பொது செய்தி

தமிழ்நாடு

" தலையீடு இருக்காது' : ஆட்சி மாற்றத்தால் போலீசார் நிம்மதி

Added : மே 22, 2011 | கருத்துகள் (6)
Advertisement
" தலையீடு இருக்காது' : ஆட்சி மாற்றத்தால் போலீசார் நிம்மதி

"தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இனி அரசியல்வாதிகளின் தலையீடு இருக்காது' என, போலீசார் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

தமிழகத்தில் ஏற்கனவே, ஆட்சி பொறுப்பில் இருந்த தி.மு.க., அரசு, மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றிய போதிலும், ஆள் கடத்தல், ரவுடியிசம், கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கத் தவறிவிட்டது. சமூக விரோத சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு, தி.மு.க., அமைச்சர்கள் மட்டுமின்றி, எம்.எல்.ஏ.,க்களும் முக்கிய பொறுப்பில் இருந்தவர்களும் பரிவு காட்டி, போலீசாரின் நடவடிக்கைக்கு இடையூறாக இருந்தனர். அவர்களுக்கு கட்டுப்படாத போலீஸ் அதிகாரிகளுக்கு, மேல் மட்டத்தில் இருந்து உத்தரவுகள் வரும். தமிழகத்தில் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து முடிந்தன.

இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், நேர்மையான போலீஸ் உயர் அதிகாரிகள் முதல் கான்ஸ்டபிள் வரை மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில், தி.மு.க.,வினருக்கு ஆதரவாக, அப்பாவி மக்களை மிரட்டி, ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்த போலீசார் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல், ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே, சட்டம் - ஒழுங்கை காப்பாற்றும் நடவடிக்கையில், முதல்வர் களம் இறங்கி உள்ளார். முதல்கட்டமாக, போலீஸ் உயர் அ திகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.இது தவிர சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, கோவை ஆகிய மண்டலங்களில், பிரபல ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இருந்து முதல் மூன்று மாதத்துக்குள் குறைந்தது, 30 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும், தேவைப்படும் பட்சத்தில், "என்கவுன்டர்' செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.அ.தி.மு.க.,வினர், போலீஸ் துறை நடவடிக்கையில் அதிகம் தலையிடுவது இல்லை. தலையிடுவது மேலிடத்துக்கு தெரிந்தால், அது தங்களின் பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்பதால், போலீஸ் ஸ்டேஷன்களில் சிபாரிசுகளை தவிர்த்து விடுவர். எனவே, சாதாரண போலீசார் முதல், உயர் அதிகாரிகள் வரை, பாரபட்சம் இல்லாத நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நமது சிறப்பு நிருபர்

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-மே-201119:33:05 IST Report Abuse
ஒளறு வாயன் -ஒமலூர் தினமலர் நிருபரை....மாற்று...!! உளறி கொட்டி ..வாசகர் எண்ணிக்கை ..குறைகிறது !!!
Rate this:
Share this comment
Cancel
kunjumani - Chennai ,இந்தியா
23-மே-201103:28:30 IST Report Abuse
kunjumani ஜெவுக்கு போலீஸ் என்றால் எப்போதும் உள்ளூர ஒரு பயம் அதனால்தான் போலீசுக்கு அதிகாரம் கொடுத்து தாஜா செய்வார் , வீரப்பனை போலீஸ் கொன்றதால் தமிழகம் எவ்வாறு முன்னேறியது ? வீரப்பனை பிடிக்க எத்தனை மக்களை போலீஸ் எப்படியெல்லாம் சித்திரவதை செய்தது ? அது இலங்கை தமிழர்கள் சந்தித்த கொடுமையை விட அதிகம் .
Rate this:
Share this comment
Cancel
CUMBUM P.T.MURUGAN - TRICHY,இந்தியா
23-மே-201102:09:28 IST Report Abuse
CUMBUM P.T.MURUGAN எது எப்படியோ, புதிய அரசு மீது நம்பிக்கை வைத்து காவல் துறையினர் நடந்து கொள்ள வேண்டும். போலீசாரின் கை கட்டுக்கள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கு, இனி மேல் சீராக இருக்கும் என்று நம்புவோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X