பொது செய்தி

தமிழ்நாடு

23 மாவட்டங்களில் ஓட்டு எண்ணிக்கை நிறைவு

Updated : ஜன 03, 2020 | Added : ஜன 03, 2020 | கருத்துகள் (3)
Advertisement
உள்ளாட்சிதேர்தல், ஓட்டுஎண்ணிக்கை,

இந்த செய்தியை கேட்க

சென்னை: தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேற்று (ஜன., 02) ஓட்டு எண்ணிக்கை துவங்கி 29 மணி நேரத்திற்கு மேல் நீடித்து வருகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை, நீலகிரி, திருச்சி கரூர், தேனி, தூத்துக்குடி திருவாரூர், நாமக்கல், குமரி, ஈரோடு, கடலூர், நாமக்கல், கோவை, நாகை, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை உட்பட 23 மாவட்டங்களில் அனைத்து பதவிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நிறைவு பெற்றது. மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





சாலை மறியல்


கரூர், க.பரமத்தி ஓட்டு எண்ணும் மையத்தில் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி, காங்.,எம்.பி., ஜோதிமணி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். க.பரமத்தி 16வது வார்டில் 2 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காங்., வேட்பாளர் லோகநாயகிக்கு பதில் அதிமுக வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினர்.





முடிவு நிறுத்திவைப்பு


நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புரம் நான்காம் சேத்தி ஊராட்சி தலைவர் தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 171ம் ஓட்டுச்சாவடியில் பதிவான 445 ஓட்டுகளை விட 1 ஓட்டு கூடுதலாக இருப்பதாக புகார் வந்ததால், முடிவு நிறுத்திவைக்கப்பட்டது. இதனால், அங்கு மறுஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என தமிழ்செல்வி என்ற வேட்பாளர் வலியுறுத்தியுள்ளார். இங்கு தமிழரசி என்பவர் 85 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.


காங்., வேட்பாளர் சாலை மறியல்

புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கியின் 12வது வார்டில் பதிவான 18 ஓட்டுகளை காணவில்லை என காங்கிரஸ் வேட்பாளர் சாலைமறியலில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக அதிமுகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.




குலுக்கள் முறையில் தேர்வு

நாமக்கல், இலக்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பொன்னம்மாள் என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ராமநாதரபுரம், திருப்புல்லாணி அருகே, மாயாகுளம் ஊராட்சி மன்ற தலைவராக சரண்யா என்பவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்தலில் இரு வேட்பாளர்கள் தலா 664 ஓட்டுகள் பெற்றதால், குலுக்கல் முறையில் தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.

நாமக்கல், கபிலர் மலை அருகே சேமூர் ஊராட்சி மன்ற தலைவராக 21 வயதான ரோகிணி என்ற பெண் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
03-ஜன-202023:04:01 IST Report Abuse
Loganathan Kuttuva எலெக்ட்ரோனிக் வோட்டிங் மெஷின் உபயோகப்படுத்தியிருந்தால் வாக்கு என்னும் நேரம் குறைந்து இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
03-ஜன-202021:37:11 IST Report Abuse
Sampath Kumar இந்திய வுக்கு தேவை ddt ஓரி baykaan எல்லாம் ஏடு படாது
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
03-ஜன-202012:11:43 IST Report Abuse
தாண்டவக்கோன் பூச்சி மருந்து என்ற பேகானை கூட்டிகிட்டு போயி எண்ண விடுங்க..அப்ப தெரியும் ..இந்தியாவுக்கு ஏன் இ வி எம் வேணும்ன்னு..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X