சைரஸ் மிஸ்திரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் 'டாடா-' அப்பீல்

Added : ஜன 03, 2020 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: மிகப் பெரிய தொழில் குழுமமான, 'டாடா சன்ஸ்' நிறுவனத்தின் செயல் தலைவராக, சைரஸ் மிஸ்திரியை நியமிக்கும், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.நாட்டின் மிகப் பெரிய தொழில் குழும மான, டாடா சன்ஸ், உப்பில் இருந்து கம்ப்யூட்டர் மென்பொருள் வரை என, பல்வேறு பொருட்கள் உற்பத்தி மற்றும்
சைரஸ் மிஸ்திரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் 'டாடா-' அப்பீல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: மிகப் பெரிய தொழில் குழுமமான, 'டாடா சன்ஸ்' நிறுவனத்தின் செயல் தலைவராக, சைரஸ் மிஸ்திரியை நியமிக்கும், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

நாட்டின் மிகப் பெரிய தொழில் குழும மான, டாடா சன்ஸ், உப்பில் இருந்து கம்ப்யூட்டர் மென்பொருள் வரை என, பல்வேறு பொருட்கள் உற்பத்தி மற்றும் சேவையில்

ஈடுபட்டுள்ளது.latest tamil news


இதன் தலைவராக இருந்த, பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, 2012ல் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.அதையடுத்து, அதன் தலைவராக, மிகப் பெரிய பணக்கார குடும்ப தொழில் நிறுவனமான, 'சபோர்ஜி பலோன்ஜி' குழுமத்தைச் சேர்ந்த, சைரஸ் மிஸ்திரி, 2012, டிசம்பரில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


டாடா சன்ஸ் நிறுவனத்தில், சைரஸ் மிஸ்திரிக்கு, 18 சதவீத பங்கு உள்ளது. டாடா அறக்கட்டளை, டாடா குழும நிறுவனங்கள் மற்றும் ரத்தன் டாடாவுக்கு, 81 சதவீத பங்கு உள்ளது.

இதற்கிடையே, 2016 அக்டோபரில், சைரஸ் மிஸ்திரியை பதவியில் இருந்து நீக்கி, ரத்தன் டாடா நடவடிக்கை எடுத்தார். நிறுவனத்தின்பல்வேறு இயக்குனர்களையும் மாற்றி அமைத்தார்.

டாடா சன்ஸ் தலைவராக, என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். கவுரவத் தலைவராக ரத்தன் டாடா தொடர்ந்தார்.


தன்னை, நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து, சைரஸ் மிஸ்திரி, கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின், மும்பை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.


சமீபத்தில் இந்த வழக்கில், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்தது. அதில், 'சைரஸ் மிஸ்திரியை நீக்கியது செல்லாது. அவரை மீண்டும் தலைவராக நியமிக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது. தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் தீர்ப்பை எதிர்த்து, டாடா சன்ஸ் நிறுவனம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இதற்கிடையே, கடந்தாண்டு, டிச., 18ல் அளித்த தீர்ப்பின்போது, தங்களை விமர்சித்து கூறப்பட்டதை எதிர்த்து, கம்பெனிகள் பதிவாளர் சார்பில், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை, இன்று நடக்கஉள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

GMM - KA,இந்தியா
03-ஜன-202009:36:02 IST Report Abuse
GMM டாடாகுழுமத்தின் பங்கு 4 மடங்கு. அதன் முடிவு இறுதியானது என்று இருக்க வேண்டும். மிஸ்திரி நீக்கம் கூடாது, காரணம் வேண்டும் எனில், உரிய பங்கு தொகையை செலுத்த வேண்டும்.? சட்ட தீர்ப்பாயம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியபின் இழப்பு ஏற்பட்டால் பொறுப்பை ஏற்று கொள்வது பற்றி விவரம் தீர்ப்பில் இருக்க வேண்டும். பெரு நிறுவனம்.உச்ச நீதிமன்றம் விரைவில் முடிவு செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
03-ஜன-202008:44:10 IST Report Abuse
ஆரூர் ரங் சைரஸின் பல்லோன்ஜி குடும்பமே இப்போது கடும் நிதிநெரூக்கடியில் தத்தளிக்கிறது இந்தத் தீர்ப்பின் அடைப்படையில் சைரஸ் மீண்டும் டாட்டா தலைவரானால் ரத்தன் மீண்டும் இயக்குனர் போர்டில் தீர்மானம் போட்டு சைரசை வெளியேற்றுவார் . அது சைரஸுக்குத்தான் அவமானம் .தானே திவாலாகாமல் பார்த்துக்கொள்ளவே சைரஸுக்கு நேரம் சரியாக இருக்கும். சுப்ரீம் கோர்ட்டில் எக்ஸ் பார்ட்டியாக வழக்கை விட்டுக்கொடுப்பது ஒன்றே சைரஸுக்கு இருக்கும் ஒரே நியாயமான வழி
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
03-ஜன-202008:40:39 IST Report Abuse
தாண்டவக்கோன் Supreme Court, in all likelihood, will set aside the judgement delivered by NCLAT. Also, Cyrus did not ask for his reinstatement as utive Chairman of the group (TATA & Sons) in his plea. On a personal note I want the SC to uphold the verdict delivered against TATA Sons
Rate this:
03-ஜன-202018:22:51 IST Report Abuse
chandranTATA supports BJP. Change the judgement . dont spoil your name...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X