சபரிமலைக்கு ஜனாதிபதி வருகை ரத்து| Dinamalar

சபரிமலைக்கு ஜனாதிபதி வருகை ரத்து

Updated : ஜன 03, 2020 | Added : ஜன 03, 2020 | கருத்துகள் (18) | |
சபரிமலை: பாதுகாப்பு காரணங்களால், சபரிமலைக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகை, ரத்து செய்யப்பட்டுள்ளது.சபரிமலைக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த வருவது தொடர்பாக, ஜனாதிபதி மாளிகையில் இருந்து மாநில அரசிடம் சில தகவல்கள் கேட்கப்பட்டது. ஹெலிகாப்டர் இறங்குமிடம், பாதுகாப்பு, பக்தர்கள் கூட்டத்துக்கு மத்தியில்சாத்தியமா என்பது போன்ற தகவல்கள் கேட்கப்பட்டன.இது

சபரிமலை: பாதுகாப்பு காரணங்களால், சபரிமலைக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகை, ரத்து செய்யப்பட்டுள்ளது.




latest tamil news



சபரிமலைக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த வருவது தொடர்பாக, ஜனாதிபதி மாளிகையில் இருந்து மாநில அரசிடம் சில தகவல்கள் கேட்கப்பட்டது. ஹெலிகாப்டர் இறங்குமிடம், பாதுகாப்பு, பக்தர்கள் கூட்டத்துக்கு மத்தியில்சாத்தியமா என்பது போன்ற தகவல்கள் கேட்கப்பட்டன.



இது தொடர்பாக, பத்தனந்திட்டை கலெக்டர் தலைமையில், பல கட்ட ஆலோசனை நடந்தது. ஜனாதிபதி வருகையின் போது, மூன்று ஹெலிகாப்டர்களை தரை இறக்க போதுமான இடம் நிலக்கல்லிலும், பாண்டிதாவளத்திலும் இல்லை. பாண்டித்தாவளத்தில் தண்ணீர் தொட்டி மேல் போடப்பட்டுள்ள கான்கிரீட் மீது ஹெலிகாப்டரை இறக்குவதில், மாநில பொதுப்பணித்துறை சந்தேகம் கிளப்பியது.


latest tamil news



நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு காரில் அழைத்து வருவது, பாதுகாப்பல்ல என்பதில், போலீஸ் உறுதியாக இருந்தது.பின்னர் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், மகரவிளக்கு சீசனில் பக்தர்கள் அதிகமாக வந்து கொண்டிருப்பதால், ஜனாதிபதி வரும் போது பாதுகாப்பு கொடுப்பது சிரமம் என்று, முடிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக, கேரள மாநில அரசின் அறிக்கை, ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் சபரிமலை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X