சென்னை: ராணிப்பேட்டை மாவட்டத்தில், புதிதாக இரண்டு தாலுகாக்கள் உருவாக்க, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம், நெமிலி, வாலாஜா ஆகிய, மூன்று தாலுகாக்களை சீரமைத்து, சோளிங்கரை தலைமையிடமாக வைத்து, சோளிங்கர், பானாவரம், வேலம் ஆகிய, மூன்று குறுவட்டங்களுடன், 49 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய, புதிதாக சோளிங்கர் தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது.புதிய தாலுகாவிற்கு, 40 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதேபோல், ஆற்காடு தாலுகாவை பிரித்து, கலவை, மாம்பாக்கம் ஆகிய, குறு வட்டங்களுடன், 50 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய, கலவை, புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. புதிய தாலுகாவுக்கு, 35 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், 14 பணியிடங்கள், மறுபணியமர்த்தல் வழியாகவும், 21 பணியிடங்கள் புதிதாகவும், நிரப்பப்பட உள்ளன.இதற்கான அரசாணைகளை, வருவாய் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE