வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், கே.என். தொட்டியைச் சேர்ந்தவர் ஜெய் சாரதி, 45. அ.தி.மு.க., உறுப்பினர்; கே.என். தொட்டி பஞ்., முன்னாள் தலைவர்; இவரது மகள் ஜெய்சந்தியா ராணி, 21. இம்முறை, கே.என். தொட்டி பஞ்சாயத்து, பெண்கள் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதால், மகள் ஜெய்சந்தியா ராணியை வேட்பாளராக நிறுத்தினார்.
இவர், கர்நாடகா மாநிலம், மாலுார் அருகே உள்ள தனியார் கல்லுாரியில், பி.பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை எதிர்த்து, மூன்று பெண்கள் போட்டியிட்டனர். ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், ஜெய்சந்தியா ராணி, 1,170 ஓட்டுகள் பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனிதாவை விட, 210 ஓட்டுகள் அதிகமாக பெற்று, வெற்றி பெற்றார். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றில், மாணவி ஒருவர், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது, இதுவே முதல் முறை.
