சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோஷ்டி மோதலாக மாறிய மகளிர் காங்., கோல போராட்டம்

Added : டிச 31, 2019 | கருத்துகள் (5)
Advertisement
 கோஷ்டி மோதலாக மாறிய  மகளிர் காங்., கோல போராட்டம்

சென்னை:குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, கோலம் போடும் போராட்டத்தை, தமிழக மகளிர் காங்கிரசார், நேற்று நடத்தினர். திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்ற மகளிர் காங்., நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, தமிழக காங்., தலைமை அலுவலகமான, சென்னை, சத்தியமூர்த்தி பவனில், மகளிர் காங்கிரஸ் சார்பில், கோலம் போடும் போராட்டம், நேற்று நடத்தப்பட்டது. கோஷம்மாநில தலைவி ஜான்சிராணி தலைமையில், வழக்கறிஞர் சுதா, மானசா பாத்திமா, சுமதி அன்பரசு, மைதிலிதேவி, கன்னிகா, மலர்கொடி உட்பட, 25க்கும் மேற்பட்டோர், வண்ணப் பொடிகளால், 'வேண்டாம் சி.ஏ.ஏ., - வேண்டாம் என்.ஆர்.சி.,' என, வரைந்தனர். பின், கோலத்தின் அருகில் நின்று, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திடீரென மகளிர் அணியினர், சாலை மறியல் போராட்டம் நடத்த வெளியே வந்தனர். தள்ளு முள்ளுஅவர்களை, மகளிர் போலீசார் தடுத்தனர். இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு சம்பவம் அரங்கேறியது. இதை, காங்கிரஸ் மனித உரிமை பிரிவின் நிர்வாகி பாபரா டஸ்அலி கண்டித்தார். அவருக்கு எதிராக, மகளிர் அணியினர் போர்க்கொடி துாக்க, மோதலாக மாறியது. உடனே, சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவராஜசேகரன் தலையிட்டு, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - muscat,ஓமன்
06-ஜன-202021:59:57 IST Report Abuse
anbu சட்டம் ஒழுங்கு கெடுக்கும் யாராக இருந்தாலும் போலீஸ் அடித்து நொறுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
06-ஜன-202017:59:55 IST Report Abuse
dandy அந்த வழியே ஆட்டோ வில் பிரயாணம் செய்ப்பவர்கள் அப்படியே சேலையை உருவி செல்லவும்
Rate this:
Share this comment
Cancel
Veluvenkatesh - Coimbatore,இந்தியா
06-ஜன-202011:14:00 IST Report Abuse
Veluvenkatesh இதுக்கு பேரு அலங்கோல போட்டி... விளங்கிடும். இதுக்கு நம்ம சுடலைதான் நல்லதொரு நாட்டாமை... தீர்ப்பு சொல்லணும்.
Rate this:
Share this comment
Jaya Ram - madurai,இந்தியா
07-ஜன-202012:19:04 IST Report Abuse
Jaya Ramஏன் அவரு கோலம் போட்டாத்தான் கோலம் நல்லா இருக்கும்னு சொல்லவாறீங்க அப்படித்தானே அதற்கெல்லாம் பயந்தா முடியுமா கோலம் இந்துமத சின்னம் அதை அவர் கையால் போடமாட்டார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X