எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

அரசியல் தலைவர்களுக்கு புத்தாண்டு எப்படி? : பிரபல ஜோதிடர்கள் கணிப்பு

Updated : டிச 31, 2019 | Added : டிச 31, 2019 | கருத்துகள் (31)
Share
Advertisement
அரசியல் தலைவர்கள் புத்தாண்டு எப்படி? : பிரபல ஜோதிடர்கள் கணிப்பு

அரசியல் தலைவர்களுக்கு, புத்தாண்டு, 2020 எப்படி அமையும் என, பிரபல ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதன் விபரம்:


ஆதித்ய குருஜி, சென்னை:


ஆங்கில புத்தாண்டு, அதிகமான ஜனத்தொகையை குறிக்கும், சனியின் ராசியான கும்ப ராசியில் பிறப்பதால், இந்தியாவிற்கு சுபிட்சத்தை தரும் ஆண்டாக இருக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி: இவருக்கு சந்திர திசை நடந்து கொண்டிருப்பதால், 2020 வளர்பிறை காலமாகவே இருக்கும். சில அரிய செயல்களை செய்து, இந்திய மக்கள் மனதில் இன்னும் இடம் பிடிப்பார்.

காங்., முன்னாள் தலைவர் ராகுல்: சிறப்பான ஜாதகத்தை பெற்றிருந்தாலும், இவரது ராசிப்படி, தற்போது ஏழரை சனி அமைப்பு நடந்து கொண்டிருக்கிறது. இது, முதல் சுற்று சனியாக செயல்பட்டு, இந்த ஆண்டு மத்திம பலனை தரும்; இன்னும் சில ஆண்டுகளுக்கு, லட்சியம் நோக்கி போகின்ற பயணம் மட்டும் தான்.

இ.பி.எஸ்., முதல்வர்: ஜோதிட ரீதியாக, ஒரு உச்ச நிலையை அடைந்து விட்டார். அந்த நிலையை, இவர் தக்க வைத்துக் கொள்ளும் ஆண்டாக, 2020 அமையும். இந்த ஆண்டு சரிவு இல்லை; அரசுக்கும் சிக்கல்கள் இருக்காது.

துணை முதல்வர் பன்னீர்செல்வம்: இந்த ஆண்டு, மகனால் புகழ் பெறும் அமைப்பு இருக்கிறது. இவரது புத்திர ஸ்தானம் வலுவடைந்திருப்பதால், இனி இவரது வாரிசின் வாயிலாக, அரசியல் எதிர்காலம் நன்றாக இருக்கும்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: மூன்று ஆண்டிற்கு, ஒரு முதன்மையான நல்ல அமைப்பு வந்துள்ளது. வருடாந்திர கிரகங்கள் அனைத்தும், மிக நல்ல பலனை தரும் நிலையில் இருக்கின்றன. இந்த ஆண்டு, ஒரு நல்ல எதிர்காலத்தின் படிக்கட்டாக அமையும் என்றால், அது மிகையில்லை.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: இந்த ஆண்டு, உடலும், மனமும் நன்றாக இருக்கக்கூடிய ஆண்டாக இருக்கும். ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர் என்ற நிலையை அடைந்து விட்டார். இவரது ஜாதக அமைப்பின்படி, அதுவே உச்ச பதவியாக இருக்கும்.

பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி: இந்த ஆண்டு நன்மைகளை தரும் ஆண்டாக அமையும். இவரது தந்தை ராமதாசுக்கு, இந்த ஆண்டுடன், ஏழரை சனி அமைப்பு முழுவதுமாக முடிவடைவதால், மகனை உயர்நிலையில் வைத்து பார்க்கக்கூடிய அமைப்பு உள்ளது.


நடிகர் ரஜினிகாந்த்: இவரது ஜாதகம் அரசியல் பற்றற்ற நிலையை கொண்டது. சூரியனை சனி பார்க்கும் அமைப்புள்ள இவருக்கு, அரசியலில் ஒரு அஸ்திவாரத்தை தரும் ஆண்டாக, 2020 இருக்கும்.

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்: உயர் நிலை யோகங்களை உடைய, நல்ல ஜாதகம். இவரது ராசிக்கு, தற்போது மிக சிறப்பான அமைப்பு இருக்கிறது. 2021ல் ஏற்படப் போகும் சிறப்புகளுக்கு, அடிகோலும் ஆண்டாக, 2020 அமையும். கமல் தவிர்க்க முடியாதவர் என்பதை நிரூபிப்பார்.


பரணீதரன், பாடி, சென்னை:பிரதமர் நரேந்திர மோடி: குரு, கேது, சனி இணைவு சில சங்கடங்களையும், எதிர்ப்புகளையும் உருவாக்கும். ராமேஸ்வரத்தில் நீராடி, தில ஹோமம் செய்தால், இந்த நிலையில் மாற்றம் உண்டாகும். சங்கடங்கள் உருவானாலும், அவற்றை எல்லாம் நீக்கி, சாதனை படைப்பார்.அண்டை நாட்டினர் வழியே உருவாகும் பகையை அடக்கி, வெற்றி காண்பார்.

காங்., முன்னாள் தலைவர் ராகுல்: இந்த ஆண்டில், ஒரு பக்கம் வெற்றி போல தோன்றினாலும், மறுபக்கம் தோல்வி என்ற நிலையே நீடிக்கும். சில தோல்விகளை சந்திப்பார். மதங்களை வைத்து, அரசியல் லாபம் தேடும் முயற்சியை, இவர் மேற்கொள்வார் என்றாலும், அதில் தோல்வியே உண்டாகும்.

இ.பி.எஸ்., முதல்வர்: பூர்வ புண்ணிய பலன்களை, முழுமையாக அனுபவிக்கும் ஆண்டாக, இந்த ஆண்டு இருக்கும். எதிர்ப்புகளை அடக்கும் வலிமை பெறுவார். அரசியலிலும், பொதுமக்களிடத்திலும், செல்வாக்கு அதிகரிக்கும். விலகி சென்றவர்கள், இவரது தலைமையை ஏற்று திரும்பி வருவர். செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கும்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம்: சில சோதனைகளை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். மனதை வாட்டுகின்ற, சில சம்பவங்கள் நடக்க வாய்ப்புண்டு. ஆன்மிகத்தில் மனம் செல்லும். இருக்கும் நிலையை தக்க வைத்துக்கொள்ள, நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: இந்த ஆண்டில், பூர்வ புண்ணிய பலன்கள் கிடைப்பது அரிதாகும். நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக மாறி, இவரது செல்வாக்கிற்கு சோதனை உண்டாகும். கூட்டணியால் எந்த நன்மையும் கிடைக்காமல் போகும். எதிர்பார்த்து செய்யும் முயற்சிகள், தோல்வியிலேயே முடியும்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: இந்த ஆண்டில், சில நம்பிக்கை துரோகங்களை சந்திப்பார். இருக்கும் நிலையில் மாற்றம் உண்டாகாது. எதிலும் நஷ்டமும் இல்லை; தோல்வியும் இல்லை. ஆண்டின் இறுதியில் உடல்நிலை சிறிது பாதிக்கப்படும் என்பதால், உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி:அன்னிய மொழி பேசுபவர்களால், ஆதாயம் உண்டாகும். செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கும். ஒரு முறை ராமேஸ்வரம் சென்று, அக்னி தீர்த்தத்தில் நீராடி, தில ஹோமம் செய்தால், யோகம் உண்டாகும்.

நடிகர் ரஜினிகாந்த்: தன் முடிவுகளை, அடிக்கடி மாற்றிக் கொள்வார். இவர் சொல்லில் உறுதி இருக்காது என்றாலும், இந்த ஆண்டு இறுதியில், அரசியல் பக்கம் செல்லும் நிலை உண்டாகும்.


மக்கள் நீதி மையம் தலைவர் கமல்: எதிர்காலம் குறித்து யோசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார். இந்த ஆண்டு இவருக்கு யோகமான ஆண்டு என்று கூற முடியாது. ஆண்டின் இறுதியில் இருந்து, இவரிடம் வேகம் தோன்றும். அரசியல் அரங்கில், அடுத்த ஆண்டில் இவரது செல்வாக்கு வெளிப்படும்.


சிவ.குரு.ரவி, விழுப்புரம்:பிரதமர் நரேந்திர மோடி: தற்போதுள்ள நிலைப்படி, சொந்த கட்சிக்கு உள்ளேயே, மற்றவர்கள் செய்யும் தவறுக்காக, இவரது பெயர் கெட வாய்ப்பு உண்டு. உடனிருக்கும் சிலரால், வீண் பழிக்கு ஆளாக நேரிடும்; விழிப்புணர்வு தேவை. அரசியலில் மிகவும் எச்சரிக்கை தேவை.

காங்., முன்னாள் தலைவர் ராகுல்: வெற்றி வந்து சேரும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். விலகி இருந்தோரும், எதிரணியில் இருந்தோரும், தேடி வந்து சரணடைவர்.

இ.பி.எஸ்., முதல்வர்: யோகங்கள் நிறைந்த ஆண்டாக அமையும். உயர்வான சிந்தனைகள் மேலோங்கும். எதிரிகள் பலவீனம் அடைவர். எதிர்கால அரசியலை மாற்றி அமைக்கும் பிம்பம், மனதில் தோன்றும். கட்சி தொண்டர்கள் மத்தியிலும் செல்வாக்கு அதிகரிக்கும். எதிலும் வெற்றி உறுதியாகும்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம்: புத்தாண்டில் துன்பம் இல்லாத, நல்ல அரசியல் உருவாகும். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்ப்புகள் அடங்கும். எதிர் அணியில் இருந்தவர்கள், இவர் தலைமையை ஏற்பர். உடல் ஆரோக்கியமும், புதிய நம்பிக்கையும் உண்டாகும்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: அரசியலில் நல்ல வாய்ப்பு உண்டு; நிதானம் தேவை. மூத்த தலைவர்கள் ஆலோசனை அவசியம். கட்சியின் நிலைப்பாட்டோடு, நடவடிக்கைகள் அமைந்தால், நல்ல வெற்றியை அடையலாம். கசந்த காலம் காணாமல் போகும். இனி, வசந்த கால வாசம் வீசும்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: அரசியலில் புதிய வாய்ப்புகள் வர உள்ளன. திடீர் அதிர்ஷ்ட காற்று வீசத் துவங்கி உள்ளது. உள்ளாட்சி தேர்தலிலும், அரசியலிலும் வெற்றி காண்பார்.

பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி: புத்தாண்டில், வரவேற்பு அதிகம் இருக்கும். குரு பெயர்ச்சியாகி, ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து, அரசியலில் ஒரு வல்லவனாக அழகுப்படுத்தி பார்க்கப் போகிறார்.


சிவ அண்ணாமலை தேசிகன், விழுப்புரம்:
பிரதமர் நரேந்திர மோடி: புத்தாண்டு கிரக நிலை அடிப்படையில், 65 சதவீதம் சாதகமான நிலை, 35 சதவீதம் பாதகமான நிலை உள்ளது. இந்தியாவின் ஜாதகப்படி, பிப்., 25 வரை, சனி சாதகமாக இல்லாததால், இந்தியாவை ஆள்பவர் என்ற வகையில், அதன் பாதிப்பு மோடியை தாக்கும்.பிப்., 26க்கு பின், மோடிக்கு பலம் வரும். எதிரிகளை பந்தாடுவார். 2024 வரை நடக்கும் சந்திரதிசை, அவரையும், இந்தியாவையும், உலக நாடுகள் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு உயர்த்தும். மஹாராஷ்டிராவில், பா.ஜ., - சிவசேனா ஆட்சி அமைய வாய்ப்புள்ளது.


காங்., தலைவர் சோனியா: இவருக்கு உடல்நிலை பாதிக்கப்படும். ஆட்சியில் அமரக்கூடிய வாய்ப்பு குறையும். இவர் தன் மகன் ராகுலை நம்புவதற்கு பதிலாக, மகள் பிரியங்காவிடம் பொறுப்பை ஒப்படைத்தால், காங்கிரஸ் தேறும்.


இ.பி.எஸ்., முதல்வர்: இவரது ஆட்சி தொடரும். சிறப்பான ஆட்சி அளித்து புகழ்பெறுவார். தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்கி, அவர்களின் குடும்பத்தில் ஒளியேற்றுவார்.


தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: கூட்டணி கட்சியினரின் பலம், மிகவும் குறைவான கிரகநிலையை அளித்துள்ளதால், இ.பி.எஸ்.,சுக்கு சிம்ம சொப்பனமாக வெளியில் தோன்றினாலும், உண்மையில் பலம் குறைவாகவே இருக்கும். காங்கிரஸ் உடனான கூட்டணியை விட்டு, தி.மு.க., விலகும் போது, காங்கிரசுக்கு அளிக்கும் இடத்தில், தி.மு.க., களம் காணும் போது, அவ்விடத்தில் வெற்றி பெறலாம்.


ஜோதிடர் ஆர்.கே.வரதராஜன், காஞ்சிபுரம்:


பிரதமர் நரேந்திர மோடி: மே மாதம் வரை, அதிக நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும். அதன்பிறகு மக்களின் ஆதரவு, அதிக அளவு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. வெளிநாட்டு பயணங்களின் போதும், உணவு விஷயத்திலும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

காங்., முன்னாள் தலைவர் ராகுல்: ஜூலைக்கு பிறகு நன்மை தரும் காலமாக இருக்கும். கடந்த காலத்தை விட, இந்த ஆண்டு பெரும்பாலும் நன்மையாகவே இருக்கும்.

இ.பி.எஸ்., முதல்வர்: இந்த ஆண்டு, மிகவும் பிரகாசமான ஆண்டாக இருக்கும். எதிரிகளை வென்று, அரசியல் வாழ்வில், பொது வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகளை, செப்டம்பர் மாதத்திற்கு பிறகு சரி செய்து கொள்வார்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம்: அரசியல் வாழ்வில், இவ்வளவு நாள் இருந்த சங்கடங்கள், சிக்கல்கள் நீங்கி, இந்த ஆண்டு நன்மை தரக்கூடியதாக அமையும். மார்ச் மாதத்திற்கு பிறகு, உடல் நலம், போக்குவரத்தில் கவனம் தேவை.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: மார்ச் மாதத்திற்கு பிறகு, சிறப்பான நன்மைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அரசியல் வாழ்க்கையில், பெரும் லாபங்களை எதிர்பார்க்கலாம். எனினும், கடுமையான சட்ட நெருக்கடிகளை, சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: இந்த ஆண்டு சோதனையான காலம் என்றே சொல்லலாம். செப்டம்பருக்கு பிறகு, சில நன்மைகள் ஏற்படக் கூடும். ஆண்டு கடைசி மிகவும் சோதனையான காலமாக இருக்கும்.

பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி: இந்த ஆண்டு, சாதாரண ஆண்டாகவே இருக்கும். அரசியலிலும், பொது வாழ்க்கையிலும், பெருத்த நன்மைகள், எதிர்பார்க்கக்கூடிய சூழ்நிலை இல்லை.

நடிகர் ரஜினிகாந்த்: உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். செப்டம்பர் மாதத்திற்கு பிறகு, ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு ஏற்படும். அரசியல் வாழ்க்கை, அவ்வளவு சிறப்பானதாக இல்லை.இவ்வாறு, ஜோதிடர்கள் கூறியுள்ளனர். - நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
07-ஜன-202020:05:14 IST Report Abuse
naadodi "சோதிடம்தனை இகழ்" சொல்லியவர் மஹாகவி சுப்ரமண்ய பாரதி
Rate this:
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
02-ஜன-202020:57:28 IST Report Abuse
s.rajagopalan இந்த ஆண்டு ஜோதிடர்களுக்கு கொண்டாட்டம். பூஜை புனஸ்காரம், ஹோமம் இத்யாதிகளை செய்ய சொல்லி குழப்பி பயனடைவர். மொத்த கணிப்புகளையும் படித்து முடித்தவுடன் 'முடிவு என்ன என்று யாராவது தெளிவாக சொன்னால் அவருக்கு ஒரு பெரிய பரிசு கொடுக்கலாம்
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
02-ஜன-202018:25:45 IST Report Abuse
Sanny அமித்ஷா பற்றி சொல்ல மறந்துவிட்டார், ஒருவேளை பாதகமாக இருக்குதோ?
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
04-ஜன-202018:11:25 IST Report Abuse
Sathya Dhara பாதகம் உமக்கும் உமது கும்பலுக்கும்தான். உங்கள் ஜோசியம் அவரை அசைக்காது. மக்களின் வாக்கு வங்கியும், தேசீய சேவையும் அவரை தூக்கி நிறுத்தும். துரோகிகள் பயப்படுவார்கள். நல்லவர்கள் வாழ்த்துவார்கள். புரிகிறதா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X