பொது செய்தி

தமிழ்நாடு

கழுத்தை நெரிக்கும் கடன் சுமை நிதி நெருக்கடியில் தள்ளாடும் தமிழக அரசு

Updated : ஜன 01, 2020 | Added : ஜன 01, 2020 | கருத்துகள் (40)
Advertisement
கழுத்தை நெரிக்கும் கடன் சுமை, நிதி நெருக்கடியில் தள்ளாடும் தமிழக அரசு

தமிழக அரசு, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அரசின் கடன், 4 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும், வருவாய் பற்றாக்குறை பட்ஜெட் போடப்படும் நிலையில், வரும் நிதியாண்டில், நிதி நெருக்கடியை சமாளித்து, பற்றாக்குறை இல்லா பட்ஜெட் போட, அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டு உள்ளது.
அ.தி.மு.க., அரசு தொடர்ந்து, ஏழாவது முறையாக, பற்றாக்குறை பட்ஜெட்டை, கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. 2014 - 15 நிதியாண்டில், 6,407 கோடி ரூபாய், வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. அடுத்த நிதியாண்டில், திருத்திய மதிப்பீடுகளின்படி, 9,481 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டது.


ரூ.4 லட்சம் கோடி கடன்கடந்த, 2016 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட, இடைக்கால பட்ஜெட்டில், 9,154 கோடி ரூபாயாக இருந்த பற்றாக்குறை, ஜூன் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இறுதி பட்ஜெட்டில், 15 ஆயிரத்து, 854 கோடி ரூபாயாக உயர்ந்தது.அடுத்து, 2017 பட்ஜெட்டில், 15 ஆயிரத்து, 930 கோடி ரூபாயாக, வருவாய் பற்றாக்குறை, 2018 - 19 பட்ஜெட்டில், 17 ஆயிரத்து, 490 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2019 - 20ம் ஆண்டில், வருவாய் பற்றாக்குறை, 14 ஆயிரத்து, 314 கோடி ரூபாயாக குறைந்தது.எனினும், அரசின் கடன் சுமை அதிகரித்தபடி உள்ளது. 2017 - 18ம் ஆண்டு பட்ஜெட்டில், 3.14 கோடி ரூபாய் கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 2018 - 19ம் ஆண்டு, 3.55 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன், தற்போது, தொகை வராமல் உள்ளது. ஜி.எஸ்.டி., வரி விதிப்பால் ஏற்பட்ட இழப்புக்கான மானியம், அனைவருக்கும் கல்வி திட்டம், மத்திய இடைநிலைக் கல்வி இயக்கக திட்டம், நிதி ஆணைய பரிந்துரைகளின்படி வழங்க வேண்டிய தொகையின் நிலுவை என, 7,000 கோடி ரூபாய்க்கு மேல், மத்திய அரசு தர வேண்டியுள்ளது.


தென்காசி மாவட்டம்இது தவிர, உள்ளாட்சி தேர்தல் நடக்காததால், உள்ளாட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகையையும், மத்திய அரசு வழங்காமல் உள்ளது. இத்தொகைகளை வழங்கினால், தமிழக அரசுக்கு உதவியாக இருக்கும். உள்ளாட்சிகளுக்கான தொகையை பெறுவதற்காகவே, தற்போது, ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, தேர்தல் நடத்தப்படுகிறது.தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லுார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, ராயகிரி பேரூராட்சி மண்டபத் தெருவில், சாலை குண்டும், குழியுமாக உள்ளது.வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ - மாணவியர், சாலையில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் எனக் கோரி, அப்பகுதியை சேர்ந்த மாரிமுத்து, முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், மனு கொடுத்தனர்.அதற்கு, அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதிலில், 'ராயகிரி பேரூராட்சியில், போதிய நிதி வசதி இல்லாத நிலை உள்ளது.அரசின் திட்ட நிதி கிடைக்கும்பட்சத்தில், பழுதடைந்த சாலையை சீரமைத்து செய்து கொடுக்க இயலும் என, ராயகிரி பேரூராட்சி செயல் அலுவலர் பதில் அளித்துள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறையில்லாத பட்ஜெட்இதேபோன்ற நிலை தான், அனைத்து துறைகளிலும் உள்ளது. ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு மட்டும், நிதி ஒதுக்கப்படுகிறது. புதிய திட்டங்களுக்கு, நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது.நிதித் துறைக்கு அனுப்பும் கோப்புகள், திருப்பி அனுப்பப்படுவதாக, துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். துறை அதிகாரிகள், திட்ட மதிப்பீடு தொடர்பாக, முறையான கருத்துருவை அனுப்புவதில்லை. இதன் காரணமாக, பல கோப்புகள் திருப்பி அனுப்பப்படுகின்றன என, நிதித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகளை செயல்படுத்த, நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்படும். அந்த அரசாணைகள், அரசு இணையதளத்தில் வெளியிடப்படுவதில்லை. இதனால், திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை, மக்கள் அறிய முடியாத நிலை உள்ளது.தமிழக அரசு, அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகளை துவக்கி உள்ளது. நிதி நிலையை சரிசெய்து, வரும் நிதியாண்டிலாவது, பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யவும், கடன் சுமையை குறைக்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?


என்ன செய்யலாம்?பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் சமர்ப்பிக்க, அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, நிதித் துறை அலுவலர்கள் சிலர் கூறியதாவது:அரசியல் காரணங்களுக்காக, சில திட்டங்களை செயல்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு, கூடுதல் நிதி தேவைப்படுகிறது; இதை தவிர்க்க வேண்டும். எதையாவது அறிவிக்க வேண்டும் என்பதற்காக, அந்த திட்டம் அவசியமா என்பதை அறியாமலேயே, அமைச்சர்கள் அறிவிக்கின்றனர்.இது போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பது தேவையற்றது. அரிசி வேண்டாம் எனக் கூறி, சர்க்கரை கார்டு பெற்றவர்களையும், பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக, அரிசி கார்டாக மாற்றிக் கொள்ள, அரசு வாய்ப்பு வழங்கியது; இது மிகவும் தவறானது.ஏற்கனவே, அரிசி கார்டு வைத்திருப்போரில், 60 சதவீதத்திற்கும் மேலானவர்கள், ரேஷன் கடைகளில், அரிசி வாங்குவதில்லை. இதற்கு, அரசு மானியம் வீணாகிறது. கார்டுதாரர்கள், அரிசி வாங்காவிட்டாலும், அவர்கள் வாங்கியதாக கணக்கெழுதி, அரிசி, வெளியில் விற்பனை செய்யப்படுகிறது.இதைத் தடுக்க, அரிசி வேண்டாம் என்போர், சர்க்கரை கார்டுதாரராக மாறிக் கொள்ளலாம் என, அரசு அறிவிக்க வேண்டும். அதற்கு பதிலாக, அவர்களையும் தவறுக்கு துணை போக செய்வது, தவறான முன்னுதாரணம். அரிசி கார்டுதாரர்கள், சர்க்கரை கார்டுதாரர்களாக மாறினால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய், அரசுக்கு மிச்சமாகும். இதுபோன்ற தேவையற்ற செலவுகளை தவிர்த்து, வருவாயை பெருக்கினால், பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் போட முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02-ஜன-202003:00:31 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நிர்வாக திறமை.. உலக வங்கி அதிகாரிகளுக்கே லஞ்சகுளியல் குளிப்பாட்டி பல்லாயிரம் கோடி கணக்கில் கடன் வாங்கி கொள்ளையடிக்கும் ஈனக்கும்பல் ஆட்சியில் அமர்ந்துள்ளது. இதன் பயங்கரத்தை பற்றி சற்றும் கவலைப்படாமல் அடிமைக்கூட்டம் ஹைவேஸ்கொள்ளையனையும், மணல் மாபியா தலைவனையும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். பூமிக்கு அடியில் இல்லாத மழைநீர் வடிகால், கழிவுநீர் திட்டங்களை செய்ததாக பல லட்சம் கோடி கொள்ளையடித்த கும்பலை தான் நிர்வாக திறமை உள்ள கூட்டமென்று கமிஷன் வாங்கிய கட்சி சர்டிபிகேட் கொடுத்துள்ளது.
Rate this:
Share this comment
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
02-ஜன-202021:43:41 IST Report Abuse
 nicolethomsonநல்லவேளை நீங்க சொல்ற கும்பல் கடற்கரையில் போயி அச வெச்சுகிட்டு இணைவு துணைவி என்று உட்கார்ந்து தமிழர்களை கொலைசெய்யவில்லை...
Rate this:
Share this comment
Cancel
Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
01-ஜன-202018:08:43 IST Report Abuse
Sathiamoorthy.V தங்களுக்கு ஆயிரம் ரூபாய் வந்தால்தான் அரசுக்கு ஐநூறு ரூபாய் கஜானாவில் சேர்க்கும் அதிகாரிகளை முதலில் தூக்குங்கள் .அவர்களால் மக்கள் அரசு பக்கம் போவது இல்லை ஒரு பட்டா கேட்டு வருபவர்களை அலைக்கழிப்பவர்கள் நிறைய பேர் அரசாங்க கஜானாவுக்கு பணம் வாங்காமல் அவர்கள் பாக்கெட்டுக்கு வாங்குவதிலேயே குறியாக இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள் இறைவா நல்ல ஆட்சியை கொடு .
Rate this:
Share this comment
Cancel
Perumal - Chennai,இந்தியா
01-ஜன-202017:25:21 IST Report Abuse
Perumal Where is Santosh gopal.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02-ஜன-202003:00:54 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்கமிஷனை எண்ணி கொடுக்கிறான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X