சுருளியாற்றை துார்வாருவது யார்அனைத்து துறையினரும் பாராமுகம்

Added : ஜன 03, 2020
Share
Advertisement

கம்பம், செடி, கொடிகள் ஆக்கிரமித்து மாசடைந்து வரும் சுருளியாற்றை துார்வார நடவடிக்கைஎடுப்பது எந்த துறை என தெரியவில்லை என்று சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.தென்மாவட்டங்களில் பிரசித்திபெற்ற சுற்றுலா தலங்களில் சுருளி அருவிமுக்கிய இடம் பிடிக்கிறது. ஆன்மிக தலமாகவும்விளங்குகிறது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமானவர்கள் இங்கு வருகின்றனர். ஆடி, தை,மகாளய அமாவாசை நாட்களில் அவர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். சுருளியாற்றின் கரையோரத்தில் அமர்ந்து தர்ப்பணம் செய்து,சுருளியாற்றில் குளித்து வந்தால், பித்ருக்கள் சாந்தி பெறுவார்கள் என்பது நம்பிக்கை.ஆனால் சுருளியாறு குளிப்பதற்கு ஏற்ற நிலையில் இல்லை.அருவியில் தண்ணீர் கொட்டினாலும்ஆற்றில் தண்ணீர் வராது.அலட்சியம்செடி, கொடிகள் ஆற்றில் வளர்ந்து தண்ணீர் ஓட்டத்தை தடுக்கும் வகையில் உள்ளது.தர்ப்பணம் செய்த பின் பழைய துணிகள், பாய்கள் உள்ளிட்ட வீசியெறியப்படும் பொருட்கள் ஆற்றை மாசுபடுத்தி வருகிறது. நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் வனத்துறை ,சுருளிப்பட்டி ஊராட்சி நிர்வாகங்கள், இதைப்பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை.ஒட்டுமொத்த அசுத்தத்தின் உருவமாக சுருளியாறு மாறி வருகிறது.வனத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை என எந்த துறை இந்த பணியைசெய்யவேண்டும் எனக்கேட்டால் , ஒவ்வொருவரும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் இது வரவில்லை என்கின்றனர்.எனவே சுருளியாற்றை துார்வாரி சுத்தப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X