பெரம்பலூரில் ஒளிந்திருந்த நெ.கண்ணன் கைது

Updated : ஜன 02, 2020 | Added : ஜன 01, 2020 | கருத்துகள் (222)
Advertisement
பெரம்பலூர்: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, திருநெல்வேலியில் நடந்த ஒரு முஸ்லிம்கள் மாநாட்டில், பிரதமர் மோடி, அமித்ஷா 'ஜோலி'யை முடிக்க சொன்ன நெ.கண்ணன், பெரம்பலூரில் தனியார் ஓட்டலில் ஒளிந்திருந்த போது கைது செய்யப்பட்டார்.திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில், டிச.,29ம் தேதி, ஒரு முஸ்லிம்கள் அமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த கூட்டம் நடந்தது.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பெரம்பலூர்: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, திருநெல்வேலியில் நடந்த ஒரு முஸ்லிம்கள் மாநாட்டில், பிரதமர் மோடி, அமித்ஷா 'ஜோலி'யை முடிக்க சொன்ன நெ.கண்ணன், பெரம்பலூரில் தனியார் ஓட்டலில் ஒளிந்திருந்த போது கைது செய்யப்பட்டார்.latest tamil newsதிருநெல்வேலியில் இரு நாட்களுக்கு முன்பாக, குடியுரிமை திருத்த சட்டம் குறித்த பொதுக் கூட்டத்தில் பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசினார். அப்போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் மிரட்டல் தொனியில் பேசினார். பாஜக புகாரின் பேரில், மேலப்பாளையம் போலீசார் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், நெஞ்சு வலி என்று கூறி, மருத்துவமனையில் தஞ்சமடைந்தார். இந்நிலையில், அவரை கைது செய்ய கோரி எதிர்ப்பு வலுத்த நிலையில், பெரம்பலுாரில் உள்ள தனியார் விடுதியில் ஒளிந்திருந்த நெல்லை கண்ணனை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில், டிச.,29ம் தேதி, ஒரு முஸ்லிம்கள் அமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த கூட்டம் நடந்தது. இதில் பேசிய, தமிழ் கடல் எனவும், தமிழ் அறிஞர் எனவும் தன்னை கூறிக்கொள்ளும் நெ.கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஏக வசனத்தில் திட்டியதுடன், 'முஸ்லிம்கள் யாராவது பிரதமர் மோடி, அமித் ஷாவின் ஜோலியை முடிப்பார்கள் என எண்ணினேன்' என சர்ச்சையான கருத்தை பேசினார். இதுகுறித்து போலீஸ் கமிஷனரிடம் பா.ஜ.,மாவட்ட தலைவர் தயாசங்கர் மனு அளித்தார். இதன்படி நெ. கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.


latest tamil news


இந்நிலையில், நெ.கண்ணனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக, ஒரு அமைப்பின் ஆம்புலன்ஸ் மூலம் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பா.ஜ.,வினர் எதிர்ப்பால் மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் அங்கிருந்து மதுரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறிச்சென்றனர். ஆனால் அவர் திருவனந்தபுரம் சென்றதாக கூறப்பட்டது.


latest tamil news
இந்நிலையில், தலைமறைவாக இருந்த நெ.கண்ணன், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் ஓட்டலில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற திருநெல்வேலி போலீசார், நெ.கண்ணனை கைது செய்தனர். திருநெல்வேலிக்கு அவர் அழைத்து செல்லப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்குப்பின், கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsநெ,கண்ணனை கைது செய்ய போலீசார் வந்த தகவலறிந்து அங்கு வந்த முஸ்லிம் அமைப்பினர் கண்ணனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். அங்கு கூடியிருந்த பா.ஜ.,வினரும் எதிர்கோஷம் எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை கண்ணன் மீது ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில் இருந்த மூன்று பிரிவுகளுடன் தற்போது ஜாமின் கிடைக்காமல் இருப்பதற்காக 153 a, 506 1 ஆகிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.மருத்துவ பரிசோதனை


latest tamil news


பெரம்பலூரில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட நெ.கண்ணன் இன்று(ஜன.,2) அதிகாலை 5 மணிக்கு திருநெல்வேலி ஆயுதப்படை வளாகம் கொண்டு வரப்பட்டார்.மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் நிலை சோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்படுவார்.

Advertisement
வாசகர் கருத்து (222)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
07-ஜன-202022:59:15 IST Report Abuse
karutthu இவர் கண்ணதாசன் பற்றி நிறைய பேசுவார் இவரின் தமிழ் பேச்சு நன்றாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும் .ஆனால் ப்ராமண சமுதாயத்தைப்பற்றி மட்டமாக பேசினார் அதிலிருந்து அவர் அவன் என ஆகிவிட்டான் ஆனால் வாய்க்கொழுப்பு அதிகம் அவன் இதை நன்கு உணர்த்த பிறகு மன்னிப்பு கேட்டால் கண்டிஷனோடு விடுவிக்கலாம் அதுவரை இவனை வெளியில் விடவேண்டாம்
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
03-ஜன-202022:45:04 IST Report Abuse
Darmavan 75 வயதில் தெருவில் போகும் மூன்றாம்தர பேச்சை பேசுவது தமிழுக்கு இழுக்கு
Rate this:
Cancel
chenar - paris,பிரான்ஸ்
03-ஜன-202000:44:24 IST Report Abuse
chenar நீங்கள் இந்துக்கள் என்று எம் தமிழர்களை ஏன் சொல்லுகிறீர்கள் என்று தெரியாதா? தமிழர்கள் என்றால் இந்த நாட்டில் உங்களால் குப்பை கொட்ட முடியாதே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X