பொது செய்தி

இந்தியா

மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம்: ராணுவ தளபதி

Updated : ஜன 01, 2020 | Added : ஜன 01, 2020 | கருத்துகள் (4)
Advertisement
இந்தியராணுவம், ராணுவதளபதி, மனோஜ்முகுந்த், முப்படை, Indianarmy, armychief, manojmukund,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: மனித உரிமைளை மதிக்க , இந்திய ராணுவம் சிறப்பு கவனம் செலுத்துவோம் என ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார்.





ராணுவ தளபதியாக நேற்று(2019 டிச.,31) பொறுப்பேற்று கொண்ட நரவானே, டில்லியில் உள்ள, தேசிய போர் நினைவிடத்தில் மலர் வைத்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்று கொண்டார்.





பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ராணுவ தளபதியாக எனது கடமையை செய்ய தைரியத்தையும், பலத்தையும் வழங்க வேண்டும் என வேண்டி கொள்கிறேன். அனைத்து சூழ்நிலைகளிலும் நாட்டை காக்க முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன. அனைத்து சூழ்நிலைகளிலும் தயார் நிலையில் இருப்பதற்கு முக்கியத்துவம் அளிப்போம். மனித உரிமைளை மதிக்க சிறப்பு கவனம் செலுத்துவோம்.

கடந்த காலங்களில், நாம் மேற்கு பிராந்தியத்தில் நாம் கவனம் செலுத்தினோம். வடக்கு பிராந்தியத்திலும் அதே அளவு கவனம் செலுத்த வேண்டும். நாட்டில், எந்த அச்சுறுத்தலையும் சமாளிக்கும் திறமை நம்மிடம் உள்ளது. இதன் அடிப்படையில், நாட்டின் வடகிழக்கு பகுதிகள் உட்பட வடக்கு எல்லைகளில் திறன்களை மேம்படுத்த உள்ளோம். எல்லையில், அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நம்மால் பராமரிக்க முடியும். அந்த சூழ்நிலை தொடரும். இவ்வாறு நரவானே கூறினார்.







பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை


முன்னதாக ராணுவ தளபதி நரவானே அளித்த பேட்டி: நமது அண்டை நாடு, பயங்கரவாதத்தை கொள்கையாக வைத்து கொண்டு, நமக்கு எதிராக மறைமுக போரில் ஈடுபட்டுவதுடன், அதனை அந்நாடு மறுக்கிறது. ஆனால், நீண்ட நாட்கள் இதனை மறைக்க முடியாது. அனைவரையும், எல்லா நேரத்திலும் முட்டாளாக்க முடியாது. பயங்கரவாதத்திற்கு எதிராக, கடுமையான பதிலடி கொடுப்பதற்கான திட்டத்தை உருவாக்கியுள்ளோம். பயங்கரவாதத்திற்கான ஆதரவை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால், பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான உரிமை நமக்கு உள்ளது. பாகிஸ்தான் ஆதரவு அல்லது நிதியுதவி அளிக்கும் பயங்கரவாத செயல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
01-ஜன-202019:28:36 IST Report Abuse
Sampath Kumar அஸ்ஸாமில் ஏற்கனவே தடுப்பு முகாம் பல ஆயிரம் பேர் y அடைப்பு
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
01-ஜன-202018:16:24 IST Report Abuse
jagan ஜனநாயகத்திற்கு இனி சங்கு தான்....
Rate this:
Share this comment
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
01-ஜன-202016:18:27 IST Report Abuse
ANANDAKANNAN K வாழ்த்துக்கள் புதிய படை தளபதியே, உங்கள் ஆசை கூடிய விரைவில் நடக்கும், பாகிஸ்தான் என்ற நாடு ஏற்கனவே அமெரிக்காவால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது, மேலும் உலக நிதி மையம் பாகிஸ்தானுக்கு எச்சரியாக GREY பட்டியலில் சேர்த்துவிட்டது, மேலும் இந்த அமைப்பு 200 மேற்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ஜனவரி 2020 வரை கால கேடு கொடுத்து உள்ளது அப்படியும் அவர்கள் திருந்தவில்லை என்றால் அவர்கள் கருப்பு பட்டியலில் சேர்த்து விடும் இதனால் சர்வதேச நாடுகள் அவர்களுக்கு நிதி தராது, இதனால் பொருளாதார ரீதியாக பெரும் சறுக்கலை சந்திக்க நேரிடும் இதனால் நம் கூட அவர்கள் போர் செய்ய நிதி இருக்காது, இனிமேல் அவர்கள் பேச்சு ஒரு மெண்டல் பேசும் பேட்சகத்தான் இருக்கும், மேலும் அவர்களை உலக நாடுகள் தீவிரவாதிகள் நாடு என்று பட்டம் கொடுக்கும், நீங்கள் கவனம் செலுத்துவது ஓன்று மட்டுமே வங்கதேசத்தில் இருந்துவரும் ஊடுருவல்காரர்களை சுட்டு தள்ளி இந்தியாவை காப்பாற்றினால் போதும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X