பொது செய்தி

இந்தியா

அரசியல் எங்களுக்கு வேண்டாம்: முப்படை தளபதி

Updated : ஜன 01, 2020 | Added : ஜன 01, 2020 | கருத்துகள் (14)
Advertisement
CDS, BipinRawat, politics,  முப்படை,  முப்படைதளபதி, பிபின்ராவத்

புதுடில்லி: முப்படைகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டவை எனவும், அரசின் வழிகாட்டுதல்படி தான் செயல்படுவோம் என முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.




முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட பிபின் ராவத் இன்று (ஜன.,1) பொறுப்பேற்று கொண்டார். முன்னதாக அவர். டில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது, ராணுவ தளபதி நரவானே, விமானப்படை தளபதி பதூரியா, கடற்படை தளபதி கரம்பிர் சிங் மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.





பின்னர் பிபின் ராவத் கூறுகையில், முப்படைகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கும். அரசியல் எங்களுக்கு வேண்டாம். அரசின் வழிகாட்டுதல்படி மட்டுமே செயல்படுவோம். முப்படைகளையும் ஒருங்கிணைத்து ஒரே அணியாக செயல்பட தலைமை தளபதியாக கவனம் செலுத்துவேன். முப்படைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முயற்சி செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.







பிரதமர் வாழ்த்து

முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: இந்த புதிய ஆண்டு துவங்கும் போது, இந்தியாவிற்கு முதல் முப்படை தலைமை தளபதி கிடைத்துள்ளார் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மிகப்பெரிய பொறுப்பு கிடைத்ததற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மிகுந்த ஆர்வத்துடன், இந்தியாவுக்காக உழைத்த சிறந்த அதிகாரி என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
02-ஜன-202007:56:28 IST Report Abuse
arudra1951 இந்தப்பதவி அவசியமா ? இந்த மாதிரி பதவியை உண்டாக்க காரணம் என்ன ?
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
02-ஜன-202007:24:51 IST Report Abuse
konanki இந்தியா ஒரு நாளும் பாகிஸ்தான் போல ஆகாது
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
01-ஜன-202019:48:37 IST Report Abuse
konanki //இந்தியா என்னவாகுமோ?// உங்களை மாதிரி ஆட்கள் இந்தியாவிற்கு எதிராக வேலை செய்தாலும் இந்தியா கண்டிப்பா முன்னேறும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X