பொது செய்தி

இந்தியா

உச்சத்தில் தங்கம்: 2019ல் பவுனுக்கு ரூ.5,768 உயர்வு

Updated : ஜன 01, 2020 | Added : ஜன 01, 2020 | கருத்துகள் (5)
Advertisement
goldprice,gold,price,2019,welcome2020,NewYear2020,happynewyear2020,NewYear,தங்கம்,விலை,உயர்வு

இந்த செய்தியை கேட்க

சென்னை: தமிழகத்தில் 2019ல் மட்டும் ஆபரண தங்கம் விலை பவுனுக்கு 5,768 ரூபாய் உயர்ந்துள்ளது.

சர்வதேச நிலவரங்களை பொறுத்து உள்நாட்டில் தங்கத்திற்கு தினமும் காலை மாலை என இரு வேளைகளில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மாலை நிலவரமே அன்றைய தின விலையாகக் கருதப்படுகிறது. முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்ததால் நேற்று கிராம் தங்கம் 3,742 ரூபாய்க்கும்; பவுன் 29 ஆயிரத்து 936 ரூபாய்க்கும் விற்பனையானது.

ஓராண்டில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 721 ரூபாய் உயர்ந்து 3,742 ரூபாயாக அதிகரித்துள்ளது. பவுனுக்கு 5768 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 936 ரூபாயாக உயர்ந்துள்ளது.






உச்ச விலை:


தமிழகத்தில் 2019 செப்டம்பர் 4ம் தேதி பவுன் தங்கம் விலை முதல் முறையாக 30 ஆயிரம் ரூபாயை தாண்டி புதிய சாதனை படைத்தது. அதன்படி அன்று காலை 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 3765 ரூபாய்க்கும்; பவுன் 30 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனையாகின. அன்று மாலை கிராம் தங்கம் 3741 ரூபாயாகவும்; பவுன் 29 ஆயிரத்து 928 ரூபாயாகவும் குறைந்தன. இதுவே தங்கம் விற்பனையில் உச்ச விலையாகும்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
01-ஜன-202016:56:18 IST Report Abuse
ANANDAKANNAN K இன்னும் தங்கம் விலை அதிகரிக்கும் , உலக மத்திய வங்கிகள் தங்கள் தங்க இருப்பை அதிகரிப்பது தான் தங்கத்தின் விலை அதிகரிக்கிறது, எடுத்துக்காட்டாக நம் RESERVE பேங்க் இந்த ஆண்டில் ஒரு டன் தங்கத்தை தன் இருப்பில் வாங்கி வைத்துள்ளது, மேலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்குவது அதிகரித்து உள்ளது, ஒரு பல மொழி "தங்கம் என்று அதன் மதிப்பை இழப்பதில்லை".
Rate this:
Share this comment
Cancel
லிங்கம்,சென்னை காங்கிரஸ் ஆட்சில இருந்த போது தங்கத்தை டன் டன்னா கடத்தி வந்தாங்க... அதனால தங்கம் விலை குறைவா இருந்துச்சு...இப்ப மோடி அரசுதான் திருச்சி விமான நிலையத்தில் இரண்டு கிலோ தங்கம் பிடிபட்டது...சென்னை விமான நிலையத்தில் நான்கு கிலோ தங்கம் பிடிபட்டதுன்னு தினம் தினம் பிடிச்சு கடத்தல்காரர்களை போட்டோவோடு பத்திரிக்கையில போட்டா அப்புறம் தங்கம் விலை ஏறாம என்ன செய்யும்...தங்கம் கொண்டு வந்தா வரி கட்டித்தான் கொண்டு வரனுமுன்னா தங்கம் விலை ஏறாதா....?
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
01-ஜன-202013:51:43 IST Report Abuse
Rayபோட்டோல்லாம் போட்டா பத்தாது அதெல்லாம் எங்கே போனதுன்னும் போடணும் அல்லவா...
Rate this:
Share this comment
Anumanthan Gnanasekaran - Lusaka,ஜாம்பியா
01-ஜன-202014:27:04 IST Report Abuse
Anumanthan Gnanasekaranதங்கம் கடத்தி வந்தால் குருவிகளும் கடைக்காரர்களும் தான் அதிக லாபம் சம்பதிப்பார்கள். சர்வதேச தங்கத்தின் விலை பல்வேறு காரனுகளுக்குக்கா ஏற்ட்டம் இரக்கம் காண்கிறது....
Rate this:
Share this comment
Cancel
01-ஜன-202007:21:24 IST Report Abuse
ஆப்பு டிமாண்ட் இல்லாம எப்பிடி விலை உயரும்? ஆளுக்கு 15 லட்சம் கிடைச்சதை மக்கள் தங்கமா வாங்கி சேமிக்கறாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X