பொது செய்தி

இந்தியா

குடியுரிமை சட்டம் சரியானதுதான் : தவறான பிரசாரத்தால் வன்முறை: ஜக்கி வாசுதேவ்

Updated : ஜன 01, 2020 | Added : டிச 31, 2019 | கருத்துகள் (103)
Advertisement

புதுடில்லி: குடியுரிமை சட்டம் உலகம் முழுவதும் உள்ளது. இது சரியான சட்டம் தான். இது குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவது கவலை அளிக்கிறது என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றியும், அதனால் நடந்து வரும் வன்முறை போராட்டங்கள் பற்றியும் ஜக்கி வாசுதேவ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.


இது தொடர்பாக அவர் அளித்த விளக்க வீடியோ டிரண்டில் இடம் பிடித்தது. இந்த உரை விவரம்:


மத ரீதியில் பிரிந்தது


குடியுரிமை சட்டம் தொடர்பாக நான் ஓரளவுக்கு அறிந்திருக்கிறேன். இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால் சில பகுதிகளில் வன்முறை வெடித்தது. இது துரதிருஷ்டவசமானது. முன்பு நமது நாடு ஒரே நிலப்பகுதியாக இருந்தது. கடந்த 72 ஆண்டுகளுக்கு முன் இந்த மண், மத ரீதியிலாக பிரிக்கப்பட்டது. மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் எனமக்கள் பிரிந்தனர். பலர் கொல்லப்பட்டனர். பல லட்சம் பேர் அதிகளாக இரு புறமும் சென்றனர்.
மற்ற நாடுகள் மத அடிப்படையிலான சட்டத்தை பின்பற்றியபோது, நல்ல வேளையாக இந்தியா மட்டும் மதச்சார்பற்ற நாடாக ஆனது. 1971 போருக்குப் பின் கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாக மாறியது, இந்நேரத்திலும் லட்சக்கணக்கானோர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர். அசாமில் உள்ளூர் மக்களை விட அகதிகள் அதிகமாயினர். இதனால் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து அசாம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, வெளிநாட்டினர் கண்டறியப்பட்டு அவர்களின் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒப்பந்தம் செய்தவர்கள், கையெழுத்து இட்டதோடு சரி. வேறு எதையும் செய்யவில்லை.


படிப்பறிவற்றவர்கள்உலகம் முழுவதும் ஏதேனும் ஒரு பிரிவினையால் மோதல் ஏற்பட்டுதான் வருகிறது. மதம், ஜாதி, வர்க்கம், நிறபேதம் என ஏதாவது ஒரு வகையில் மக்கள் பிரிக்கப்படுகின்றனர். இந்தியாவிலும் அதுபோல் பல காரணங்கள் இருக்கின்றன.
குடியுரிமை திருத்த சட்டம் என்பது மிக தாமதமாக வந்துள்ள கருணை நடவடிக்கை. இந்த சட்டத்தின் பெயரில் வன்முறை நடந்து வருகிறது. சட்டத்தை படித்து பார்க்க வேண்டிய கல்லூரி மாணவர்கள், படிப்பறிவற்றவர்கள் போல் வன்முறையில் ஈடுபடுவது ஆச்சரியமாக இருக்கிறது.
சிறுபான்மை மக்களின் குடியுரிமைக்கு பங்கம் வந்து விட்டதாக பலர் அச்சத்தை ஏற்படுத்தினர். இது துரதிருஷ்டமானது. இது தொடர்பாக ஏற்பட்ட வன்முறையில் பொதுச்சொத்துக்கள் எரிக்கப்பட்டன. இது இவர்களின் புரிந்து கொள்ளாத தன்மையையே காட்டுகிறது. இஸ்லாமியா பல்கலை.,யில் நடந்த வன்முறையில் கல்லூரி உள்ளே இருந்து போலீசார் மீது கற்கள் வீசப்பட்டது. லக்னோவில் போலீசார் பலர் காயமுற்றனர். போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி குண்டுகள் எங்கிருந்து வந்தன ? இது எந்த அளவுக்கு நியாயம். சிஏஏ சட்டம் என்ன சொல்கிறது என்பதை நாம் ஒரு மொபைல் போனில் பார்த்து படிக்க முடியும். ஆனால் புரளிகள் பரப்பப்பட்டது.


தேசிய குடிமக்கள் பதிவேடு


தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது எல்லா நாடுகளிலும் உள்ள வழக்கமான நடைமுறைதான். ஒவ்வொரு குடிமகனும் பதிவு செய்யப்பட வேண்டும். இது ஒவ்வொரு நாட்டுக்கும் அவசியமானது. ஆனால் இது தவறானது என சிலர் சொல்கின்றனர். எங்கிருந்து வந்தீர்கள் என்பது முக்கியமல்ல நீங்கள் யார் என தெரிய வேண்டுமல்லவா? என்ஆர்சி என்பது யாராக இருந்தாலும் பதிவு செய்யப்பட வேண்டும். அனைத்து நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு குடிமகனும் பதிவு செய்யப்பட வேண்டியது. சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் அடையாளம் காணப் பயன்படும். கோவையில் நாய்கள் குழந்தைகளை கடித்தது, இதனால் யார் நாய் என்பதை அறிவதை அதற்கும் அடையாள சின்னம் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஒரு நாய் அடையாளளம் காணப்படும் போது மனிதர்களான நமக்கு வேண்டாமா ?

பள்ளியில் படித்த சான்று, ரேசன் கார்டு, ஆதார் கார்டு, தேர்தல் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் என ஏதாவது வேண்டும். ஆனால் இதில் எதுவுமில்லை என்றால் நீங்கள் யார் ? இதனை கேட்டால் தவறு என்பதா ? பாரபட்சமாக நடத்துவதாக கூறுவதா ?இந்த நாட்டில் யார் இவர் என்பதற்கு அடையாளம் வேண்டுமல்லவா ? எங்கிருந்து வந்தவர்கள் என தெரிய வேண்டாமா ? எந்த நாட்டவராக இருந்தாலும் குறைந்தது 7 ஆண்டுகள் இருந்தாலே இந்தியாவில் சட்டத்திற்குட்பட்டு குடியுரிமை பெற முடியும்.

அதே சமயத்தில், சட்டத்தின் முக்கிய அம்சங்கள் , நோக்கம் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு தவறிவிட்டது. அதைப் பயன்படுத்தி, சிலர் மக்களிடையே தவறான பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு சத்குரு கூறி உள்ளார்.


பிரதமர் மோடி பாராட்டு;


சத்குரு வீடியோவை பிரதமர் மோடியும் அவரது தனிப்பட்ட டுவிட்டரில் பதிவிட்டு பாராட்டி உள்ளார். குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்டவை குறித்து ஜக்கி வாசுதேவ் அளித்த தெளிவான விளக்கத்தை பாருங்கள். அவர் வரலாற்று ரீதியான தொடர்பையும், நமது சகோதரத்துவ கலாசாரத்தையும் அழகாக எடுத்துரைத்துள்ளார். சில குழுக்களின் தவறான பிரசாரத்தையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (103)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
01-ஜன-202011:55:48 IST Report Abuse
Sridhar இப்போது நடந்த வன்முறைகளுக்கு குடியுரிமை சட்டதிருத்தம்தான் காரணம் என்று யாராவது நினைத்தால், அவர்களைவிட அப்பாவி யாரும் இருக்க முடியாது. ஏற்கனவே வெளிவரமுடியாத வெளிவர துடித்துக்கொண்டிருந்த குமுறிக்கொண்டிருந்த கோபங்கள் இப்போது வெளிவந்து வன்முறையாளர்களை அவர்களின் உண்மையான முகங்களை அடையாளம் காட்டியிருக்கிறது. முப்பரிமாணம் கொண்ட இந்த வன்முறை போராட்டக்காரர்கள் ஒருசாரார் மறுசாராரை உபயோகப்படுத்தி தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், பாவம் மோடி அரசு இவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, உண்மை நிலைமையை புரிய வைத்திருக்கிறது. இந்த வன்முறையாளர்களும் மோடியை பற்றி அறிந்திருந்தும் ஒரு கடைசி முயற்சியாக இந்திய நாட்டின் மீது இந்த யுத்தத்தை நடத்தியுள்ளார்கள். ஏனெனில், சரியோ தவறோ, அவர்கள் இதை தங்கள் வாழ்வா சாவா பிரச்சனை போல் பார்க்கிறார்கள். முதலில் தலாக், அப்புறம் 370, அதற்க்கு மேலே ராமர் கோவில் என்று படிப்படியாக விழுந்த 'அடிகள்', இப்படியே போனால் நாளை நம் நிலைமை மிகவும் மோசமாகும் என அய்யப்படவைத்திருக்கிறது. இந்த ஐயத்தை சரியாக பயன்படுத்தி கயவர்கள் கூட்டம் இவர்களை கேடயமாக பயன்படுத்தி தங்கள் அரசியலுக்கு சாதகமாக்கியிருக்கிறது. இவர்களின் மூன்றாம் பரிமாணமாக இடதுசாரிகளும் பத்திரிக்கைகளும் இந்த வன்முறைகளுக்கு சாமரம் வீசி இந்த முறையாவது நாம் வெற்றிபெற்று மோடி ஆட்சியை அகற்றிவிடமுடியதா என மனப்பால் குடித்து, எதோ இந்தியாவே இந்த சட்டத்திற்கு எதிராக பற்றி எரிவது போன்ற ஒரு உருவகத்தை உண்டாக்க முயற்சி செய்து வருகிறது. ஆனாலும் இவர்களுக்கிடையே உள்ள போட்டிகளாலும் மற்றும் போராட்ட நிறத்தை பற்றிய அபிப்பிராய பேதங்களினாலும் ஒரு ஒருங்கிணைந்த தலைமை இல்லாத நிலை ஏற்பட்டு அதனால், தோல்வியை சந்திக்க நேரிட்டிருக்கிறது. மோடி அரசை பொறுத்தவரை, வன்முறைக்கு பயந்து பின்வாங்கினால், பிறகு அதற்க்கு எல்லையே இல்லாமல் போய்விடுவதோடு, நாடுடைய அனைத்து பாரம்பிரிய வரலாறுகளையும் வன்முறைக்கு அடகு வைத்த கதையாய் போய்விடும் என்பதால், இரும்புக்கரம் கொண்டு வன்முறைகளை நசுக்குவதை தவிர வெறி வழியில்லை. இது வன்முறையாளர்களுக்கு ஒரு பாடமாக அமையும் பட்சத்தில், அவர்கள் புதிய நெறிமுறைகளுக்கு தங்களை தயார் செய்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இந்த புதிய இந்தியா எல்லோரும் கூடி இனிமையாக வாழ வழிவகை செய்யும் அதே வேளையில், அத்து மீறுபவர்களை கடுமையாக எதிர்கொள்ளும். முன்பைப்போல யாராவது தங்களை செல்லக்குழந்தைகள் என்று நினைத்து அதிக உரிமைகள் எதிர்பார்த்தார்கள் என்றால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். முக்கியமாக வன்முறையாளர்கள் நெறிக்க படுவார்கள். அதை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது.
Rate this:
Share this comment
Cancel
thulakol - coimbatore,இந்தியா
01-ஜன-202010:36:05 IST Report Abuse
thulakol இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் மூல காரணம் ஐம்பது ஆண்டு காங்கிரஸின் தவறான ஆட்சி. நம்மை விட சரியான நாடான அரேபியா நாட்டினர் நம்மை விட பெரிய நாடு சீனா அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகள் மக்களுக்கு ரெசிடெண்ட் கார்டு கொடுத்துள்ளார்கள் அது இல்லாமல் எதுவும் செய்ய முடியாது ஆதார் கார்டுக்கு பதில் ரெசிடெண்ட் கார்டு கொடுக்க காங்கிரஸ் முயற்சி எடுத்திருக்க வேண்டும் பா சி க்கும் காங்கிரஸ் தி மு க விருக்கும் திருடுவதர்கே நேரம் போதவிலை அப்புறம் எப்படி நாட்டை காப்பாற்றமுடியும் , மக்களுக்கு எப்படி நல்லது செய்யமுடியும்
Rate this:
Share this comment
Cancel
iresentdinamalam - nammaoor,மயோட்
01-ஜன-202010:09:30 IST Report Abuse
iresentdinamalam ஹலோ குடியுரிமை சட்டத்தை பற்றி பேசுவதா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X