ஓடும் காரில் திடீர் தீ: தப்பிய 5 பேர்

Added : ஜன 01, 2020 | |
Advertisement
ஓசூர்:சூளகிரி அருகே, ஓடும் காரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், டிரைவர் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிர் தப்பினர்.கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 55; மனைவி சுகுணா, 53. இவர்களுக்கு, 29 - 27 வயதில் இரு மகன்கள். அனைவரும், சென்னையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு, வெங்கடேஷின் நண்பருக்கு சொந்தமான, 'ஹூண்டாய் ஹெட்ஸ்' காரில் சென்று,

ஓசூர்:சூளகிரி அருகே, ஓடும் காரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், டிரைவர் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிர் தப்பினர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 55; மனைவி சுகுணா, 53. இவர்களுக்கு, 29 - 27 வயதில் இரு மகன்கள். அனைவரும், சென்னையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு, வெங்கடேஷின் நண்பருக்கு சொந்தமான, 'ஹூண்டாய் ஹெட்ஸ்' காரில் சென்று, திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், சூளகிரி அடுத்த கொல்லப்பள்ளி அருகே வந்தபோது, கார் இன்ஜினிலிருந்து புகை வந்துள்ளது. டிரைவர், காரை ஓரமாக நிறுத்தினார்.காரிலிருந்து அனைவரும் இறங்கிய சிறிது நேரத்தில், தீ மளமளவென பரவி, கார் முழுவதும் எரிந்து நாசமானது.காரின், 'ஏசி'யில் ஏற்பட்ட பழுதால், மின் கசிவு ஏற்பட்டு, கார் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டதால், வெங்கடேஷ் மற்றும் குடும்பத்தினர் உயிர் தப்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X