பொது செய்தி

தமிழ்நாடு

பட்டாசு தொழிலாளி குரூப் 1 தேர்வில் சாதனை

Updated : ஜன 02, 2020 | Added : ஜன 02, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
சிவகங்கை: குரூப் 1 தேர்வில் சிவகங்கையை சேர்ந்த மாணவி அர்ச்சனா மாநில அளவில் முதலிடம் பிடித்தார். பட்டாசு தொழிலாளி மகாலட்சுமி, 4ம் பிடித்து சாதனை படைத்தார்.தமிழக அரசு துறையில், துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்பட எட்டு வகை பதவிகளில், 181 காலியிடங்களை நிரப்ப, 2019 மார்ச்சில் முதல் நிலை தேர்வு நடந்தது. 2.29 லட்சம் பேர் பங்கேற்ற இந்த தேர்வில், 9,442 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு, பிரதான
group1,exam,result,குரூப்1,தேர்வு,சாதனை

இந்த செய்தியை கேட்க

சிவகங்கை: குரூப் 1 தேர்வில் சிவகங்கையை சேர்ந்த மாணவி அர்ச்சனா மாநில அளவில் முதலிடம் பிடித்தார். பட்டாசு தொழிலாளி மகாலட்சுமி, 4ம் பிடித்து சாதனை படைத்தார்.

தமிழக அரசு துறையில், துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்பட எட்டு வகை பதவிகளில், 181 காலியிடங்களை நிரப்ப, 2019 மார்ச்சில் முதல் நிலை தேர்வு நடந்தது. 2.29 லட்சம் பேர் பங்கேற்ற இந்த தேர்வில், 9,442 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு, பிரதான தேர்வு நடத்தப்பட்டு, 363 பேர் நேர்முக தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, டிச., 23 முதல், 31 வரை நேர்முக தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதில் 850 க்கு 569 மதிப்பெண் எடுத்து சிவகங்கையை சேர்ந்த அர்ச்சனா 30, முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சிவகங்கை செந்தமிழ் நகரைச் சேர்ந்த இவரது தந்தை வணிகவரித்துறை ஓய்வு அலுவலர் உதயகுமார். தாய் ரேணுகாதேவி. அர்ச்சனா கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்துார் கலசலிங்கம் இன்ஜி., கல்லுாரியில் பி.இ., முடித்தேன். 2010ல் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் சென்னை இன்போசிஸ்-ல் சேர்ந்தேன். எனது கணவர் கணேஷ். பெங்களூருவில் பணிபுரிகிறார். ஏழு ஆண்டு பணிபுரிந்த நான், ராஜினாமா செய்துவிட்டு, கடந்த ஒன்றரை ஆண்டாக குரூப் 1 தேர்விற்காக படித்து, தேர்வு எழுதினேன். தினமும் 10 மணி நேரம் படிப்பேன். தேர்வை சந்தித்த முதல் முயற்சியிலேயே மாநில அளவில் முதலிடம் கிடைத்தது மகிழ்ச்சி. துணை கலெக்டர் பதவியை பெற விரும்புகிறேன், என்றார்.


latest tamil news



மாணவி யுரேகா, இரண்டாமிடமும், தற்போது, டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வரும் தனலட்சுமி, மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். 4 வது இடத்தை விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த மகாலட்சுமி 26 பெற்றுள்ளார். இவரது தந்தை கருப்பசாமி, தாய் ராஜேஸ்வரி. இருவரும் பட்டாசு தொழிலாளிகள்.

மகாலட்சுமி கூறுகையில், ''எனது பெற்றோர் 40 ஆண்டுகளாக பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நானும் பட்டாசு தொழிலாளியாக பணியாற்றினேன். அரசு பணியில் சேர்வதை லட்சியமாக கொண்டு வேலை செய்து கொண்டே படித்தேன். மூன்றாவது முறையாக தேர்வு எழுதி மாநில அளவில் 4 ம் பிடித்து வெற்றி பெற்றுள்ளேன். ,' என்றார்.

மாநில அளவில் முதல் எட்டு இடங்களையும், மாணவியரே பெற்றுள்ளனர். மாநில தேர்தல் அதிகாரி பழனிசாமியின் மகன் மித்ரன், 53வது இடத்தை பெற்றுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
02-ஜன-202018:10:58 IST Report Abuse
konanki அடிப்படை கல்வி/ பள்ளி கல்வி யில் புரிந்து படித்தல் (மனப்பாடம் செய்யாமல்) என்பது மேன்மை தரும். தமிழ் நாட்டில் 10 வது/12 வது தேர்வு முடிவுகள் கடந்த 10 வருஷங்கள் எடுத்து பார்க்கும் போது முதல் 10 ரேங்க் மாணவர்கள் பெரும் பான்மை மாவட்டம் /சிறு நகர் பர பள்ளிகளில் இருந்து தான் என்று நீருபணமாகிறது. நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது என்று பொய் பிரச்சாரம் செய்து ஏமாற்றும் கட்சிகள் /அமைப்பு கள் தனியார் மருத்துவ கல்லூரி முதலாளிகளின் கைக் கூலியாக செயல் படுகிறது என்பது தான் கசப்பான உண்மை.
Rate this:
Cancel
02-ஜன-202013:12:32 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் வாழ்த்துக்கள் சகோதரிகளே.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
02-ஜன-202011:23:23 IST Report Abuse
konanki நீட் ,ஸிபிஎஸ்ஈ எல்லாம் கிராம் புற மாணவர்களுக்கு எதிரானது என்று பொய் பிரச்சாரம் செய்யும் ஸ்டாலின் வீரமணி வைக்கோ திரு திருமாவளவன் சீமான் போன்றவர்கள் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக தமிழ் நாட்டை சீரழிக்கிறார்கள் என்பதை நீருபித்த இந்த சகோதரிக்களுக்கு நன்றி. தமிழர்களே சுதாரிங்க பொய் பிரச்சாரத்திலிருந்து விடுபடுங்கள்.
Rate this:
P.Narasimhan - Tirupattur,Vellore Dist,இந்தியா
02-ஜன-202014:15:32 IST Report Abuse
P.Narasimhanநீட் ,ஸிபிஎஸ்ஈ சிலப்பசும் குரூப் 1 சிலப்பசும் ஒண்ணா? குரூப் 1 சிலப்பஸ் மாவட்டத்திற்கு மாவட்டம் வேற்றுமையில்லை. நீட், ஸிபிஎஸ்ஈ சிலப்பஸ் கேள்வி தாளே நாடு முழுமைக்கும் ஒன்றாக இல்லாத கொடுமையும் நடந்தது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X