சட்டசபை தீர்மானம் செல்லாது: கேரள கவர்னர் திட்டவட்டம்

Updated : ஜன 04, 2020 | Added : ஜன 02, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
CAB,NRC,CAA,Kerala,Governor, கேரளா,கவர்னர்,

திருவனந்தபுரம்: ''குடியுரிமை திருத்தச் சட்டத்தால், கேரளாவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அப்படி இருக்கும் எதற்கு அதை பிரச்னையாக்குகின்றனர்,'' என, கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள சட்ட சபையில், சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 'மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சட்டசபைகளுக்கு அதிகாரம் கிடையாது' என, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

இந்தப் பிரச்னை குறித்து, கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளதாவது: குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, மாநில சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம், அரசியல் சாசனம் மற்றும் சட்டங்களின்படி செல்லாது. குடியுரிமை வழங்குவது, மத்திய பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதில், மாநில அரசு களுக்கு எந்த பங்கும் இல்லை. சுதந்திரத்துக்குப் பின் நடந்த பிரிவினையால், தென் மாநிலங்கள் பாதிக்கப்படவில்லை. கேரளாவில், சட்டவிரோத அகதிகள் யாரும் இல்லை. இந்த சட்டத்தால் கேரளாவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அப்படி இருக்கும்போது, எதற்கு அதை ஒரு பிரச்னையாக்குகின்றனர் என்பது புரியவில்லை. இவ்வாறு, அவர் கூறினார். ''தீர்மானம் நிறைவேற்ற சட்டசபைக்கு அதிகாரம் உள்ளது,'' என, காங்கிரசைச் சேர்ந்த, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, கூறினார்.


காங்., நிர்வாகிகள் ராஜினாமா:

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதைக் கண்டித்து, கோவாவில், காங்கிரஸ் கட்சியில் இருந்து நான்கு நிர்வாகிகள் விலகியுள்ளனர்.பனாஜி வட்டாரத் தலைவர் பிரசாத் அமோன்கர், வடக்கு கோவா சிறுபான்மையினர் பிரிவு தலைவர் ஜாவேத் ஷேக் உள்பட நான்கு பேர், தங்களுடைய கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் நாங்களும் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால், உண்மையை புரிந்து கொண்டோம். இந்த சட்டத்தால், யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது. அகதிகளாக வந்துள்ளோருக்கு குடியுரிமை அளிக்கவே, இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஆனால், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே, காங்., இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தங்களுடைய அரசியல் காரணங்களுக்காக, பொய் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபடுகின்றனர். நாட்டில் வன்முறைக்கு வித்திட்டுள்ளனர். அதனால், கட்சியில் இருந்து வெளியேறினோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
03-ஜன-202022:07:14 IST Report Abuse
konanki அடுத்து கம்யூனிச சீனாவில் கொடுமைக்கு உள்ளாகும் யூகிர் முஸ்லிம்களின் உரிமை சுதந்திரம் திரும்ப தர வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளாவில் தீர்மானம் இயற்றலாமே
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
03-ஜன-202022:01:36 IST Report Abuse
konanki அரபு நாடுகளில் இந்திய முஸ்லிம்களை , முஸ்லிம்களாகவே கருதுவது இல்லை. இந்திய முஸ்லிம்கள் " காஃபிர்" என்றே அழைக்கின்றனர். அவர்கள் கிட்டத்தட்ட அடிமை வாழ்வு தான் அங்கே. இது அங்கு வாழும் இந்தியர்கள் நன்கு அறிவர்
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
03-ஜன-202021:56:26 IST Report Abuse
konanki இது சட்ட படி செல்லாது என்று தீர்மானம் போட்டவர்களுக்கும் நன்றாக தெரியும். ஆனால் கேரளத்தின் சிறுபான்மை ஒட்டு சுமார் 30% சதவீதமும் தனக்கு ஓட்டு போட செய்யும் ஒட்டு வங்கி அரசியல். இந்திய தேசத்திற்கு துரோகம் விளைக்கும் செயல்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X