இந்த செய்தியை கேட்க
லக்னோ: குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்த முஸ்லிம் அமைப்பினரிடம், கறுப்பு கொடி காட்டுகிறவர்கள் பாக்., செல்லுங்கள் என எஸ்.பி., கூறியிருந்தார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
உ.பி., மாநிலம் மீரட்டில் முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் பலர் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன் சிறிது வன்முறையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி., அகிலேஷ்சிங் அனைவரையும் விரட்டியதும், அங்கிருந்தவர்களிடம் ஆவேசப்பட்டு, " நீங்கள் சாப்பிடுவது இங்கே ஆனால் மற்றவர்களுக்கு புகழ்பாடுகிறீர்களா? இங்கே இருந்து கறுப்பு கொடி காட்டுகிறவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விடுங்கள். ஆனால் இந்த நிமிடத்தில் இருந்து உங்களுக்கு இருண்ட காலம் தான் வரும், " என பேசினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பானது. இது குறித்து மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், எஸ்.பி., அகிலேஷ்சிங் பேசிய வீடியோ உண்மையெனில், அது கண்டிக்கத்தக்கது.
அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போலீசாரிடமோ, கும்பலிடமிருந்தோ வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஜனநாயக நாட்டின் ஒரு பகுதியாக இருக்க முடியாது. குற்றமற்றவர்கள் கஷ்டப்படக்கூடாது என்பதில் போலீசார் கவனமாக இருக்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE