முடிகிறது நட்சத்திர ஓட்டல் வாசம் : லோக்பால் அலுவலகம் இடம் மாற்றம்

Updated : ஜன 03, 2020 | Added : ஜன 03, 2020 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி,: டில்லியில், நட்சத்திர ஓட்டலில், மாதம், 50 லட்சம் ரூபாய் வாடகையில் இயங்கி வரும், லோக்பால் அமைப்பின் அலுவலகம், விரைவில் சொந்த இடத்திற்கு மாற்றப்படுகிறது. புகார்முன்னாள் பிரதமர் உட்பட, அனைத்து அரசு அதிகாரிகளின் லஞ்ச ஊழல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரமிக்க அமைப்பான, லோக்பால், அசோகா ஓட்டலில், மாதம், 50 லட்சம் ரூபாய் வாடகையில் செயல்பட்டு வருகிறது. இது
முடிகிறது நட்சத்திர ஓட்டல் வாசம் : லோக்பால் அலுவலகம் இடம் மாற்றம்

புதுடில்லி,: டில்லியில், நட்சத்திர ஓட்டலில், மாதம், 50 லட்சம் ரூபாய் வாடகையில் இயங்கி வரும், லோக்பால் அமைப்பின் அலுவலகம், விரைவில் சொந்த இடத்திற்கு மாற்றப்படுகிறது.புகார்


முன்னாள் பிரதமர் உட்பட, அனைத்து அரசு அதிகாரிகளின் லஞ்ச ஊழல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரமிக்க அமைப்பான, லோக்பால், அசோகா ஓட்டலில், மாதம், 50 லட்சம் ரூபாய் வாடகையில் செயல்பட்டு வருகிறது. இது குறித்த தகவல், கடந்த மாதம் வெளியானதை அடுத்து, நட்சத்திர ஓட்டலில் இருந்து விரைவில் அலுவலகம் மாற்றப்படும் என, லோக்பால் அமைப்பு தெரிவித்திருந்தது. இது குறித்து, இந்த அமைப்பின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:அசோகா ஓட்டலில், லோக்பால் அலுவலகம் இயங்க, மாதம் 50 லட்சம் ரூபாய் வீதம், 2019 மார்ச் முதல் அக்டோபர், 31 வரை,

3.85 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. விரைவில், டில்லியில், மத்திய அரசுக்கு சொந்தமான கட்டடத்திற்கு, லோக்பால் அலுவலகம் மாற உள்ளது. லோக்பால் அலுவகத்திற்கு, கடந்த ஆண்டு, செப்டம்பர் வரை, 1,065 புகார்கள் வந்து உள்ளன.


latest tamil news


அவற்றில், ஆயிரம் புகார்கள் விசாரிக்கப்பட்டு, முடிக்கப்பட்டுள்ளன. புகார் அளிக்க சுலபமான நடைமுறையை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. மத்திய சட்ட அமைச்சகத்தின் வழிகாட்டுதலுடன், விரைவில், எளிமையான முறையில் புகார் செய்யும் நடைமுறை அமலுக்கு வரும்.இவ்வாறு, அவர் கூறினார்.


பதவிப் பிரமாணம்


கடந்த, 2019, மார்ச், 23ல் லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, பி.சி.கோஸ் நியமிக்கப்பட்டார். அவருக்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, லோக்பால் அமைப்புக்கு, எட்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். லோக்பால் அமைப்பில், பல்வேறு மாநிலங்களின் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான, திலிப் பி.போஸ்லே, பிரதிப் குமார் மொகந்தி, அபிலாஷா குமாரி, அஜய்குமார் திரிபாதி ஆகியோர் உறுப்பினர்களாக

உள்ளனர். அத்துடன், 'எஸ்.எஸ்.பி.,' அமைப்பின் முதல் பெண் தலைவரான, அர்ச்சனா ராமசுந்தரம், மஹாராஷ்டிர முன்னாள் தலைமை செயலர், தினேஷ் குமார் ஜெயின், மத்திய வருவாய் துறை முன்னாள் அதிகாரி, மகிந்தர் சிங், குஜராத் முன்னாள் ஆட்சிப் பணி அதிகாரி, இந்திரஜித் பிரசாத் கவுதம் ஆகியோரும், உறுப்பினர்களாக, லோக்பால் அமைப்பில் இடம் பெற்றுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai,இந்தியா
03-ஜன-202012:31:48 IST Report Abuse
Raj லோக்பால் வேண்டும் என போராட்டம் செய்த அண்ணா ஹசாரே காங்கிரஸ் ஆட்சியில் மட்டும்தான் போராட்டம் செய்வாரா ? கிரண் பேடி போல பிஜேபி கட்சியில் அவரும் சேர்ந்து விட்டாரா ?
Rate this:
Cancel
Sitaraman Munisamy - SALEM,இந்தியா
03-ஜன-202011:56:49 IST Report Abuse
Sitaraman Munisamy மாதம் 50 லட்ச ரூபாய் வாடகையில் நட்சத்திர சொகுசு ஓட்டலில் தங்கித்தான் விசாரிக்க வேண்டுமா? ஏன் ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்தால் கூட இவளோ வாடகை வராது. இப்படி காசு வருத்தமே கவலையோ இல்லாமல் இருப்பவர்கள் நாட்டுக்கு நல்லது எப்படி செய்வார்கள். ஒரு பெண் அதிகாரி வெளிநாட்டில் 15 லட்ச ரூபாய் வாடகையில் தங்குகிறார். மோடி தன் ஆடையாக பல கோடிகள் செலவு செய்கிறார். இப்படியே போனால் வரிச்சுமை தான் அதிகரிக்கும்.
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
03-ஜன-202010:43:07 IST Report Abuse
Krishna Shame-HowThisAntiCorruptionOrgnEatingPeoplesMoneyVVFatly-CanDoGoodToPeople-Simply Abolish All Govt Posts (& all Pay-Scales) To Save Peoples Money From Being Wasted VV.Heavily And Double Employment Only At Minm Wages (Only One Per Family). Such Saved Money Be Used For Peoples Development & Infrastructures.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X