சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலை உயர்வு

Updated : ஜன 01, 2020 | Added : ஜன 01, 2020 | கருத்துகள் (7)
Advertisement
காஸ்சிலிண்டர், விலைஉயர்வு, சென்னை, கோல்கட்டா, டில்லி,மும்பை,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லாத காஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று (ஜன.,1) முதல் அமலுக்கு வந்துள்ளது. தொடர்ச்சியாக 5வது மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டில்லி மற்றும் மும்பையில், ஒரு சிலிண்டரின் விலை முறையே ரூ.19 மற்றும் ரூ.19.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வுக்கு பின்னர் காஸ் சிலிண்டரின் விலை டில்லியில் ரூ.714 ஆகவும், மும்பையில் ரூ.684.50 ஆகவும் உள்ளது. ஒரு காஸ் சிலிண்டர் கோல்கட்டாவில் ரூ.21.5 விலை உயர்த்தப்பட்டு ரூ.747 ஆகவும், சென்னையில் ரூ.20 உயர்த்தப்பட்டு ரூ. 734க்கு விற்பனையாகிறது. கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் முதல், தற்போது வரை மானியம் இல்லாத காஸ் சிலிண்டர் விலை மொத்தம் ரூ.140 விலை உயர்ந்துள்ளது.
தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலையை கொடுத்துதான் வாங்க வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Tirunelveli,இந்தியா
01-ஜன-202019:29:20 IST Report Abuse
Sundar - சென்னைக்கு எரிவாயு குழாய் கொண்டு வருவத காங்கிரஸ்-திமுக தடுத்திட்டாங்க சரி...5 வருஷம் முடிஞ்சி அடுத்த ஆட்சியும் உங்க ஆட்சி தானே - திட்டத்த செயல்படுத்த அடிக்கல்ல்லாவது நாட்ட வேண்டியது தானே -
Rate this:
Share this comment
Cancel
01-ஜன-202016:10:43 IST Report Abuse
ஆப்பு 5 டிரில்லியன் பொருளாதார வளைர்ச்சி. அதுக்கு நான் கேரண்ட்டி.. பட்ஜெட்ல விலை ஒசத்துனாதானே பொல்லாப்பு. முன்னாடியே ஒசத்தி புதுமை, புரட்சி பண்றாங்கோ...
Rate this:
Share this comment
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
01-ஜன-202015:42:45 IST Report Abuse
ANANDAKANNAN K மக்கள் காஸ் விலை அதிகரிக்கிறது என்று தான் மின்சார அடுப்புக்கு மாறினார்கள் ஆனால் இப்போ என்ன நடக்குது, ஒரு வீட்டிற்கு இவ்ளோ யூனிட் மின்சாரம் தான் பயன்படுத்தனும் அப்படி இல்லை என்றால் மானிய விலை மின்சாரம் cut பண்ணிட்டு அதிக விலை tarrif கொண்ட நடைமுறைக்கு பணம் கட்ட வேண்டும் என்ற நிலை உள்ளது, அரசாங்கம் மக்களை இரண்டு பக்கமும் வஞ்சிக்க கூடாது, மேலும் காஸ் விலை ஏறும் தானே, இதனால் பாதிக்க படும் முதல் ஆட்கள் டி கடை நடத்தும் நண்பர்கள் தான், ஏற்கனவே சந்து போந்து எல்லாம் டி கடை வைத்து போட்டி சூழல் உள்ளது மேலும் ஒரு இடியாக காஸ் விலை அதிகரிப்பு, டி கடை நடத்தும் ஆட்கள் ஒன்னும் மெத்த படித்துவரும் இல்லை பணக்காரருக்கு இல்லை இதை தெரிந்து அரசு மானியத்தை கொடுத்தால் நல்லது.
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
01-ஜன-202016:40:30 IST Report Abuse
ஆரூர் ரங்மாநியமுள்ள வீட்டு கேசுக்கு வழக்கம்போல மானியம் தேடிவரும். இதனால் உமக்கு என்ன இழப்பு? உஜாலா திட்டத்தால் பலகோடிபேர் மானிய கேஸ் இணைப்பு பெற்று விற்குப் பயன்பாட்டை தவிர்த்துள்ளனர் அதனால் பல ஆயிரம் ஏக்கர் காடுகள் காப்பாற்றப்பட்டுள்ளனவே...
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
01-ஜன-202016:42:20 IST Report Abuse
ஆரூர் ரங்மும்பை டெல்லிபோல சென்னையிலும் குழாய்மூலம் சமையல் வாயு திட்டம் உள்ளூர் திமுக காங்கிரஸ் அரசியல்வாதிகளால் முடங்கியுள்ளது . விரைவில் செயல்படுத்தினால் முப்பது சதவீதம் வரை பணம் மிச்சம் . கேஸ் சிலிண்டருக்காக காத்திருக்கவேண்டிய அவலமில்லை...
Rate this:
Share this comment
01-ஜன-202019:17:20 IST Report Abuse
V Venkatachalam,  Chennai 87கவர்மென்ட் எல்லாத்தையும் free ஆக கொடுத்தால் உனக்கு ரொம்ப பிடிக்குமா? உழைத்து சாப்பிட விரும்பும் எவனும் இந்த மாதிரி நினைக்கவே மாட்டான்....
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
02-ஜன-202001:11:06 IST Report Abuse
Rayஒங்க கொள்கை மிக நல்லதுங்க அதை அப்படியே நாம் ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்கற MLA MP அவங்க தேர்வு செய்யற ராஜ்ய சபா உறுப்பினர்கள் அனைவருக்கும் பரம்பரைக்கு லூட்டியன்ஸ் மாளிகைகள் A - Z வகை பாதுகாப்பு கைநிறைய சம்பளம் கொடுத்த பின்னும் இலவச ரயில் விமான பயணம் டெலிபோன் விலை உயர்ந்த வகைக்கார்களுக்கு பெட்ரோலுடன் பார்லிமென்ட் கான்டீன் இன்னபிற சலுகைகளை வாபஸ் பெற சொல்லுங்க ஒங்களுக்கு புண்ணியமா போகட்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X