பொது செய்தி

தமிழ்நாடு

ஜன., 9 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்

Updated : டிச 31, 2019 | Added : டிச 30, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

Jan 9.,  Pongal Gift, Ration shop,ஜன., 9 , பொங்கல் பரிசு தொகுப்பு, வினியோகம்

சென்னை:பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை, ஜனவரி, 9ல் துவக்கி, 13ம் தேதிக்குள் முடிக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் அதிகாரிகளுக்கு, உணவு வழங்கல் துறை ஆணையர், நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; 5 கிராம் ஏலம்; கரும்பு துண்டு மற்றும், 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்க, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பை, அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும், உரிய முறையில் வினியோகம் செய்து முடிக்க வேண்டிய முழு பொறுப்பு, கலெக்டர்களை சாரும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை, ஜனவரி, 9ல் துவக்கி, 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். விடுபட்ட கார்டுதாரர்களுக்கு, 13ம் தேதி வழங்கி, அப்பணியை முழுவதுமாக முடிக்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பில், பொருட்களுடன், 1,000 ரூபாய் ரொக்கமும் சேர்த்து, ஒரே சமயத்தில் வழங்க வேண்டும்.

இத்திட்டத்தின் செயல்பாடு குறித்த முன்னேற்றத்தை, கலெக்டர்கள் தினமும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கார்டு இல்லையா? கவலை வேண்டாம்!* பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன் கார்டு எடுத்துச் சென்று வாங்கலாம்.

* ரேஷன் கார்டை தொலைத்தவர்கள், ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்களின் ஆதார் அட்டையை எடுத்துச் சென்று காட்டி, பரிசு தொகுப்பை பெறலாம்.

* ஆதார் அட்டை கையில் இல்லாவிட்டால், ரேஷன் கார்டில் பதிவு செய்த, மொபைல் போனை எடுத்துச் செல்ல வேண்டும். ரேஷன் ஊழியர்கள் அந்த எண்ணை பதிவு செய்ததும், அந்த எண்ணிற்கு, ஓ.டி.பி., எனப்படும், ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண் வரும். அந்த ரகசிய எண்ணை தெரிவித்து, பரிசுத் தொகுப்பை பெறலாம்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMESH - CHENNAI,இந்தியா
31-டிச-201918:55:27 IST Report Abuse
RAMESH 4 days is very less (from 9th jan to 12th Jan) other district people will move them home town 10th Jan itself. so need to start from 6th January. Govt will re-consider?
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
31-டிச-201904:42:45 IST Report Abuse
Mani . V ஓடி வாங்க, ஓடி வாங்க, எல்லோரும் பொங்கல் பிச்சை வாங்க, ஓடி வாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X