தி.மு.க. வெற்றியை பறிக்க முயற்சி: ஸ்டாலின் புகார்

Updated : ஜன 02, 2020 | Added : ஜன 02, 2020 | கருத்துகள் (51) | |
Advertisement
சென்னை; தி.மு.க. வெற்றியை பறிக்க முயற்சிக்கிறார்கள் என தி.மு.க. தலைவர் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளார்.ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.இதில் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் செய்வதாக ஸ்டாலின் ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் கொடுத்திருந்தார்.முன்னதாக உள்ளாட்சிதேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில்
 இரவில், மாநிலதேர்தல், ஆணையர், அலுவலகம், ஸ்டலின்

சென்னை; தி.மு.க. வெற்றியை பறிக்க முயற்சிக்கிறார்கள் என தி.மு.க. தலைவர் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.இதில் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் செய்வதாக ஸ்டாலின் ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் கொடுத்திருந்தார்.முன்னதாக உள்ளாட்சிதேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. தொடர்ந்த வழக்கில், விதிகளின்படியே ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதாக எழுத்துபூர்வ வாக்குமூலம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.latest tamil newsஇந்த சூழ்நி்லையில் இன்று ( ஜன.02) இரவு 11: 30 மணியளவில் மீண்டும் ஸ்டாலின் சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகம் சென்றார். அவருடன் துரைமுருகன், டி.கே.எஸ்.இளங்கோவன், மா.சுப்ரமணியன், உள்ளிட்டோர் சென்றனர். பின்னர் தேர்தல் ஆணையரை சந்தித்து ஸ்டாலின் ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக புகார் அளித்தார்.பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, பல இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ள நிலையில் அதனை அறிவிக்காமல் இழுத்தடிப்பு செய்தும், நிறுத்தியும் வைத்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையரிடம் முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என அளித்த புகார் மீது எந்த நடவடிக்கை இல்லை. தி.மு.க. வெற்றியை மாற்றி அறிவிக்க முயற்சி நடைபெறுகிறது. மொத்தத்தில் ஜனநாயக படுகொலை நடக்கிறது என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
03-ஜன-202014:37:16 IST Report Abuse
Bhaskaran எப்படி வெற்றி பெற்ற கண்ணப்பனை தோல்வியடைந்தார்னு சொல்லிட்டு செட்டியார் ஜெயிச்சதா உங்க அப்பா அரசு இயந்திரத்தை பயன்படுத்தி அறிவிச்சமாதிரியா
Rate this:
Cancel
பதில் வேண்டும் ஆமா வெற்றிக்கனியை தட்டி பறிக்கிறாங்க... உங்க அப்பா செய்யாததா.. மூலபத்திரம் எங்கே...
Rate this:
Cancel
03-ஜன-202013:27:32 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் ACCIDENTIL வந்தவர் பாவம் இனி எவென் எவென் கேள்வி கேட்பானோ இவரை தேர்வு செய்த சசிக்கே துரோகம் இழைத்தவர் இன்று அது துரத்து கிறதோ எவ்வளவு நம்பிக்கையோடு பொங்கலுக்குக் 1000 என்று நேரிடைய கொடுத்தே மக்கள் இப்படி கவுத்து விட்டார்களே அதுவும் MGR JAYA காலத்தில் கூட பெறாத வெற்றி சுடலைக்கு வாழ்த்துக்கள்
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
03-ஜன-202014:59:59 IST Report Abuse
dandyஇனி என்ன இலவச சாராயம் சுடலை சார்பில் ஓட்டு (செம்மொழி) போடு மக்களுக்கு வீடு தேடிவரும் கை நாட்டுகள் பின்னர் எப்படி ஒட்டு (செம்மொழி ) போடுவார்கள் ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X