இந்தியா பாதுகாப்பற்ற நாடாம்: சொல்வது பாக்., 'மாஜி' கேப்டன்

Updated : டிச 30, 2019 | Added : டிச 30, 2019 | கருத்துகள் (73)
Share
Advertisement
Pakistan, FormerCaptain, JavedMiandad, NotSafe, India, EhsanMani, PCB, ArunDhumal, BCCI, பாகிஸ்தான், முன்னாள், கேப்டன், மியான்டட், பாதுகாப்பற்றநாடு, இந்தியா,

இந்த செய்தியை கேட்க

கராச்சி: இந்தியா பாதுகாப்பற்ற நாடு, அங்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதை நிறுத்த வேண்டும் என பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனர் ஜாவித் மியான்டட் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ல் இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடியது. லாகூரில் நடக்க இருந்த போட்டிக்காக இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த சம்பவத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பாக்., சென்றால் பாதுகாப்பு இருக்காது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் 10 ஆண்டுகளாக பாக்.,கில் சர்வதேச போட்டிகள் நடைபெறாத நிலையில், சமீபத்தில் இலங்கை அணி, பாக்., செல்ல ஒப்புக்கொண்டு, கிரிக்கெட் விளையாடியது. தற்போது இந்தியாவில் பல இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் மற்றும் சில அமைப்புகள் போராட்டம் நடத்தின.


latest tamil news


இது தொடர்பாக ஜாவித் மியான்டட் கூறியதாவது: இந்தியா தான் பாதுகாப்பற்ற நாடு. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டாம். இந்தியாவில் தற்போது என்ன நடக்கிறது என உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. சுற்றுலா பயணிகள் அங்கே செல்வது நல்லதல்ல. இந்தியாவை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும். அனைத்து நாடுகளும் இந்தியாவுடனான விளையாட்டு உறவுகளை துண்டிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.


latest tamil news



பதிலடி

பாக்., கிரிக்கெட் வாரியத் தலைவர் இஷான் மாணி கூறுகையில், இலங்கை அணிக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்து டெஸ்ட் தொடரை நல்லபடியாக நடத்தியுள்ளோம். இதனால், இந்தியாவை விட பாக்., பாதுகாப்பான நாடு என நிரூபிக்கப்பட்டுள்ளது, என்றார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால், இஷான் லண்டனில் வசிப்பதால், பாக்.,கின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கூட கருத்து தெரிவிக்க அவருக்கு தகுதியில்லை. பாக்.,கில் வசித்தால் தான் அவருக்கு உண்மை நிலவரம் தெரியும், என பதிலடி கொடுத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
03-ஜன-202002:47:50 IST Report Abuse
Milirvan இதுல, இந்த கொரங்குமூஞ்சானுக்கு சப்போர்ட் பண்ணி, இங்கருக்குற குல்லாமுல்லாக்களும், பாவாடைபாதர்களும், ஆமாமா...ஆமாமா.. பாரதம் வசிக்க தகாத நாடு என்று ஊளையிடுவார்கள். முன்பும் ஊளையிட்டிருக்கிறார்கள்..
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
31-டிச-201913:17:52 IST Report Abuse
skv srinivasankrishnaveni 99%இந்தியர்கள் எல்லோரும் நன்னாவே இருக்கோம்
Rate this:
Cancel
31-டிச-201910:49:28 IST Report Abuse
இந்தியன் சோமாலியா பக்கி தேசம் என்ன வேறுபாடு தெரியுமா??? இரண்டுமே பிச்சைக்கார தீவிரவாத மனித மிருகம் வாழும் தேசம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X