அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோலச்சண்டை: தமிழகத்தில் புதிய ‛டிரெண்ட்'

Updated : டிச 30, 2019 | Added : டிச 30, 2019 | கருத்துகள் (61)
Share
Advertisement
சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக.,வினர் கோலமிட்டு வந்த நிலையில், திமுக.,விற்கு எதிராகவும், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும் பாஜ.,வினர் பதிலுக்கு ஆங்காங்கே போட்டி கோலமிட்டு வருகின்றனர்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பெசன்ட் நகரில், கோலம் போடும் போராட்டத்தில் சிலர் ஈடுபட்டனர். அதில், வேண்டாம் சி.ஏ.ஏ.,
CAA, Kolam, DMK, BJP, NRC, NPR, குடியுரிமைசட்டம், கோலம், திமுக, பாஜ, பாஜக,

இந்த செய்தியை கேட்க

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக.,வினர் கோலமிட்டு வந்த நிலையில், திமுக.,விற்கு எதிராகவும், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும் பாஜ.,வினர் பதிலுக்கு ஆங்காங்கே போட்டி கோலமிட்டு வருகின்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பெசன்ட் நகரில், கோலம் போடும் போராட்டத்தில் சிலர் ஈடுபட்டனர். அதில், வேண்டாம் சி.ஏ.ஏ., வேண்டாம் என்.பி.ஆர்., என்.ஆர்.சி., என எழுதி எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனையடுத்து 6 பெண்களை கைது செய்த போலீசார், பின் விடுதலை செய்தனர். இவர்களுக்கு ஆதரவாக இந்த நூதன போராட்டத்தை திமுக கையில் எடுத்தது. திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி வீடுகளில் வேண்டாம் சிஏஏ என எழுதி கோலமிட்டனர். திமுக.,வினர் பலரும் இந்த பாணியை பின்தொடர்ந்து தமிழகத்தின் சில இடங்களில் கோலமிட்டு வருகின்றனர்.


latest tamil news


இதற்கிடையே கோலமிட்டு கைது செய்து விடுதலையான பெண்கள், ஸ்டாலினை சந்தித்தனர். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அதிமுக அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைய சமுதாயத்தினர் என்னை சந்தித்தனர்.
ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது, என பதிவிட்டிருந்தார். இந்த நிகழ்வுகளால் கோலமிடும் போராட்டத்தின் பின்னால் திமுக செயல்படுவதாக கூறப்படுகிறது.


latest tamil news


இந்த கோலப்போராட்டத்தில் தற்போது பாஜ.,வினரும் சேர்ந்துள்ளனர். ஆனால், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், திமுக.,வுக்கு எதிராகவும் கோலச் சண்டையில் இறங்கியுள்ளனர். தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பாஜ.,வினர் தாமரை சின்னத்துடன் சேர்த்து சிஏஏ, என்ஆர்சி. வேண்டும் எனவும், மூலப்பத்திர்ம எங்கே என திமுக.,வை சாடியும் கோலமிட்டுள்ளனர். கட்சிகள் தங்கள் எதிர்ப்பை இப்படி கோலச்சண்டையின் மூலம் வெளிக்காட்டுவது, தமிழகத்தில் புது டிரெண்ட் ஆகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amal Anandan - chennai,இந்தியா
31-டிச-201905:21:00 IST Report Abuse
Amal Anandan எடுக்கெல்லாம் கைது பண்றது தெரியாத கூன் பாண்டிகளிடம் சிக்கி தமிழ்நாடு அவதி படுகிறது.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
31-டிச-201904:45:06 IST Report Abuse
meenakshisundaram நாட்டை அலங்கோலமாக்கிய கட்சி ,பிள்ளைத்தனமாக நடந்து கொண்டு முற்றிலும் ஆளத்தகுதி யற்றது என்பதை இன்னொரு முறை நிரூபித்துள்ளது, ஸ்டாலின் அட்லீஸ்ட் அன்பழகனிடம் இது பற்றி ஆலோசித்திருக்க வேண்டும்,கனி போன்ற சின்னப்பிள்ளைகளை கொண்டு அரசியல் பொழுது போக்கை செயது கொண்டிருக்கிறார்.முக வின் தெளிவு இதில் அவருக்கு இல்லை ,
Rate this:
Cancel
30-டிச-201921:47:16 IST Report Abuse
இந்தியன் சுடலைக்கு ஒரு சேலை பார்சல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X