சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.2.6 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகள்: கும்பலின் பின்னணி

Updated : டிச 29, 2019 | Added : டிச 29, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement
கோவை: பழைய, 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டுவிட்ட நிலையிலும் இன்னும் பலரிடம் கோடிக்கணக்கான பழைய, 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் கோடிக்கணக்கில் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு அந்த பணத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருப்போரை மோப்பம் பிடிக்கும் கும்பல், ரகசிய ஏஜென்ட் மூலமாக அந்நபரை அணுகி, 'எங்களிடம் பழைய, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி தரும் நபர்கள்

கோவை: பழைய, 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டுவிட்ட நிலையிலும் இன்னும் பலரிடம் கோடிக்கணக்கான பழைய, 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் கோடிக்கணக்கில் இருப்பதாக கூறப்படுகிறது.



latest tamil news




இவ்வாறு அந்த பணத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருப்போரை மோப்பம் பிடிக்கும் கும்பல், ரகசிய ஏஜென்ட் மூலமாக அந்நபரை அணுகி, 'எங்களிடம் பழைய, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி தரும் நபர்கள் உள்ளனர். அவர்களுக்கு ரிசர்வ் வங்கியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. கமிஷன் கொடுத்தால் பழைய நோட்டுகளை மாற்றிவிடலாம்' என கூறியுள்ளனர்.

இவர்களது பேச்சில் மயங்குபவர்களை, சொகுசு பங்களாவிற்கு அழைத்து வந்து விருந்தும், மது உபாசரமும் செய்துள்ளனர். மேலும், தங்களிடம் உள்ள பழைய, 1,000 ரூபாய் நோட்டுக் கட்டுகளை காண்பித்து கோவையில் உள்ள பலருக்கு நாங்கள் ஏற்கனவே பழைய நோட்டுகளை மாற்றிக்கொடுத்து வருகிறோம்' என, கூறி நம்ப வைத்துள்ளனர். (இதற்காகவே, நோட்டுக்கட்டின் மேற்பகுதியில் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வைத்து போலி பண பண்டல்களை தயார் செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.


latest tamil news




ஆசை வார்த்தைகளாலும் ஆடம்பர சொகுசு பங்களாவை கண்டு வியந்தும், இவர்கள் கூறுவது உண்மையென கருதி, மோசடி வலையில் பலரும் சிக்கிக்கொள்கின்றனர். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுக்க, கமிஷன் தொகையாக, புதிய ரூபாய் நோட்டுக்களை முன் பணமாக கோடிக்கணக்கில் பெற்று கொள்ளும் மோசடி கும்பல், அதன்பின், ஏமாற்றிவிடும்.

யாராவது கேள்வி கேட்டால், 'நீங்கள் பழைய, 1,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பதே சட்ட விரோதம்.ரிசர்வ் வங்கி, வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் சொல்லிவிடுவோம்... ஜாக்கிரதை' என, மிரட்டுவார்கள். இதற்கு பயந்து பலரும் மவுனமாகிவிடுவார்கள். இதுதான், இந்த மோசடி கும்பலின் 'டெக்னிக்' என்கின்றனர், போலீசார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
05-ஜன-202006:28:27 IST Report Abuse
skv srinivasankrishnaveni நாட்டை திருத்தமுடியாது கள்ளர்களை அளிக்கவேமுடியாது
Rate this:
Cancel
Balaji - Khaithan,குவைத்
30-டிச-201915:02:16 IST Report Abuse
Balaji கடந்த இரண்டு முறை திமுக ஆட்சியில் இல்லாத போதே இதுபோன்ற பங்களாவை திமுகவினரால் வாங்க முடிகிறது என்றால் ஆட்சிக்கு வந்தால் அவ்வளவு தான்....... திமுக மட்டும் ஆட்சிக்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்..... புதியவர்களை தேர்ந்தெடுங்கள்....... அதிமுகவும் வேண்டாம் திமுகவும் வேண்டாம்........ தமிழகம் முன்னேற வேண்டுமாயின் இந்த இரு கட்சிகளும் மண்ணைக்கவ்வ வேண்டும்.........
Rate this:
Cancel
Ravi - Chennai,இந்தியா
30-டிச-201914:17:43 IST Report Abuse
Ravi வல்லவனுக்கு வல்லவன் , திருடனை விட பலே திருடன் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X