்.சி., மற்றும் என்பிஆர்(தேசிய மக்கள்தொகை பதிவேடு) தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிதம்பரம் அளித்த பேட்டியில், இந்தியாவை 'இந்து ராஷ்டிரா'வாக மாற்றும் திட்டத்தை பா.ஜ., செயல்படுத்தி வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பா.ஜ., 'என்.பி.ஆர்., என்.ஆர்.சி., மற்றும் குடியுரிமை சட்டத்தில் தான் கவனம் செலுத்தி வருகிறது' என குற்றம்சாட்டினார்.


அதிக பாதிப்பு


குடியுரிமை சட்டம் தொடர்பாக நேற்று(டிச.,28) மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறுகையில், கடந்த, 2016 நவ., 8ல் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தால், பிரதமர் மோடியின், 15 - 20 நண்பர்களுக்கு மட்டும் பலன் கிடைத்தது. தற்போது, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இது, இரண்டாவது ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் போன்றதாகும். ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பைவிட, இரண்டு மடங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் .அரசின் இந்த உத்தரவு, ஏழை, எளிய மக்களை, தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளி உள்ளது. இதிலும், மோடி நண்பர்களின் பைகள் நிரம்பப் போகின்றன என்றார்.


விளக்கக்கூட்டம்


இதனிடையே, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, முஸ்லிம்களின் சந்தேகங்களை போக்கவும், அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவும், தேசிய அளவில் மாநாடு நடத்த, பா.ஜ., முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம், முதல் வாரத்தில், இம்மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
30-டிச-201904:21:59 IST Report Abuse
meenakshisundaram முதலில் இவனை ஷேய்க் அப்துல்லா போல வீட்டிலேயே தனி அறையில் அடைக்கணும். தினம் கத்துது .-ஏதோ சுதந்திரப்போராட்டத்திலே சிறைக்கு சென்ற் மாதிரி ,-உச்ச நீதி மன்றம் இவன் செயலை கவனிக்க வில்லையா?
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
30-டிச-201903:45:21 IST Report Abuse
Milirvan செட்டி..குடியுரிமை இருந்தா உள்நாட்டுக்காரன்... இல்லன்னா வெளிநாட்டுக்காரன்'தான..? இதுல, வெளிநாட்டினர் சட்டம் வேற, குடியுரிமை சட்டம் வேற'ன்னு புளிப்பு காட்டற..?
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
29-டிச-201922:59:44 IST Report Abuse
Krishna Both Congress-BJP are Anti People Silently Killing Harassing People-Thats Why Pro Majority III front Will Rise
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X