அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினிக்கே தர்பார்! மலைக்க வைக்கும், 'மைய' நாயகன்

Updated : டிச 31, 2019 | Added : டிச 31, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
ரஜினிக்கே, தர்பார், மலைக்க வைக்கும்,கமல், மாற்று அரசியல்,புத்தாண்டில், மைய நாயகன்,வேட்பாளர்

புத்தாண்டிலாவது புதிய மாற்றம் வருமா என ஏங்கும், அரசியல் ஆர்வலர்களுக்கும், அப்பாவி வாக்காளர்களுக்கும், இது மகிழ்ச்சி தரும் செய்தி. புதிய அரசியல் செய்ய புறப்படுகின்றனர், ரஜினியும், கமலும். சினிமாவில் சேர்ந்து நடித்தவர்கள், அரசியல் களத்திலும், 'இணை வலம்' வரும் காட்சிக்கு, இவ்வாண்டு ஆகஸ்டில், அரங்கேற்றம் நடக்கிறது.எதிரும் புதிருமாக இருப்போர், அரசியல் உறவாடுவது அதிசயமல்ல; ஆனால், தமிழ் திரையில், எம்.ஜி.ஆர்., - சிவாஜியை போல், போட்டி நட்சத்திரங்களாக ஜொலித்த, இரு உச்ச நடிகர்கள், அரசியலுக்காக, ஆட்சிக்காக கைகோர்ப்பது, தமிழகம் பார்த்திராத புதுசு.


இனிப்பான செய்தி'மாற்று அரசியல்' எனும் முழக்கத்துடன், களம் புகுந்த, 'நாயகன்' நடிகர் கமல், தனக்கென ஒரு மையத்தை ஏற்படுத்தி, மக்களையும், லோக்சபா தேர்தலையும் சந்தித்து முடித்திருக்கிறார். ஆறு கோடி வாக்காளர்கள் உள்ள மாநிலத்தில், 16 லட்சம் பேரின் ஆதரவை பெற்றது ஒன்றே, இவர் செய்துள்ள அரசியல் சாதனை.அடுத்ததாக, முதல்வர் நாற்காலிக்காக, தன்னையும், மையத்தையும் தயார்படுத்தும் வேலைகளில் இருப்பதாக, அவரை பற்றிய செய்திகள் சொல்லப்பட்டன. ஆனால், தான் விரும்பிய தர்பாரை, சக நடிகரும், 40 ஆண்டு கால நண்பருமான, ரஜினிக்கு விட்டுத் தரப் போகிறார் என்பது, வியப்பான செய்தி.இன்னமும் கட்சி துவங்காமல், பகுதி நேர அரசியல்வாதியாக இருப்பவர், நடிகர் ரஜினி. 'பேட்ட' தொடர்ந்து, தற்போது, 'தர்பார்' படத்தின் நாயகனாக, பொங்கலுக்கு அவதாரம் எடுக்கிறார். அடுத்தடுத்து, இரண்டு படங்களில் நடிக்கவிருக்கும் ரஜினியின் அரசியல் பயணம், புத்தாண்டில் ஆரம்பமாகிறது என்பது, அவரின் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி.


முதல்வர் வேட்பாளர்சரியாக ஓராண்டுக்கு முன், 2019 புத்தாண்டு செய்தியாக, 'நானும் அரசியலுக்கு வருவேன்; தனி கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்' என, சென்னையில், ரசிகர் கூட்டத்தில், ரஜினி, அவருக்கே உரித்தான ஸ்டைலில் பேசினார்; கைத்தட்டலோடு கலைந்தது கூட்டம்.அதன்பின், அவரது அரசியல் பங்களிப்புகள் எல்லாமே, அவ்வப்போது தரப்படும் பேட்டியும், பேச்சுமாக தான் இருந்தன. எந்த விவகாரத்திலும், தன் அரசியல் நிலைப்பாட்டை, அவர் உறுதியாக வெளிப்படுத்தியது இல்லை.

அதிர்ச்சியூட்டும் விதமாக, பா.ஜ., ஆதரவாளராக அறியப்பட்ட அவர், திருவள்ளுவர் விவகாரத்தில், 'என் மீது காவி சாயம் பூசும் முயற்சி எடுபடாது' எனக் கூறி, அக்கட்சியினரையும் அலற வைத்தார். அதற்கு அடுத்த வாரமே, கமலின், 60 ஆண்டு கால சினிமா பயணத்தை பாராட்டும் விழாவில், அவரோடு கைகோர்த்தார். அதற்கு அடுத்த நாளே, அரசியலில் இணைந்து செயல்படுவது பற்றிய செய்தியை, கமலும் - ரஜினியும் பறக்க விட்டனர். 'மக்கள் நலனுக்காக, ரஜினியுடன் இணைந்து செயல்பட தயார்' என கமலும், 'இருவரும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் வந்தால், நானும் தயார்' என, ரஜினியும் கூறி, அரசியல் வட்டாரத்தில், அதிர்வலைகளை உருவாக்கினர்.இந்த செய்தியை சொல்லி, இரு மாதங்கள் ஓடிய நிலையில், தற்போது, அதற்கு செயல் வடிவம் தரப்பட்டு உள்ளது. இரு தரப்பிலும் நடந்த ரகசிய சந்திப்பு, பேச்சுக்கு பின், சினிமாவில் சேர்ந்து நடித்த நாயகர்கள், அரசியல் களத்திலும் இணைந்து செயல்படுவது என்ற, உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.இருப்பது ஒரு நாற்காலி; இருவரும் இணைந்தால், அது யாருக்கு... இந்த கேள்விக்கும், இருவரும் பேசி முடிவுக்கு வந்துள்ளனர். அதாவது, ரஜினிக்கே தர்பார்! இருவரும் இணைந்த கூட்டணியின், முதல்வர் வேட்பாளர், ரஜினி.


சுதந்திர தினம்


அதற்கேற்ப, 'இப்ப வருவார்; அப்ப வருவார்' என, பேசப்பட்டு வந்த, ரஜினியின் அரசியல் பயணம், புத்தாண்டு ஆகஸ்டில் ஆரம்பமாக உள்ளது. வழக்கமாக, சுதந்திர தினத்தில், தேசிய கொடி ஏற்றுவது நம் வழக்கம்.ரஜினியோ, தன் கொடியை பறக்க விடுகிறார். அந்த நாளில், கட்சி பெயரையும், கொடியையும், சின்னத்தையும் வெளியிட்டு, ரசிகர்கள் சந்திப்பை நடத்தவிருக்கிறார் என்ற தகவல்கள், அவரது வட்டாரத்தில் கசிந்துள்ளன.

அடுத்த சட்டசபை பொதுத் தேர்தலை, 2021ல், தமிழகம் சந்திக்கவிருக்கிறது. அதற்கு ஆயத்தமாக, ரஜினி, தன் அரசியல் கட்சி துவக்கத்தை, 2020 ஆகஸ்டில் அறிவிக்க திட்டமிட்டுள்ளார். அதன் பின், அவரது ஈடுபாடும், அர்ப்பணிப்பும், அரசியலாக தான் இருக்கும் என்கிறது, அவரது ரசிகர் கூட்டம்.


கமலை கட்டிப்போட்ட ரஜினி!


*இருவரும் போட்ட திட்டம் தெரிந்ததோ, என்னவோ, தி.மு.க., தரப்பில் இருந்து, கமலுக்கு அழைப்பு வந்தது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, சென்னையில், தி.மு.க., கூட்டணி நடத்திய பேரணிக்கு வருமாறு, வீடு தேடிச் சென்று, கமலை அழைத்தனர். கமலும் வருவதாக தான் இருந்தது.

கடைசி நேரத்தில், கமலை போக விடாமல் கட்டிப் போட்டது, ரஜினி தான் எனச் சொல்லப்படுகிறது. 'நீங்கள் பங்கேற்றால், தி.மு.க., கூட்டணியில் சேரப் போவதாக, செய்தி வருமே...' என, ரஜினி சொன்னதை கேட்டு தான், கமல் பின்வாங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.*பா.ஜ., ஆதரவாளர் என, குத்தப்படும் முத்திரையை அழிக்கும்படி, கமல் கேட்டுக் கொண்டதன் காரணமாகவே, திருவள்ளுவரின் மதம் தொடர்பான சர்ச்சையில், தன் கருத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தாராம் ரஜினி. அதுவும், கமலின் பிறந்த நாளான, நவ., 7 அன்று!'காவி சாயம் பூசும் முயற்சியில், திருவள்ளுவர் மட்டுமல்ல; நானும் சிக்க மாட்டேன்' என, அவர் பேசியதன் பின்னணியில் இருப்பது, கமல் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்! - நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Thoothukudi,இந்தியா
03-ஜன-202016:09:35 IST Report Abuse
Raja காமாலஹாசனும் ரஜினியும் இணைந்து கட்சி நடத்துவது நடக்காத காரியம். ரஜினி ஆன்மீகவாதி. கமல் நாத்திகவாதி. தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவாக இருக்கற ஆளை தேசியவாதியுடன் இணைந்தால் குழப்பம்தான் வரும்.
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
03-ஜன-202011:45:43 IST Report Abuse
இந்தியன் kumar இரண்டு ஊழல் கலகங்களையும் வீழ்த்த நல்ல மாற்றம் வேண்டும்.
Rate this:
Cancel
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஜன-202020:19:10 IST Report Abuse
Niranjan இப்போது இருக்கும் அரசாங்கத்தை விட கமல் ரஜினி நல்லது செய்வார்கள் என்று நம்ம்பிக்கை இருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X