அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின், கனிமொழி வீடுகளில் கோலம்: கைது செய்யப்படுவார்களா?

Updated : டிச 30, 2019 | Added : டிச 30, 2019 | கருத்துகள் (171)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கனிமொழி, மறைந்த கருணாநிதி வீடுகளில் முன் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலம் வரையப்பட்டுள்ளது.





குடியுரிமை திருத்த சட்டத்திற்கு திமுக , காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திமுக தரப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் பேரணி நடத்தினர்.

இந்நிலையில் சென்னை பெசன்ட்நகரில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் கோலமிட்டனர். இதனையடுத்து 6 பெண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.





இந்நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஸ்டாலின், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீடு, சி.ஐ.டி., காலனியில் உள்ள கனிமொழி வீட்டில்கோலம் போடப்பட்டுள்ளது. வேண்டாம் CAA, NRC என்றும், அருகில் சில பூக்களும் கோலத்தில் இடம் பெற்றுள்ளது.

பெசன்ட்நகரில் கோலம் போட்ட பெண்கள் கைது செய்யப்பட்டதால் ஸ்டாலின், கனிமொழி கைது செய்யப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேபோல், கோவை, திருப்பூர், மதுரை, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திமுக.,வினர் கோலம் போட்டனர்.


பா.ஜ., கருத்து:


ஸ்டாலின் வீட்டில் கோலம் போட்டது தொடர்பாக பா.ஜ.,பிரமுகர் நாராயணன் கூறியதாவது: ஜனநாயகத்தில் யாரும் தங்களின் எதிர்ப்பை காட்டலாம். இது தவறு அல்ல. நாத்திகம் பேசும் நபர்கள் கோலம் போடுவது வரவவேற்கத்தக்கது. என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (171)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
04-ஜன-202005:59:22 IST Report Abuse
meenakshisundaram காலத்தின் கோலம் திமுக .திக காரங்க நாட்டை தவிக்க என்ன வேணும்னாலும் செய்வாங்க என்பதன் அடையாளம் ,அது சரி ஸ்டாலின் கோலத்தை மிதிக்காமல் தாண்டி சென்றிருப்பார் ,மார்கழியில் தெய்வ Kannan 'விளையாட்டு காட்டுகிறான் "
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
01-ஜன-202012:03:17 IST Report Abuse
oce ஒருவேளை மூல பத்திரத்தில் பக்கத்து வீட்டுக்காரன் சர்வே நம்பரும் சேர்ந்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
01-ஜன-202012:01:28 IST Report Abuse
oce வீட்டின் முகப்பில் கோலம் போடுதல் ஒரு மங்களகரமான் வேலை. அதை நாத்திகம் பேசுபவன் செய்தால் அவன் பகுத்தறிவற்றவன். எமாளி மக்களை ஏமாற்றுபவன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X