பொது செய்தி

இந்தியா

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரள சட்டசபை தீர்மானம்

Updated : டிச 31, 2019 | Added : டிச 31, 2019 | கருத்துகள் (87)
Advertisement
PinarayiVijayan, IndiaAgainstCAA, 
IndiaDoesNotSupportCAA, CAA, country, Pinarayi, resolution, kerala, kerala Assembly,

இந்த செய்தியை கேட்க

திருவனந்தபுரம்: குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி , கேரள சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை கொண்டு வந்த முதல்வர் விஜயன் பேசியதாவது : குடியுரிமை சட்டம், மதச்சார்பின்மை மற்றும் நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக உள்ளது. இது, குடியுரிமை வழங்குவதில், மத பாகுபாடு காட்டும் வகையில் உள்ளது. அரசியலமைப்பின் அடிப்படை மதிப்பு மற்றும் கொள்கைகளுக்கு எதிராக உள்ளது.

நாட்டில், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால், குடியுரிமை சட்டத்தை நிறுத்தி வைத்து, அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள மதசார்பின்மையை நிலைநிறுத்த வேண்டும். பல மாநிலங்களில் போராட்டம் நடத்தி வருகிறது. சர்வதேச அளவில், இந்தியாவின் மதிப்பை கெடுத்துவிட்டது எனக்கூறினார்.





சட்டசபை துவங்கியதும், பா.ஜ.,வின் ஒரே உறுப்பினரான ராஜகோபால் கூறுகையில், குடியுரிமை சட்டம் பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதால், சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருவது சட்ட விரோதம். அரசியல் விரோதம் காரணமாக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக, இந்த தீர்மானம் கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்டால் அதற்கு எதிராக ஜனாதிபதியிடம் முறையிடுவோம் என பா.ஜ., கூறியிருந்தது.

இந்திய கம்யூ., உறுப்பினர் திவாகரன் பேசுகையில், இந்தியாவில் பலவிதமான போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கு முன்னர் இந்தளவு நடந்தது இல்லை. தற்போது, இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டதன் மூலம், உலகிற்கு ஒரு செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன் பின்னர் நடந்த ஓட்டெடுப்பில், அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் ஆதரவாக ஓட்டு போட்டனர். இதனையடுத்து தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. பா.ஜ., எம்எல்ஏ , மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.

Advertisement




வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
31-டிச-201922:37:04 IST Report Abuse
Krishna UnfortunatelyWeDontHaveProperDemocracyAnyWhereMostLeadersAreVoteHungryShepeherdsWhoWilldoAnythingForVotesPowers-AllMsMLAsAreBrainlessPowerHungrySheepsfTheirLeaders-UnlawfulStateResolutionBasedOnFalseMisleadingInformationV.goodExampleForImposingPresidentRuleAndSCcanAlsoSuspendStateAssembly-
Rate this:
Share this comment
Cancel
adithyan - chennai,இந்தியா
31-டிச-201921:13:23 IST Report Abuse
adithyan மலப்புரம் மாவட்டத்தில் நிறைய பாகிஸ்தானிகள் தங்கியிருக்கிறார்களாமே உண்மையா.
Rate this:
Share this comment
Cancel
sri - mumbai,இந்தியா
31-டிச-201919:52:51 IST Report Abuse
sri இந்த கம்ம்யூனிஸ்டுகளை விட்டால் நம் நாட்டு அரசியல் சட்டமே இவர்கள் ஆளும் கேரளாவில் செல்லாது என்று மசோதா நிறைவேற்றுவார்கள். நம் நாட்டுக்கு சுதந்திரம் வேண்டாமென்று கூறினவர்கள்தானே இவர்கள், என்ன வேண்டுமென்றாலும் சொல்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X