'பார்' நடத்த ஆளுங்கட்சியில் 'தர்பார்'

Updated : டிச 31, 2019 | Added : டிச 31, 2019 | |
Advertisement
மார்கழி அதிகாலை குளிரில் நடுங்கியபடி, சித்ராவும், மித்ராவும், வண்டியில் சென்று கொண்டிருந்தனர்.''ஏக்கா... இவ்ளோ நேரத்தில கெளம்பணுமா... கொஞ்சம் லேட்டா போனாதான் என்னவாம்?''''அட... இந்த மாசத்துலதான், காத்தை சுவாசிச்சா, ஹார்ட்டுக்கு நல்லதாம். அதனாலதான், பழங்கரையில சிவன் கோவிலுக்கு போயிட்டு, எலக்ஷன் எப்படி போகுதுன்னு பார்க்கலாமுன்னு வந்தேன், புரிஞ்சுதா?''
 'பார்' நடத்த ஆளுங்கட்சியில் 'தர்பார்'

மார்கழி அதிகாலை குளிரில் நடுங்கியபடி, சித்ராவும், மித்ராவும், வண்டியில் சென்று கொண்டிருந்தனர்.''ஏக்கா... இவ்ளோ நேரத்தில கெளம்பணுமா... கொஞ்சம் லேட்டா போனாதான் என்னவாம்?''

''அட... இந்த மாசத்துலதான், காத்தை சுவாசிச்சா, ஹார்ட்டுக்கு நல்லதாம். அதனாலதான், பழங்கரையில சிவன் கோவிலுக்கு போயிட்டு, எலக்ஷன் எப்படி போகுதுன்னு பார்க்கலாமுன்னு வந்தேன், புரிஞ்சுதா?'' ''சாரிங்க்கா.. நான் அத மறந்துட்டேன்,'' என மித்ரா சொல்லி கொண்டிருக்கும்போதே, அப்பகுதி வழியே சென்ற பெண்கள் ஒவ்வொருவரும், புதிய சேலையை கொண்டு சென்றனர்.

அதைப்பார்த்த சித்ரா, ''இங்க பாரு. ஓட்டுப்போடறதுக்கு லஞ்சமாக புடவையை குடுத்திருக்காங்க.. இப்படி பணம் கொடுத்து ஓட்டு வாங்கி, ஜெயிக்கறவங்க, அத எடுக்கத்தானே பாப்பாங்க,''''அதிலும், மித்து... ஆளுங்கட்சியில, கோஷ்டி அதிகமானதால, 'ஆப்போஸிட்'டா போட்டியிட்டவங்க, எல்லாரும், பணமும், சாப்பாடும் கொடுத்து ஓட்டு கேட்டாங்களாம். இப்படி, ஒவ்வொருத்தருக்கும், 400 ரூபாயும், வேஷ்டி, சேலையும் கெடைச்சுதாம்,''

'ஆனா, சிலர், திருப்பி குடுத்திட்டாங்களாம். யாருக்கு ஓட்டு போடணும்னு எங்களுக்கு தெரியும். இத எடுத்துட்டு போங்கன்னு, முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிட்டாங்களாம்,''''வெரிகுட்... யூத் எல்லாம் இப்டித்தான் இருக்கோணும்,'' என, ஆதரித்த மித்ரா, ''பல்லடம் யூனியனில், ஆளும்கட்சி கோஷ்டிகள் உள்ளடி வேலை செஞ்சதால, 'சீட்' வாங்கின வேட்பாளர்களுக்கு நடுக்கம் குறையலையாம்,''''அதென்னடி விஷயம்?''

''போட்டி வேட்பாளர் இருக்கறது தெரிஞ்சதும், கூப்பிட்டு பேசியிருக்கலாம். அத வுட்டுட்டு மிரட்டியதால், ஒருத்தரும் புடி குடுக்கலைன்னு சொல்றாங்க்கா,''இடையில், சாக்கடை கழிவுநீர் குட்டை போல் தேங்கி நின்றது. கவனமாக வண்டியை ஓட்டிய சித்ரா, ''பல கிராமங்களில் இப்படித்தான் இருக்குது. புதுசா ஜெயிச்சு வர்றவங்களாவது, சரி பண்ணினா பரவாயில்லை,'' என்றாள்.''அட.. நீங்க வேற. சுத்தமா இருக்க வேண்டிய ஜி.எச்.,சில், தினமும் ஒரு லட்சம் லிட்டர் கழிவு நீரை, முறையாக சுத்திகரிப்பு செய்யாம, சங்கிலிப்பள்ளத்துல கலந்துட்டாங்களாம்,''

''அடக்கொடுமையே... அப்றம் என்னாச்சு?'' ''இதை தெரிஞ்சுகிட்ட 'பொல்யூஷன் கன்ட்ரோல் போர்டு' ஆபீசர் ஒருத்தர், ஜி.எச்., சில் ஆய்வு செஞ்சிட்டு, 'இனி, முறையா சுத்திகரிப்பு செய்யலீன்னா, பைன் போட்ருவோம். இப்பவே, இதுக்கு, 85 லட்சம் போட்டிருக்கணும். இந்த ஒரு தடவ பார்த்துட்டு முடிவு பண்ணிக்கலாம்,'னு, கடுமையா 'வார்னிங்' குடுத்திட்டு போயிட்டாராம்,''மித்ரா சொன்னதை கேட்ட சித்ரா, ''அந்த அதிகாரி அப்படி சொன்னாரா.. இந்த அதிகாரிங்க இப்படி பண்ணிட்டாங்க...!'' என்றாள்.''என்னக்கா... இப்படி மொட்டையா சொல்றீங்க?''

''அட... உள்ளாட்சி எலக்ஷனில், பல அதிகாரிகளுக்கு இன்ட்ரஸ்ட் இல்லை. மூன்றரை வருஷமா, தனிக்காட்டு ராஜாவா இருந்துட்டாங்க. இப்ப எலக்ஷனும் வந்ததால, மாவட்டம் பூராவும், 'சேறு அகற்றும்' மெஷின்களை பல லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கிட்டாங்க...''''அவ்ளோ... அவசரம் எதுக்கு?''''இது கூட தெரியாதா மக்கு. அவங்க வந்திட்டா, நமக்கு எதுவும் கிடைக்காதுன்னுட்டு, சட்டுபுட்டுனு, மெஷின்களை வாங்கி, சுருட்றதை சுருட்டிட்டாங்க. அதுக்காக, 'கவர்மென்ட் நாம்ஸ்' எதையுமே பாலோ பண்ணலையாம்,''

''மித்து, இதே மாதிரி காளைகளுக்கு பேர் போன ஊரில், சைக்கிள் ஸ்டாண்ட், ஏலத்தை இப்பவே நடத்திட்டு, பல ஆயிரம் ரூபாயை பாக்கெட்டில் போட்டுட்டாங்களாம்,''''ஆமாங்க்கா... கிடைச்சவரைக்கும் இப்பவே, பார்த்திட்டா நல்லது என, படபடன்னு கல்லா கட்டறாங்க,'' என்று கூறி சிரித்தாள் மித்ரா.அந்த ரோட்டில் இருந்த 'டாஸ்மாக்' கடையில், அந்த நேரத்திலும், 'சரக்கு' விற்பனை சரளமாக நடந்து கொண்டிருந்தது.''இங்க பாரு. எப்படி சேல்ஸ் பண்றாங்கன்னு. எலக்ஷன்னு கூட பார்க்காம, பண்றாங்க. இது மட்டுமல்லடி, டிஸ்ட்ரிக்ட்டில் எல்லா பக்கமும் இதே கதைதான் ஓடுது,''

''சிட்டி போலீஸ் அதிகாரி ரொம்ப வேதனை பட்டு பேசியிருக்காரு,'' என்று ஆரம்பித்தாள் சித்ரா.''இப்பிரச்னையில, தாராபுரத்தில் பல லட்சம் வருமானமுள்ள முக்கியமான 'டாஸ்மாக் பார்' ஏலம் எடுப்பதில், ஆளுங்கட்சியை சேர்ந்த, இரு முக்கிய பிரமுகர்களுக்கும் பயங்கர 'லடாய்' வந்திடுச்சாம். இத்தனைக்கும், எக்கச்சக்கமான பல 'பார்' இப்படி குறுக்கு வழியில நடக்குதாம். மொத்த பணமும், இந்த ரெண்டு வி.ஐ.பி.,க்கும் போயிடுதாம்,'' ''இவங்களே இப்படியிருந்தா, கவர்மென்ட்டுக்கு எப்படி காசு போகும்?'' என ஆதங்கப்பட்ட சித்ரா, ''வேலியே பயிரை மேய்ந்த கதைதான் இப்ப 'டாப்'பா பேசறாங்க தெரியுமா?''

''எந்த மேட்டருங்க்கா,''''வீரபாண்டி போலீஸ் லிமிட்டில், நகையை திருடிய ஆசாமி கள், அத வித்த காசுல, வாங்கின பொருட்களை, எஸ்.ஐ., ஒருத்தர் 'லவட்டி' சஸ்பெண்ட் ஆனதை பத்தி, மீட்டிங்கில் சொல்லி கமிஷனர் ரொம்பவே 'அப்செட்' ஆயிட்டாராம். இந்த மாதிரி இவரு நடந்துட்டது 'டிபார்ட்மென்ட்டுக்கு' ரொம்ப கேவலமா இருக்கு,''

''இனி, இதுபோல யாராவது செஞ்சாங்கன்னு, 'சிவியர் ஏக்ஷன்' எடுத்திருவேன்னு, ஓபனாவே சொன்னாராம்,''சித்ரா கூறியதும், ''அவரு சொன்ன மாதிரி, இந்த பட்டாலியன் போலீஸ்கிட்ட இருந்து பொருளை திருடற ஆட்களையும் புடிச்சா பரவாயில்லையே!''''அப்படியா, அது என்ன விஷயம்?''''அந்த போலீஸ்காரங்க, பழைய கலெக்டர் ஆபீஸ் வளாகத்துல தங்கியிருக்காங்க. அவங்களோட, மொபைல் போன், சார்ஜர்... இப்படி ஏதாவது ஒரு பொருள் அடிக்கடி காணாமல் போகுதாம். இது வெளியே தெரிஞ்சா அசிங்கம்னு, அடக்கி வாசிச்சிட்டு, கறுப்பு ஆடு யாருன்னு, தீவிரமாக கண்காணிச்சிட்டு இருக்காங்களாம்,''

''போலீசுக்குள்ளயே கறுப்பு ஆடுன்னா, சிரமம்தாங்க்கா,'' என்ற மித்ரா, ''குன்னத்துாரில், பழையபடி, ஒரு லாட்டரி ஓேஹான்னு ஓடுதாம். நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரி கண்டுக்கறதில்லையாம்,'' என்றாள்.''அதெப்படி எடுப்பாங்க... அதுதான் 'மாமூல்' ஒழுங்கா போயிடுதே. மித்து, உடுமலையில் மீண்டும் அந்த அதிகாரி தெனாவட்டா வலம் வர்றாராம்,''''யார், அது?''

''அதாண்டி நாம இதுக்கு முன்னாடி பேசினோமே. அவருதான். அந்த அதிகாரி பல வருஷமா ஒரு இடத்தில இருந்தாரு. இப்ப வேற ஸ்டேஷன் போயிட்டாரு. உள்ளாட்சி எலக்ஷன் முடிஞ்சதும் பழைய இடத்துக்கே வந்திடுவேன்,' 'பிரகாச'மா சொல்றாரம்,''''ஓ... அவரா? அந்த வி.ஐ.பி., சப்போர்ட் இருக்கற வரைக்கும் என்னைய ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சவால் விட்டவராச்சே'' என்றாள் மித்ரா.''எஸ்.பி., ஆபீசில், 'தர்பார்' நடத்திட்டு இருக்கிற அந்த அதிகாரிய பத்தி, பல புகார் டி.ஜி.பி.,க்கு போயிருக்குதாம். அவரோட கடந்த கால செயல்பாட பத்தி, டீடெய்ல்ஸ் கேட்டிருக்காங்களாம். அதுக்காக ஒருத்தர், 'காந்தம்' மாதிரி கலெக்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாராம். இது தெரிஞ்ச அந்த அதிகாரி, 'அப்செட்' ஆயிட்டாராம்,''

''சரிதான்... அப்பதான் மத்தவங்க சரியா இருப்பாங்க,''என பதிலளித்த, மித்ரா, ''புதுசா வந்த ஆபீசரும், சும்மா 'வாங்கு வாங்கு'ன்னு வாங்கறாராம்,'' புதிர் போட்டாள்.''எந்த ஆபீசரை சொல்ற?'' ''ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீசில்தான். அஞ்சாறு மாசத்துக்கு முன்னாடி, ஒருத்தர் ரொம்ப 'கரப்ஷன்'னு அவரை மாத்தினாங்க. அப்புறம் வந்தவர், கொஞ்சம் நாள் கம்முன்னு இருந்தாராம். இப்ப என்னடான்னா, ரெண்டு கையிலும் வாங்குறாராம்,''

''எப்படியாவது காரியம் ஆகோணும்னு மக்களும் கொடுத்திடறாங்க. இத்தனைக்கு அந்த ஆபீசில், 'லஞ்சம் வாங்குறதும், கொடுக்கறதும் குற்றம்'னு பெரிசா எழுதி வச்சிருக்காங்க,''''மித்து, 'ராமா... ராமா'ன்னு என்னதான் சொன்னாலும், சிலரை திருத்தவே முடியாது போல,'' என சித்ரா சொன்ன, கோவில் முன் வண்டியை 'பார்க்' செய்தாள். அதன்பின், இருவரும் கோவிலுக்குள் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X