பொது செய்தி

இந்தியா

தூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: இஸ்ரோ

Updated : ஜன 01, 2020 | Added : ஜன 01, 2020 | கருத்துகள் (38)
Advertisement
tuticorn, spaceport, isro, sivan, isrosivan, isrochiefsivan, chandrayaan-3, chandrayaan-2, ghanyaan, space, lander, rover, தூத்துக்குடி, சந்திரயான்-3, சந்திரயான்-2, விண்வெளி, இஸ்ரோ, இஸ்ரோதலைவர்சிவன்,இஸ்ரோசிவன், ககன்யான், லேண்டர், ரோவர், ராக்கெட்ஏவுதளம்,

பெங்களூரு: தூத்துக்குடி அருகே குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகபடுத்தும் பணி துவங்கிவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

பெங்களூருவில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும். இதற்காக நிலம் கையகபடுத்தும் பணி துவங்கிவிட்டது. விரைவில் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும். மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். விரைவில் 6 ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்.

சந்திரயான்- 3 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சந்திரயான் -3 லேண்டர் மற்றும் ரோவர் மாடலில் இருக்கும். சந்திரயான் -2 திட்டத்தில் லேண்டர் வேகமாக சென்று நிலவில் மோதியதால் வெற்றிகரமாக தரையிறக்க முடியவில்லை. இருப்பினும் ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது அடுத்த 7 ஆண்டுகளுக்கு அறிவியல் தகவல்களை அளிக்கும். இவ்வாறு சிவன் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஜன-202020:54:12 IST Report Abuse
Tamilan திருநெல்வேலியிலோ அல்லது கல்வித்தந்தை காமராஜர் பிறந்த விருதுநகரிலோ , இஸ்ரோ கட்டுப்பாடு மையமும் சேர்த்து அமைக்கவேண்டும் . இங்கிருந்து ஏவிவிட்டு மற்ற மாநிலங்களில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தை நம்பியிருக்கமுடியாது . இல்லையெனில் இத்திட்டம் முழுமை பெறாது . லேண்டரின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் .
Rate this:
Share this comment
natarajan s - chennai,இந்தியா
02-ஜன-202005:58:33 IST Report Abuse
natarajan sஎப்போதுமே ராக்கெட் ஏவுதளம் கடற்கரை பகுதியில் தான் அமைக்கப்படும், ஏவும்போது தவறு நடந்தால் அப்படியே தண்ணீருக்குள் விழுந்து மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது, விருதுநகரில் வைத்தால் mishap நடந்தால் அப்போது என்ன சொல்வீர்கள், தும்பாவில் இருந்த ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு மாற்றியதே இந்த ஒரு காரணத்துக்குத்தான், மேற்கே செலுத்தி கிழக்காக சுற்றிவரும்பொழுது ராக்கெட் பழுதானால் நமது நாட்டின் நிலப்பரப்புக்குள் விழும் அபாயம் உள்ளதால் அங்கிருந்து மாற்றப்பட்டது, மேலும் பூமியின் orbit கிழக்கு மேற்காக சுற்றிவதால் South East பகுதியில் இருந்து ஏவப்படுவதால் escape வேலோஸிட்டி , ராக்கெட் எரிபொருள், அதன் எடை எல்லாம் குறையும். இது ஒரு அல்டெர்னட் சைட் திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ளதால் Logistics எளிதாக இருக்கும். அவளவுதான்....
Rate this:
Share this comment
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜன-202017:19:58 IST Report Abuse
Tamilanஏற்கனவே திட்டமிட்ட ஏவுதளத்தை மாற்றச்சொல்லவில்லை . பெங்களூரில் உள்ள கட்டுப்பாடு மையம் போல கட்டுப்பாடு மையம் பற்றித்தான் தான் மேலே கூறப்பட்டுள்ளது . ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவிய சந்திரயான் லேண்டரும், பெங்களூரில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திலிருந்துதான் செயல்படுத்தப்பட்டது ....
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
01-ஜன-202019:54:23 IST Report Abuse
konanki மிஷின(ந)ரிகள், மத போதகர்கள் அரசியல் கட்சிகளை தூண்டி விட்டு துஷ் பிரச்சாரத்தால் இந்த திட்டம் தடை பெறாமல் நிறைவேற பொது மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Karthik - Doha,கத்தார்
01-ஜன-202019:31:01 IST Report Abuse
Karthik சுடலைக்கு வாழ்வு. போராட்டத்திற்கு காரணங்கள் தேடிவருகின்றன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X