சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

சீன விஞ்ஞானிக்கு 3 ஆண்டு சிறை

Added : ஜன 03, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
இது நடந்தது, 2018 இறுதியில். ஹாங்காங்கில், ஒரு அறிவியல் கருத்தரங்கில் ஹீ ஜியாங்குயி என்ற சீன விஞ்ஞானி, ஒரு ஆய்வறிக்கையை வாசித்தார்.'கிறிஸ்பர்' என்ற தொழில் நுட்பத்தின் மூலம், உலகிலேயே முதல் முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட மனிதக் குழந்தையை ஆய்வகத்தில் தான் உருவாக்கியுள்ளதாக ஜியாங்குயி மார்தட்டிக் கொண்டார்.எச்.ஐ.வி., வைரஸ் தொற்றை எதிர்க்கும் தன்மையை பிறவியிலேயே
சீன விஞ்ஞானிக்கு 3 ஆண்டு சிறை

இது நடந்தது, 2018 இறுதியில். ஹாங்காங்கில், ஒரு அறிவியல் கருத்தரங்கில் ஹீ ஜியாங்குயி என்ற சீன விஞ்ஞானி, ஒரு ஆய்வறிக்கையை வாசித்தார்.

'கிறிஸ்பர்' என்ற தொழில் நுட்பத்தின் மூலம், உலகிலேயே முதல் முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட மனிதக் குழந்தையை ஆய்வகத்தில் தான் உருவாக்கியுள்ளதாக ஜியாங்குயி மார்தட்டிக் கொண்டார்.

எச்.ஐ.வி., வைரஸ் தொற்றை எதிர்க்கும் தன்மையை பிறவியிலேயே கொண்ட மனிதர்களை உருவாக்குவது தான் தன் நோக்கம் என்றார் அவர்.

இது, உலக விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சீன அரசு உடனே இதை கண்டித்தது. பிறகு ஜியாங்குயி, 2019 ஜனவரியில் ஒரு முறை வெளியே தலை காட்டிவிட்டு மாயமானார்.

ஆனால், ஜியாங்குயி மற்றும் அவரது இரண்டு உதவி ஆராய்ச்சியாளர்கள் ரகசிய நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தண்டிக்கப்பட்டதாக சீன அரசு செய்தி நிறுவனமான, 'ஜிங்குவா' அண்மையில் செய்தி வெளியிட்டது.

ஜியாங்குயிக்கு மூன்று ஆண்டுகள்; மற்ற இருவருக்கும் அதை விட குறைந்த ஆண்டுகள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி, சீன மருத்துவ ஆய்வு நெறிகளை மீறி செய்யப்பட்டதாலும், மூவரும் மருத்துவர்கள் அல்ல என்பதாலும் தண்டனை விதித்ததாக சீன நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, உலகின் மூன்றாவது மரபணு திருத்தப்பட்ட குழந்தை பிறந்துள்ளதாகவும் ஒரு உறுதி செய்யப்படாத தகவல், சீன ஊடகங்கள் மூலம் பரவ ஆரம்பித்துள்ளது. சீனாவில் உள்ள மூன்று மரபணு திருத்தப்பட்ட குழந்தைகளின் உடல் நலம் எப்படி உள்ளது என்பது பற்றி, இரும்புத் திரை நாடான சீனாவிலிருந்து இன்னும் வெளிவந்த பாடில்லை.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
06-ஜன-202001:36:38 IST Report Abuse
Nallavan Nallavan கட்டுக்கதையாக இருக்கலாம் ...... கருவிலிருக்கும் குழந்தையையே எடுத்து உண்ணும் பாவிகள் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X